tag:blogger.com,1999:blog-562771753916165146.post301688255983419841..comments2024-03-07T00:24:17.753-08:00Comments on குருத்து: மதுரவாயல்: புமாஇமு தோழர்கள் மீது போலீசார் கொலைவெறி தாக்குதல்!குருத்துhttp://www.blogger.com/profile/02889633871868844043noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-562771753916165146.post-75921294678478642622012-09-20T04:31:07.654-07:002012-09-20T04:31:07.654-07:00- மறுக்கப்பட்ட நீதி -
பேருந்து வசதி கேட்ட மாணவர்கள...- மறுக்கப்பட்ட நீதி -
பேருந்து வசதி கேட்ட மாணவர்களை சிறையில் அடைத்த அரசாங்கம்.

காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமிழி ஊராட்சியில், ஒத்திவாக்கம், அம்மணம்பாக்கம், மேட்டுப்பாளையம், அஸ்தினாபுரம் மற்றும் எடப்பாளையம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில், 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களின் வசதிக்காக, தாம்பரம் பணிமனையில் இருந்து, தடம் எண் 60.கே என்ற அரசு பேருந்து குமிழி வரை இயக்கப்படுகிறது. இப்பேருந்து, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி, காட்டூர், அருங்கால் மற்றும் கீரப்பாக்கம் வழியாக குமிழி செல்லும். இந்த பேருந்தினை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தினசரி ஆறு சர்வீஸ் இயக்கப்பட்டு வந்த இப்பேருந்து, சாலை பழுது காரணமாக கடந்த சில மாதங்களாக, இரண்டு சர்வீஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், குமிழி மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து, உயர்நிலை பள்ளிக்காக கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் செல்லும் நுõற்றுக்கணக்கான மாணவர்கள், தாம்பரம் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

எனவே, இப்பேருந்தினை வழக்கம் போல், தினசரி ஆறு சர்வீஸ் இயக்க வேண்டும் என கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்தனர். ஆனால், இரண்டு சர்வீஸ் மட்டுமே இயக்கப்பட்டு வந்ததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நுõற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு, குமிழி சென்ற பேருந்தினை சிறை பிடித்து, ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகளின் ஆனவம்:

நாளை முதல் பேருந்தினை சரிவர இயக்குவதாக கூறிவிட்டுச் சென்ற போக்குவத்து அதிகாரிகள், மறுநாள் அப்பகுதிக்கு, பேருந்து சேவையிவை முற்றிலுமாக நிறுத்தனர். இதனால், ஆத்தரமடைந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கடந்த இரண்டு தினங்களுக்கு முன், தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு முறையிட்டனர்.
ஆனாலும், நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் துவங்கப்படவில்லை. கடும் அவதிக்குள்ளாகிப் போன குமிழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று அப்பகுதியில் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மறுக்கப்பட்ட நீதி:

தகவலறிந்து, அங்கு வந்த திருப்போரூர் காவல்துறையினர் உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு கூறினர். ஆனால், தங்களது கிராமத்திற்கு பேருந்தினை இயக்க அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுவதாக மாணவர்கள் கூறினர். இதனை பெருங்குற்றமாக கருதிய காவல்துறையினர் மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கிராமத்திற்கு சாலை வசதி செய்து தராதது, சாலை சரியில்லை என பேருந்து சேவையினை நிறுத்தியது, தங்களது கிராம குறைகளை சரிசெய்ய கூறியும் தொடர்ந்து கண்டு கொள்ளாமல் இருந்தது, என அனைத்து தவறுகளையும் அரசு அதிகாரிகள் செய்து விட்டு, உரிமைக்காக போராடிய மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்திருப்பது கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.kumizhinoreply@blogger.com