August 26, 2013

'பொன்னாடையாக' போர்த்துகிறோம்!

அந்த முக்கிய சாலையில் சி.பி.எம் பொதுக்கூட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. நின்று கவனித்தேன். சிலருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, கைத்தறித் துண்டை பொன்னாடையாக போர்த்தினார்கள்.

அந்த பகுதி தமிழ்நாட்டில் கைத்தறித் துண்டை அதிகமாய் நெசவு செய்யும் ஒரு முக்கிய பகுதி.  நானும் ஒரு கைநெசவு தொழிலாளியின்(அம்மா) மகன் தான். 

ஒரு துண்டு சீட்டில்...

"கைத்தறித் துண்டால் துவட்டலாம்.  விரித்து படுக்கலாம்; போர்த்தலாம். பொன்னாடை எதற்கும் பயன்படாது.  பெட்டியில் வைத்து மட்டும் பூட்டலாம். ஏன் இந்த வார்த்தை பகட்டு?" என அவர்களிடம் எழுதி தந்தேன்.

பலன் உடனே இருந்தது.  பிறகு, கைத்தறித்துண்டை, கைத்தறித்துண்டாகவே போர்த்தினார்கள்.

நேற்றும் ஒரு கூட்டத்தில் 'பொன்னாடை' போர்த்தி, இந்த நிகழ்வை நினைவுப்படுத்தினார்கள்.

1 comment:

  1. சில வார்த்தைகள் அதற்கான அர்த்தத்தில் இல்லாமல்
    நம் வாழ்வுடன் ஒன்றாகக் கலந்துவிட்டன
    அவைபோல் இதுவும் ஒன்று
    உங்களைப் போல பலரும் அந்த அந்த இடங்களில்
    கொஞ்சம் ஞாபகப்படுத்தினால் மாறக்கூடும் என
    நினைக்கிறேன்

    ReplyDelete