தினமும் பத்து பதினைந்து பக்கம் மட்டுமே படிப்பவர்கள் இருக்கிறார். ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்காதவர்கள் இருக்கிறார்கள். சிலரோ தினமும் கொஞ்சம் எனச் சீராகப் படிப்பார்கள். சிலர் ஒரே நேரத்தில் மூன்று நான்கு புத்தகங்களைப் படிக்கக் கூடியவர்கள். சிலருக்குப் புத்தகத்தைப் படிக்கும் போது எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வேறு சிலரோ இரவில் மட்டும் தான் புத்தகம் படிப்பார்கள். சிலரால் நூலக வாசலில் நின்றபடியே சில பக்கங்களையாவது புரட்டிப் படிக்காமல் போக முடியாது. ஒரு சிலருக்குப் படிப்பதற்குத் தோதான இடம் வேண்டும். படுக்கையில் படுத்தபடியே தான் படிக்க முடியும். இப்படி நூறு வகைக்கும் மேலிருக்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று சொல்லமுடியாது. அவரவர் விருப்பமே முடிவானது.
//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
February 18, 2021
படிப்பவர்களில் நிறைய ரகமிருக்கிறார்கள்!
தினமும் பத்து பதினைந்து பக்கம் மட்டுமே படிப்பவர்கள் இருக்கிறார். ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் முடிக்காமல் கீழே வைக்காதவர்கள் இருக்கிறார்கள். சிலரோ தினமும் கொஞ்சம் எனச் சீராகப் படிப்பார்கள். சிலர் ஒரே நேரத்தில் மூன்று நான்கு புத்தகங்களைப் படிக்கக் கூடியவர்கள். சிலருக்குப் புத்தகத்தைப் படிக்கும் போது எதையாவது கொறித்துக் கொண்டேயிருக்க வேண்டும். வேறு சிலரோ இரவில் மட்டும் தான் புத்தகம் படிப்பார்கள். சிலரால் நூலக வாசலில் நின்றபடியே சில பக்கங்களையாவது புரட்டிப் படிக்காமல் போக முடியாது. ஒரு சிலருக்குப் படிப்பதற்குத் தோதான இடம் வேண்டும். படுக்கையில் படுத்தபடியே தான் படிக்க முடியும். இப்படி நூறு வகைக்கும் மேலிருக்கிறார்கள். இதில் எது சரி எது தவறு என்று சொல்லமுடியாது. அவரவர் விருப்பமே முடிவானது.

No comments:
Post a Comment