March 17, 2020

கனவுகள்

"எப்பொழுதும் கனவுகள் வருவதுண்டு. கடந்த ஒரு வார காலமாக கனவுகள் சீரியசாக இருக்கின்றன. இரவு முழுவதும் கனவுகள் வருகின்றன. காலையில் எழும் பொழுது, இரவு முழுவதும் கண் விழித்து படம் பார்த்த மாதிரி மிக சோர்வாக இருக்கிறது." என்றேன்.

"எப்படிப்பட்ட கனவுகள் வருகின்றன?" என்றார் மருத்துவர்.

"நார்மலான கனவுகள் தான்! பழகிய ஆட்கள் தான் வருகிறார்கள். அதிகாரத்திற்கான சண்டையாக இருக்கிறது. நான் ஒருபோதும் சீரியல்கள் பார்ப்பதேயில்லை. பிக்பாஸ் பார்ப்பதேயில்லை!" என்றேன் சிரித்துக்கொண்டே!

"சரி செய்துடலாம்!" என மருந்து எழுதினார் மருத்துவர்.

"ஏன் இப்படி கனவுகள் வருகின்றன?" என்றேன்.

"மன அழுத்தம் தான் காரணம். ஒருவகையில் கனவுகள் வருவது நல்லது. இல்லையெனில் பைத்தியம் பிடித்துவிடும்" என்றார்.

ஆகையால், கனவுகள் நல்ல‌து!

No comments:

Post a Comment