> குருத்து: Technology Learning
Showing posts with label Technology Learning. Show all posts
Showing posts with label Technology Learning. Show all posts

August 13, 2026

இரவில் தூக்கம் வரவில்லையா?


குழுவில் சிலர் இரவு நேரத்தில் தூக்கம் வராமல், செல்போனை எடுத்துக்கொண்டு சமூக வலைத்தளங்களில் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள்.


உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ்!


செல்போனின் நிறத்தை Colour-ல் இருந்து Grayscale-க்கு மாற்றிப் பாருங்கள்.


கிட்டத்தட்ட எல்லா Android மொபைல்களிலும் இந்த வசதி இருக்கிறது.


அவ்வளவுதான்...


இதற்குப் பிறகு Facebook, Instagram எல்லாமே கருப்பும் வெள்ளையுமாக தெரியும்.


அதைப் பார்க்கவே மனசு சொல்லும்...


“சரி... போதும்! நாளைக்கு பார்த்துக்கலாம்!” 😄


வண்ணத்தை எடுத்துவிட்டால், பாதி ஆர்வமும் போய்விடும்!


இரவில் தூக்கத்தைத் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சின்ன முயற்சி. 🙂


- இரா. முனியசாமி


#தொழில்நுட்பம்_கற்போம்

July 21, 2026

இன்றைய கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 100 வரை கலந்துகொண்டார்கள்.

 


45 நிமிடங்களில் கூட்டம் என்பது எதைச் சொல்வது? எதை விடுவது? என்பதே சவாலாக இருக்கிறது.


இருப்பினும் துவக்க நிலையில் உள்ளவர்களை மனதில் வைத்து எடுத்தேன்.    இரண்டு விசயங்களில் Demo யும் காட்ட முடிந்தது.  


ஆகையால் நமது குழுவில் கலந்துகொண்டவர்கள் யாராவது பேசியது குறித்து கருத்து சொன்னால் நல்லது.


இதைக் கூட்ட ஏற்பாட்டாளர் திரு. இராஜசேகரன் அவர்களிடம் கேட்டால்,  குறைவான நேரத்தில் வகுப்பாக எடுக்கமுடியாது தான்.  ஆனால் ஒரு Spark தருகிறோம் என்கிறார்.


இன்றைய கூட்டத்தின் பிபிடியை பகிர்கிறேன்.  


ஏதேனும் சந்தேகம் இருந்தால் அழையுங்கள்.


நன்றி.


- இரா. முனியசாமி


****

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சில கருத்துகள். அவர்களுக்கு நன்றி.







தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?


இன்றைய கூட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்த பொழுது, அதை எப்படி என தெரிந்துகொள்ள ஒருவர் கேட்டார். அவருக்காக சொன்ன பதிலை இங்கு பகிர்கிறேன்.

 

இணையத்தில், NHM writer என தேடினால், 1 MB என்கிற அளவில் கிடைக்கும். அதை உங்கள் Windows மூலம் இயங்கும் உங்கள் கணிப்பொறியில்  தரவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்.

 

அந்த சின்ன மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது தமிழ் மொழியை தேர்வு செய்யுங்கள். (அதில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நிறைய இருக்கும். தேவையெனில் அதிலும் எழுதலாம்.) 

 

ஒருவேளை உங்கள் சிஸ்டத்தில் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் கணிப்பொறி தன்னுடைய பாதுகாப்புக்காக புதிய மென்பொருள் எதையும் கணிப்பொறியில் அனுமதிக்காமல் தடுக்கும். அதை சரி செய்தால் தான், இந்த மென்பொருள் வேலை செய்யும்.

 

Alt + 2 press செய்தால் தமிழ் மொழியில் தட்டச்சு செய்யலாம்.  மீண்டும் Alt + 2 press செய்தால்  பழைய நிலைமைக்கே ஆங்கிலத்தில் மாறும்.

 

முயற்சி செய்யுங்கள்.

 

நன்றி.

 

-         இரா. முனியசாமி

 

குறிப்பு : NHM மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை காணொளியில் விளக்குகிறார். கவனியுங்கள்.

 

https://www.youtube.com/watch?v=6OlWMK8Tsqc

 

February 22, 2026

be politically consciousness always - Picture by chat gpt




நானே தான் 

Prompt: 


High-contrast black and white ink illustration portrait of me with exact same facial and physical identity from the uploaded image in the style of a gritty action movie poster, extreme close-up half-face composition (only right half of the face visible), intense serious expression, detailed cross-hatching and stippling technique, hand-drawn pen and ink engraving style, dramatic shadows, strong texture lines on skin, sharp jawline Off-white textured paper background with ink splatter effects. Bold cinematic typography on the left side reading “Be politically conscious always” in large middle case black letters, minimalist layout. Ultra-detailed linework, vintage engraving aesthetic, poster design, high resolution, dramatic lighting. Replace the face with the uploaded photo while keeping realistic facial structure and transforming it into detailed ink cross-hatching illustration.

January 31, 2026

யூடியூப் விளம்பரம் தொல்லைகளில் இருந்து விடுதலை

 


வணக்கம்.  நமது நேரம் எப்பொழுதும் மதிப்புமிக்கது.  யூடியூப்பில் தொழில் நிமித்தமோ, தனிப்பட்ட முறையிலோ ஏதாவது காணொளி பார்க்கும் பொழுது, யூடியூப் விளம்பரங்கள் நிறைய வந்து நமது நேரத்தை வெட்டியாய் செலவு செய்ய வைக்கிறது.

 

”Youtube, Spotify உள்பட எல்லா இணையத்தளங்களிலும் விளம்பரத் தொல்லை இல்லாமல், காசு கட்டாமல் பயன்படுத்த வேண்டுமா? Brave browser  https://brave.com/ பயன்படுத்துங்கள். இது நம்பகமான உலாவி. நான் கடந்த பல ஆண்டுகளாகப் பயன்படுத்துகிறேன்.”

 

-         -  இரவிசங்கர் அய்யாக்கண்ணு

 

என பேஸ்புக்கில் ஒருவர் இந்த உலாவியைப் பற்றி எழுதியிருந்தார். நான் இரண்டு நாட்களாக இந்த உலாவியை  என் கணிப்பொறியில் நிறுவி பயன்படுத்தினேன். நன்றாகவே வேலை செய்கிறது.  உங்களுடைய நேரமும் நிறைய மிச்சப்படும்.

 

நன்றி.

 

-          இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 

தொழில்_நுட்பம்_கற்போம்_18

January 9, 2026

Chat Gpt - personalization settings- அவசியம்


Chat GPT யை நம்மில் பலரும் பயன்படுத்துகிறோம்.  எவ்வளவுக்கெவ்வளவு அதனை தினந்தோறும் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு அதனை நாம் நன்கு புரிந்துகொள்ள முடியும்.  சமீபத்தில் ஒரு AI வகுப்பில், அதன் ஆசிரியர் வலியுறுத்தினார்.

 

தொடர்ந்த பயன்படுத்தும் பொழுது, சாட் ஜிபிடி நாம் எதைப் பற்றி விவாதிக்கிறோம், எந்த வடிவத்தில் எதிர்பார்க்கிறோம் என்பதை அது புரிந்துகொள்கிறது.  

 

”சிலவற்றை நினைவில் வைத்துக்கொள்” என சொன்னால் அது நினைவில் வைத்துக்கொண்டு வினையாற்றுகிறது.

 

அதனுடைய அமைப்பு முறையில் (settings) Personalization பகுதியில் நமக்கு என்ன தேவையோ, அதற்கு ஏற்றாற் போல நாம் பதிவு செய்தால், அதை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற் போல் தருகிறது.

 

AI வகுப்பு ஆசிரியர் ஒரு வரி ஆலோசகர் தன்னுடை சாட் ஜிபிடியில் இப்படி வைத்துக்கொள்ளலாம் என ஆலோசனை கூறினார்.

 

”you are an expert who double check things. you are skeptical and you do search. i am not always right. neither are you, but we both strive for accuracy”

 

என்னுடைய தனிப்பட்ட (Personal) சாட் ஜிபிடியில் இப்படி வைத்துள்ளேன்.

 

”நான் வரி ஆலோசகர் என்பதால், GST, வருமானவரி, ESI, PF போன்ற துறைகளில் நடைமுறை சார்ந்த, சட்ட ரீதியாகத் தெளிவான விளக்கங்கள் தேவை. Assumptions தவிர்க்கவேண்டும்.  ஒன்றுக்கு இரண்டு முறை அல்ல, மூன்று முறை சோதித்து தரவுகளை தரவேண்டும்.

 

தமிழில் மட்டுமே (அதிகபட்சமாகத் தூய, சீரான தமிழ்) பதில்களை விரும்புகிறேன். தேவையற்ற ஆங்கில கலப்பை தவிர்க்க வேண்டும்.

 

கட்டுரையில் ஒருமை பயன்படுத்தக் கூடாது. பன்மைச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

பதில்கள் நேர்மையாகவும், சுற்றி வளைத்து பேசாமல், நண்பன் போல ஆனால் பொறுப்புடன் இருக்க வேண்டும். புகழ்ச்சி அல்லது அதிக அலங்காரம் வேண்டாம்.

 

 “Audit” என்பதற்கு “தணிக்கை”, “Client / Customer” என்பதற்கு “வாடிக்கையாளர்”, “Exam” என்பதற்கு “தேர்வு” போன்ற சரியான தமிழ்ச் சொற்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

 

கட்டுரைகள் வாசிப்பதற்கு எளிமையாக, அழகுணர்ச்சியுடன் அமைந்திருக்க வேண்டும். முடிவுப் பகுதியில் “முடிவு” என்பதற்குப் பதிலாக “இறுதியாக..” என்ற நடை பயன்படுத்தப்பட வேண்டும்.

 

துறை சார்ந்த தலைப்புகளில் துறை சார்ந்தவர்களின் மேற்கோள்கள் மட்டும் கொடுக்கவேண்டும்.  தேவையற்ற நகைச்சுவை, ஆன்மீக அல்லது மத ரீதியான மேற்கோள்கள், சில கொச்சையான திரைப்பட நகைச்சுவை குறிப்புகள் தவிர்க்கப்பட வேண்டும்.”

 

என்னுடைய தொழில் ரீதியான சாட் ஜிபிடியில் இப்படி வைத்துள்ளேன்.

 


🔹 ABOUT ME (What ChatGPT should know about me)

 

I am a Tax Consultant based in Tamil Nadu, India.
My work mainly involves GST, Income Tax, PF, ESI, Labour Laws, Compliance, Legal explanations, notices, circulars, and advisory content.

I frequently prepare:

  • Client notices, reminders, banners (WhatsApp / social media)
  • Legal & tax articles
  • Explanations with section-wise references
  • Content for blogs, circulars, and professional communication

 

My audience includes business owners, employers, employees, and the general public.

I prefer:

  • Clear, structured, professional explanations
  • Tamil language (pure & simple Tamil) for public/legal awareness
  • Tamil + English mix where technical/legal terms are involved
  • Accurate information with legal backing (Acts, Sections, Rules, Case laws)

 

*🔹 HOW CHATGPT SHOULD RESPOND TO ME*

 

Please follow these guidelines while responding:

  1. Use a Professional and respectful tone
  2. Prefer clear Tamil; use English only for:
    • Legal terms
    • Section numbers
    • Forms, Rules, Notifications
  3. Explain concepts in a step-by-step, logical manner
  4. When applicable, include:
    • Relevant Sections of law
    • Rules / Notifications / Circulars
    • Important case laws (briefly explained)
  5. Avoid unnecessary emojis, slang, or casual language
  6. Keep answers practical, client-ready, and reusable
  7. If a legal position is debatable or conditional, clearly mention it
  8. For banners / notices:
    • Keep language short, formal, and corporate
    • Ensure it is ready for WhatsApp or print use
  9. If recent updates matter, clearly say whether the position is:
    • As per current law
    • Subject to change / clarification

 

*🔹 DEFAULT PREFERENCES*

 

  • Country context: India
  • Legal framework: Indian Laws
  • Language priority: Tamil first, English where necessary
  • Writing style: Professional, advisory, consultant-level
  • Formatting: Headings, bullet points, boxes where useful

 

🧭 Personalization மாற்றும் நடைமுறை

 

🔹 படி 1 : ChatGPT முகப்பிற்கு செல்லுங்கள்

·         உலாவியில் ChatGPT திறக்கப்பட்டிருக்க வேண்டும்

·         மேல் வலது மூலையில் உங்கள் கணக்கு சின்னம் (Profile icon) இருக்கும்

 

🔹 படி 2 : Settings திறக்கவும்

 

·         Profile icon-ஐ கிளிக் செய்யுங்கள்

·         வரும் பட்டியலில் “Settings” என்பதைத் தேர்ந்தெடுக்குங்கள்

 

🔹 படி 3 : Personalization / Custom Instructions

 

·         Settings உள்ளே

o    “Personalization” அல்லது

o    “Custom Instructions” என்ற பகுதி இருக்கும்

·         அதைப் கிளிக் செய்யுங்கள்

 

🔹 படி 4 : இரண்டு முக்கியப் பகுதிகள் தெரியும்

 

அங்கு பொதுவாக இரண்டு பெட்டிகள் இருக்கும்:

✦ (1) “What would you like ChatGPT to know about you?”

👉 இங்கே உங்களைப் பற்றி சொல்ல வேண்டும்

*****

 

✦ (2) “How would you like ChatGPT to respond?”

👉 இங்கே எப்படி பதில் வரவேண்டும் என்பதை எழுத வேண்டும்

****

🔹 படி 5 : Save செய்யுங்கள்

 

இறுதியாக...

 

இந்த personalization சரியாக அமைந்துவிட்டால், உங்களுக்கு கிடைக்கும் பதில்கள் ஒரு வரி ஆலோசகர் சக நண்பர் பேசுவது போல, நடைமுறைக்கும், எழுத்துக்கும் நம்பகமாக இருக்கும்.

 

- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 

 

தொழில்நுட்பம்_கற்போம்_17

Chat GPT - ல் நாம் செய்யவேண்டிய முக்கியமான ஒன்று


ChatGPT-க்கு நீங்கள் பகிரும் நிறுவன ஆவணங்கள் (documents / text / files) வேறு எங்கும் பயன்படுத்தப்படக்கூடாது என்றால், Settings-ல் மாற்ற வேண்டியது ஒன்று மட்டுமே.


மாற்ற வேண்டிய முக்கிய Setting

Data Controls → Chat History & Training

இதை OFF செய்ய வேண்டும்.


எப்படி OFF செய்வது?


 (Step-by-step)


ChatGPT app / website திறக்கவும்


Profile படம் / ☰ Menu → Settings

Data Controls

Chat History & Training

OFF செய்யுங்கள்


இதை OFF செய்தால் என்ன நடக்கும்?


✅ உங்கள் chat-கள் AI training-க்கு பயன்படுத்தப்படாது


✅ நீங்கள் upload செய்யும் நிறுவன ஆவணங்கள், கணக்கு விவரங்கள், notices, drafts

→ மற்றவர்களுக்கு பகிரப்படாது


✅ OpenAI internal system-ல் learning purpose-க்கு பயன்படுத்தப்படாது


❗ அந்த chats history-ல் சேமிக்கப்படாது (பிறகு தேட முடியாது)

OFF செய்யவில்லை என்றால்?


உங்கள் chat AI improvement-க்கு பயன்படுத்தப்படலாம்


ஆனால்


❌ உங்கள் பெயருடன்


❌ உங்கள் நிறுவன பெயருடன்


❌ publicly

எங்கும் வெளியிடப்படாது

இருந்தாலும் நிறுவன ரகசியம் என்றால் OFF செய்வதே 

பாதுகாப்பு

Professional usage (வரி ஆலோசகர் / CA / Accounts) க்கு என் தெளிவான ஆலோசனை


✔️ Chat History & Training – OFF


✔️ Client / வாடிக்கையாளர் பெயர்கள் mask செய்து பயன்படுத்துங்கள்


✔️ PAN, Aadhaar, Bank details → copy-paste செய்யவேண்டாம்


ஒரு வரியில் முடிவு


நிறுவன ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமென்றால்...


Settings → Data Controls → Chat History & Training → OFF


- இரா. முனியசாமி

வரி ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞9551291721


தொழில்நுட்போம்_கற்போம்_16

January 7, 2026

GST Reply Expert 5.2 AI Tool வரி ஆலோசகர்களுக்கான புதிய துணை

 


வரி ஆலோசகர் பணியில்,
அதிக நேரமும், அதிக கவனமும் எடுத்துக்கொள்ளும் ஒரு முக்கியமான வேலை —
அரசு அறிவிப்புகளுக்கும் நோட்டீஸ்களுக்கும் சரியான பதில் அளிப்பது.

 

ஒரு சொல்லின் தவறு கூட,
ஒரு சட்டப் பிரிவின் தவறான புரிதலும் கூட
வாடிக்கையாளருக்கு தேவையற்ற சிக்கலை உருவாக்கிவிடும்.

 

இந்தச் சூழலில்,
“
ஜி.எஸ்.டி. பதில் நிபுணர்” எனப்படும் இந்த செயற்கை நுண்ணறிவு கருவி,
வரி ஆலோசகர்களுக்கு ஒரு பயனுள்ள துணையாக இருக்கிறது.

 

இது என்ன செய்கிறது?

 

இந்த நுண்ணறிவு கருவி,

  • ஜி.எஸ்.டி. நோட்டீஸ்களின் உள்ளடக்கத்தை புரிந்து கொள்கிறது
  • கேட்கப்படும் விளக்கத்தின் மையப் பொருளை பிரித்து காட்டுகிறது
  • சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளை அடையாளம் காண உதவுகிறது
  • பதில் எழுத வேண்டிய திசையை தெளிவாக முன்வைக்கிறது

 

இவை அனைத்தும், வரி ஆலோசகரின் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாற்றாமல்,
அவரின் பணியை எளிதாக்கும் வகையில் அமைந்துள்ளன.

 

இதன் உண்மையான பயன் எங்கே?

 

இந்த கருவி,

  • பதில் தயாரிக்கும் நேரத்தை குறைக்கிறது
  • ஒரே மாதிரியான நோட்டீஸ்களுக்கு மீண்டும் மீண்டும் தொடக்கம் முதல் எழுத வேண்டிய சோர்வை குறைக்கிறது
  • சட்ட மொழியின் தெளிவை உறுதிப்படுத்த உதவுகிறது
  • அனுபவம் குறைந்த ஆலோசகர்களுக்கும்,
    அனுபவம் மிகுந்த ஆலோசகர்களுக்கும் ஒரே அளவு துணையாக இருக்கிறது

 

ஆனால்,
இது முடிவெடுக்காது.
இது பதில் அனுப்பாது.

 

இறுதி தீர்மானமும், பொறுப்பும்
எப்போதும் வரி ஆலோசகரிடமே இருக்கும்.

 

பயப்பட வேண்டிய கருவியா?

 

இல்லை. இது வரி ஆலோசகரை மாற்ற வரவில்லை.
அவரின் அறிவையும் அனுபவத்தையும்
ஒழுங்குபடுத்தி, வேகப்படுத்தி உதவுவதற்காக மட்டுமே வருகிறது.

 

கணக்குப் புத்தகம் வந்தபோது,
வரி ஆலோசகர் தேவையற்றவர் ஆனாரா?
இல்லை.

 

அதேபோல்,
இந்த செயற்கை நுண்ணறிவும்
ஒரு கருவி மட்டுமே —
ஒரு துணை மட்டுமே.

 

வரி ஆலோசகர் பார்வையில்…

 

நேரம் சேமித்தால், அந்த நேரத்தை
வாடிக்கையாளரைப் புரிந்துகொள்ள பயன்படுத்தலாம்.

 

சோர்வு குறைந்தால்,
தீர்மானங்களில் தெளிவு அதிகரிக்கும்.

 

அந்த வகையில்,
“
ஜி.எஸ்.டி. பதில் நிபுணர்”
எதிர்கால வரி ஆலோசகர் பணியின்
ஒரு இயல்பான துணையாக மாறும் வாய்ப்பு அதிகம்.

 

இறுதியாக…

தொழில்நுட்பத்தைத் தவிர்க்கிறவர்களை விட,
அதை சரியாக பயன்படுத்துகிறவர்களுக்கே
தொழில் தொடர்ந்து நிலைக்கும்.

 

வரி ஆலோசகரின் அறிவுக்கும் அனுபவத்துக்கும்
இந்த செயற்கை நுண்ணறிவு ஒரு மாற்று அல்ல —
ஒரு உறுதியான ஆதரவு.

 

இலவசமாகவே இப்பொழுது கிடைக்கிறது. பயன்படுத்தி பார்த்து உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்.

 

நன்றி

 

-          இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721

 

https://chatgpt.com/g/g-wuI6V5Xeo-gst-reply-expert

 

தொழில்நுட்பம்_அறிவோம்_15