வேலம்மாள் மாணவன் பலி - அறியாத செய்தி!
இரண்டு
நாள்களுக்கு முன்பு, ஒரு பள்ளி மாணவன் வேனிலிருந்து தலையை நீட்டியதால்
வேறு ஒரு வேன் மோதி பலி என் அனைத்து செய்திதாள்களிலும் வெளியானது.
அந்த மாணவன் திருவள்ளூர் மாவட்டத்தில் மதனேஞ்சரி (கரடிபுத்தூர் - ஊத்துக்கோட்டை அருகே) ஊரைச்
சேர்ந்தவர். மூன்றாவது வகுப்பு வரை அருகாமை பள்ளியில் படித்த மாணவன்
திவாகரை, பள்ளி சரியாக சொல்லித்தரவில்லை, பையன் சரியாக படிக்கவில்லை என இந்த ஆண்டு பொன்னேரி,
பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.
வீட்டுக்கும் பள்ளிக்கும் உள்ள தூரம் 55 கிமீ தூரத்துக்கும் மேல்!
அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து, கிளம்பி பள்ளிக்கு செல்கிறவன், இரவு 7.30
மணிக்கு வீடு வந்து சேர்ந்திருக்கிறான். பயணம் தரும் அசதியில் வேனில் தூங்கி கொண்டு தான்
திவாகர் பயணம் செய்திருக்கிறான். உடன் பயணித்த மாணவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இப்படி தூங்கி கொண்டே சென்றது தான் இப்பொழுது திவாகரின்
உயிரை பறித்திருக்கிறது!
மாணவன் எங்கிருந்து வந்தால் என்ன, எனக்கு
காசு தான் முக்கியம் என்று தான் வேலம்மாள் பள்ளி நினைத்திருக்கிறது. அதே
போல பள்ளி வாகனத்தை அனுப்புகிறேன் என சொல்லி, காசு வாங்கி, ஒரு தனியார்
டெம்போ வேனை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
இப்பொழுது மாணவன்
திவாகர் இறந்துவிட்டான். பெற்றோர் தரப்பில் இருவர் போய் நீதி கேட்க போனதற்கு, பள்ளியின் உள்ளேயே அனுமதிக்கவில்லையாம். ஒரு லாரி நிறைய மக்களை திரட்டி, பள்ளியை முற்றுகையிட்ட பிறகு, விசயம் பெரிதாக ஆகிறது என புரிந்துகொண்டு, வேலம்மாள் நிர்வாகம் இரண்டாவது குழந்தைக்கு இலவச கல்வியும், இறந்ததற்காக ஒரு
தொகையும் பேசி பிரச்சனையை அமுக்கிவிட்டது. இது ஒரு பச்சை படுகொலை
என சொல்லலாம். இன்னும் எத்தனை குழந்தைகளை இந்த மோசமான சூழ்நிலை காவு
வாங்கும் என தெரியவில்லை.
இது குறித்து தெரிந்தவர்களிடம் விவாதிக்கும் பொழுது, இவ்வளவு தூரம் படிக்க அனுப்பிய பெற்றோர்கள் மீது பிரதானமாக குறை சொல்கிறார்கள். மாணவனின் குடும்பம் விவசாய குடும்பம். மீதி நேரம் ஒரு பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
பெற்றோர்களின் உலகம் ரெம்ப சிறியது. அவர்களின் படிப்பறிவு மிக குறைவு. தம் பிள்ளைகள் சிரமபட்டாவது படிக்கவெண்டும் என நினைப்பார்கள். வேலம்மாள் பள்ளி என்பது ஒரு சென்னையிலும், தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களில் நிறைய கல்வி நிறுவனங்கள் நடத்துகிற நிறுவனம். ஒரு மாணவன் 50 கிமீக்கு மேல் பயணம் செய்வது சரியா? அவன் எப்படி வந்து படிப்பான்? என்ற அடிப்படை அறிவு கூடவா இருக்காது. இவர்கள் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுத்து மாணவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள போவதை நினைக்கையில் பயமாய் இருக்கிறது.
அருகாமை பள்ளி, தரமான பள்ளி, அரசு இலவச
கல்வி வேண்டும் என்ற புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி வைத்த கோரிக்கைகள்
தான் நினைவுக்கு வருகின்றன.
தொடர்புடைய சுட்டி :
இந்த பெரிய பள்ளிகள் மோகம், நம் மக்களிடம் எப்போ குறையுமோ?
ReplyDeleteஅந்த மாணவன் பாவம்! பிள்ளையே இறந்த பின் அடுத்த பிள்ளைகளின் இலவச கல்விக்கும், பெரிய தொகைக்கும் ஆசைப்பட்ட பெற்றோரை என்ன சொல்வது?!
ReplyDeleteஒன்று தெரிகிறது..இந்த நாடு இப்படி இருப்பதற்கு காரணம் ஊழல் அரசியல்வாதிகளோ, அவர்களால் நடத்தப்படுகிற கையாலாகாத அரசாங்கமோ இல்லை...வாழவெ தெரியாத பணவெறி, கௌரவ வெறி பிடித்து அலையும் இந்த மக்கள்தான்...ஒரு சின்ன குருத்தை 55 கிமீ தினமும் படிப்புக்காக பயணம் செய்யவைத்த கேடுகேட்டவங்கள் இருக்கும்வரை 'வேலம்மாள்'-கள் இருப்பான்கள் ..
ReplyDeleteஅயோக்கியன் இவன்தான்.இவன் வாழ்க்கையில் கிழிக்க முடியாததை சந்ததிகள் மூலமாக கிழித்து விட வேண்டும் என அவர்களை சித்திரவதை செய்பவன்...
இது குறித்து தெரிந்தவர்களிடம் விவாதிக்கும் பொழுது, இவ்வளவு தூரம் படிக்க அனுப்பிய பெற்றோர்கள் மீது பிரதானமாக குறை சொல்கிறார்கள். மாணவனின் குடும்பம் விவசாய குடும்பம். மீதி நேரம் ஒரு பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகிறார்கள்.
ReplyDeleteபெற்றோர்களின் உலகம் ரெம்ப சிறியது. அவர்களின் படிப்பறிவு மிக குறைவு. தம் பிள்ளைகள் சிரமபட்டாவது படிக்கவெண்டும் என நினைப்பார்கள். வேலம்மாள் பள்ளி என்பது ஒரு சென்னையிலும், தமிழகத்தின் இன்னும் சில மாவட்டங்களில் நிறைய கல்வி நிறுவனங்கள் நடத்துகிற நிறுவனம். ஒரு மாணவன் 50 கிமீக்கு மேல் பயணம் செய்வது சரியா? அவன் எப்படி வந்து படிப்பான்? என்ற அடிப்படை அறிவு கூடவா இருக்காது. இவர்கள் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்வி சொல்லிக்கொடுத்து மாணவர்கள் வாழ்க்கையை எதிர்கொள்ள போவதை நினைக்கையில் பயமாய் இருக்கிறது.