> குருத்து: நிஜமும்! நிழலும்!

May 5, 2009

நிஜமும்! நிழலும்!


சமீபத்தில் மும்பை சென்றிருந்த பொழுது, அங்கு சென்ட்ரல் ஸ்டேசன் அருகே மராத்தா மந்திர் என ஒரு திரையரங்கு.. அங்கு தான் இந்திய திரைவானில் பல ரிக்கார்டுகளை உடைத்து வெற்றிகரமாக "தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே" என்ற படம் 1995ல் வெளிவந்த நாளிலிருந்து 700 வாரங்களைத் தாண்டி, அதாவது 14 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படம், நடிப்பு, பாட்டு, இயக்கம் என 10 வகைகளில் பிலிம்பேர் அவார்டுகளை அள்ளியது. 96 ஆம் ஆண்டில் வெகுஜனங்களை கவர்ந்த படம் என்ற தேசிய விருதும் பெற்றது.

கதை என்ன? சிம்பிள் கதை. லண்டனில் வசிக்கிற ஒரு ஐரோப்பிய சுற்றுலா பயணத்தில் நாயகனும், நாயகியும் சந்திக்கிறார்கள். மோதல். பிறகு, காதலில் விழுகிறார்கள். தன் காதலை நாயகியால் சொல்ல முடியவில்லை. காரணம் தன் சொந்த மண்ணாகிய இந்தியாவை நிறைய நேசிக்கும் அப்பா, அங்கு தன் நண்பனின் பஞ்சாபி பையனை நிச்சயித்துவிடுகிறார்.

பிறகு, நாயகி வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் கல்யாணம் செய்துகொள்வோம் என கதாநாயகனை வற்புறுத்த... நாயகன் மறுக்கிறார். எல்லோருடைய சம்மதத்துடன் நாம் கல்யாணம் முடிப்போம். அதுவரை போராடுவோம் என சொல்லி, இறுதியில் அடிதடி, சோகம், பாசம் என கலவையில், குடும்பத்தின் அனைவருடைய அன்பை ஜெயித்து, குறிப்பாக பிடிவாத அப்பாவின் சம்மதம் வாங்கி திருமணம் முடிக்கிறார். படத்தின் பெயரே கதையின் சாரத்தைச் சொல்லும். வீரமான ஆண்மகன் காதலியின் கைப்பிடிப்பான்.

இந்த படம் வெளியிட்ட இடமெல்லாம், வெள்ளிவிழா. இப்பொழுதும், இந்த படத்தை சொன்னால், காதல் தேவதை கஜோல், அழகு நாயகன் சாருக்கான். என்னே அருமையான படம்! என சிலாகித்து பேசுகிறார்கள். இப்படி இந்த படத்தை தலையில் வைத்துக் கொண்டாடுகிற இந்தியாவில்...

இதே மாதிரி காதல். அதே சீன். காதலி வீட்டை விட்டு வந்துவிடுகிறேன் என சொல்ல... நாயகன் ஆறுதல் சொல்லி, வீட்டுக்கே போய், அப்பாவிடம் பெண் கேட்கிறார். அவர் தன் மகன் மற்றும் உறவினர்களோடு அந்த பையனின் வீட்டிற்கு தேடிப்போய், அந்த பையனை கடப்பாரையாலும், மம்மட்டியாலும் அடித்தே கொன்றுவிடுகிறார்கள். இது கடந்த வாரம் திருச்சியில் நடந்த உண்மை சம்பவம்.

ஏன் இவ்வளவு கொலைவெறி? வர்க்கமும், சாதியும் தான் முக்கிய காரணங்கள். தில்வாலேவில் ஏற்றுக்கொண்டதற்கு காரணம் - காதலன் - லண்டன் ரிட்டர்ன்! திருச்சி நாயகன் - கொத்தனார். தில்வாலேவில்... ஒரே சாதி. திருச்சி நாயகன் - தாழ்த்தப்பட்டவராக இருக்கலாம். ஏன் இருக்கலாம் என சொல்கிறேன் என்றால்.... பிற்படுத்தப்பட்டவராக இருந்தால், இவ்வளவு கொலைவெறி வராது. வீடேறி அடித்தே கொல்லப்பட வேண்டுமென்றால், சாதிதான் பிரதான காரணமாக இருக்கமுடியும்.

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

பால்வெளி said...

அந்த படம் இன்னுமா ஓடிக் கொண்டிருக்கிறது?.. நினைக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.. மற்ற படி.. நிஜம் முகத்தில் அறைகிறது..
தொடர்ந்து இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்...

குருத்து said...

இன்னுமா? என்கிற கேள்விக்கு சில தகவல்கள் இருக்கின்றன.

அன்றைக்கு சனிக்கிழமை. அறையை காலி செய்துவிட்டு, பொட்டியை ரயில்வே பாதுகாப்பு அறையில் தள்ளிவிட்டுப் பார்த்தால், நேரம் நிறைய இருந்தது. அருகில் இருந்த இந்த திரையரங்குப் போய் படம் பார்க்கலாம் என போனேன்.

'தில்வாலே' படம் நான்கு காட்சிகளாக ஒடவில்லை. ஒன்று, அல்லது இரண்டு வருடத்திற்கு பிறகு, காலைக் காட்சிகளாக தான் ஓட வாய்ப்பிருக்கிறது.

நான் போயிருந்த பொழுது, காலை காட்சியாக "தில்வாலே"! மற்ற காட்சிகள் இந்தி கஜினி ஓடிக்கொண்டிருந்தது.

காதலர்கள் தான் படத்தை ஓட வைப்பார்கள் என நினைத்தால்.. ஒரு ஜோடியையும் காணவில்லை. பெரும்பாலும் இளைஞர்கள். இரண்டு, மூன்று குடும்பங்களைப் பார்க்க முடிந்தது. தொடக்கத்தில் கூட்டம் குறைவாக இருந்தது. இடைவேளைக்கு கவனித்தால், அரங்கு நிரம்பியிருந்தது.

இவ்வளவு நாள் ஓடுவதற்கு இன்னுமொரு காரணம் - மூன்று காட்சிகளாக ஓடும் படத்திற்கு முதல்தர வகுப்பு டிக்கெட் ரூ. 50. பால்கனிக்கு ரூ. 75. தில்வாலேவிற்கு முதல்தர டிக்கெட் ரூ. 16. பால்கனிக்கு ரூ. 20 என வசூலிக்கிறார்கள்.

அரசிடம் வரிவிலக்கு பெற்று ஓட்டுகிறார்களா? அல்லது திரையரங்கு தனது வருமானத்தை குறைத்துக்கொள்கிறதா? என்பதெல்லாம் தெரியவில்லை.

Anonymous said...

டேய் போதும்டா உங்க இந்திபுராணம், ஆமான்டா தமிழ் நாட்ல நடக்கிற ஒரு சம்பவத்திற்கு ஒரு இந்திபடம் உதாரணமாடா.
ஆமா தமிழகத்தில சில இந்தி படங்கள் எப்படி பாப்புலர் ஆகுதுனு எண்ணியதுண்டு, இப்ப புரியுது உங்கலமாதிரி சில பேமாரிங்கதானு(நிங்க என்ன இந்திகாரன்களுக்கு எடுப்பா இல்ல சொம்பு புடிப்பவன்களா)
தமிழ்ல காலத்தை வென்ற வெற்றிபடம் பல வந்திருக்கு அதை என்றைக்காவது அந்த வடநாட்டவர்கள் அலசியது உண்டா
சொல்லியாச்சுனா போச்சு உடனே குறுகிய வட்டத்தில இருக்க வெளிய வரமுயற்ச்சி செய்னு சொல்லவேண்டியது, எதோ டெக்னாலஜ்ல நம்மலவிட கொஞ்சம் பெருசா ஆங்கில படம் இருக்கு அதிலும் நாம் இன்று வளர்ந்து வருகிறோம், நாம் எந்த விதத்திலும் எந்த மொழி படத்திருக்கும் குறைந்தவர்கள் அல்ல

குருத்து said...

அனானியாக வந்தால், கட்டுப்பாடு இழந்து கோபம் கொப்பளிக்க பேசுகிறார்கள். பெயர் சொன்னால், ஏன் இந்த கோபம் பலருக்கு வர மாட்டென் என்கிறது என்பது புரியாத விசயம்.

மேலே எதற்காக இவ்வளவு கோபபட்டிருக்கிறார் என்பது புரியவில்லை. குழப்பமாக இருக்கிறது.