July 15, 2013

சாப்பாடு இல்லை! வரவேண்டிய கோபம் சுத்தமாக வரவில்லை!

நண்பணின் நண்பன் திருமணம். இருவரும் மாஸ்டர் டிகிரி முடித்தவர்கள். மாப்பிளை களையாக, கருப்பு நிறத்தில் இருந்தார். மணப்பெண்ணோ தேவயானி கலரில் இருந்தார். (நடிகையை சொல்கிறேன் என கோவித்துக்கொள்ளக்கூடாது. உங்களுக்கு எனக்கும் தெரிந்தவரை தானே சொல்லமுடியும்) மணமக்கள் மேடையில் உற்சாகமாய் இருந்தார்கள். கைகுலுக்கி, வாழ்த்துக்களைப் பெற‌, புகைப்படம் எடுக்க என பயங்கர பிசியாய் இருந்தார்கள். இறுதியில் புகைப்படம் எடுக்க மேடையேறிய மணமக்களின் பெற்றோர் முகத்தில் அத்தனை உற்சாகமில்லை. உறவினர்கள் கூட்டம் அலைமோதியது.

மக்கள் கூட்டத்தை பார்த்து, சுதாரித்து, பந்திக்கு முந்திவிடலாம் என போனால், மக்கள் முந்தவே விடவில்லை. நமக்கு அவ்வளவு திறமை பத்தாது! இறுதியில் இடம் கிடைத்து, கொஞ்சூண்டு சாம்பார் சோறும், ரசம் சோறும் தான் கிடைத்தது. "400 பேருக்கு ஆர்டர் கொடுத்து, 500 பேர் வரை நன்றாக சாப்பிட்டார்கள். அதுக்கு மேலேயும் 100 பேர் வந்தால், நாங்கள் எப்படித்தான் சமாளிப்பது?" என அலுத்துக்கொண்டார் சப்ளை செய்பவர்.

வழக்கமாய் சாப்பாடு இல்லையெனில் வரும் கோபம், நேற்று வரவில்லை. காரணம் இது ஒரு காதல் திருமணம்.

2 comments:

  1. சாப்பாடு கிடைக்கவில்லை எனில் ஒரு வருத்தம் இருக்கவே செய்யும், ஆனால் சமயத்தில் அவை இல்லாதும் போகும், காதல் மணங்களை வரவேற்போமாக.. சாப்பாடு எல்லாம் ஒரு விடயமே இல்லை.. உங்கள் எண்ணத்தை நானும் வழிமொழிகின்றேன். !

    ReplyDelete
  2. திருமணம் போன்ற வைபவங்களில் முந்திகொண்டு பந்தியில் இடம் பிடிப்பதே ஒரு கலைதான். அது அனுபவசாலிகளுக்குத்தான் வரும். Muscle power என்பார்களே அதுதான் இதற்கு மூலதனம்.

    இது இல்லாதவங்க...

    சாப்பிடுன்னு சொன்னதே போறும்யான்னு வந்துறவேண்டியதுதான் :)

    ReplyDelete