> குருத்து

May 3, 2020

முலைவரி

இருந்த திருவாங்கூர் சமசுதானத்தில் கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங் களான கன்னியாகுமரி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளும் இருந்தன. சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்ட சாணார் (நாடார். பரவர், ஈழவர், முக்குவர், புலையர் உள் ளிட்ட "18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம்" எனப்பட்டது.

இந்த ஜாதிப் பெண்கள் தங்கள் மேலாடை இன்றிதான் உயர்சாதியினருக்கு மரியாதை செய்ய வேண்டும். பிறந்த குழந்தையிலி ருந்து இறக்கும் வரை எல்லா பெண்களும், இந்த 18 ஜாதிகளில் பிறந்திருந்தால், எவனுடைய மனைவியாக, மகளாக, சகோதரியாக, தாயாராக, பாட்டியாக, இருந்தாலும் மேலாடை இன்றிதான் இருக்க வேண்டும்.

இந்த இந்துத்துவ அடக்கு முறையை கூறும்போது கண்டிப்பாக ‘நங்கேலி’ என்ற பெண்ணைப்பற்றி கூறியே ஆகவேண்டும்.

நடந்த காலம்: சுமார் 100 ஆண்டுக ளுக்கு முன், இடம்: திருவிதாங்கூர் இராஜ் யம், நங்கேலி என்னும் பெண்ணின் கிராமம், சேர்த்தலா வட்டம். இப்போது கேரள மாநிலத்தில் இருக்கின்றது. ‘நங்கேலி’ என்ற சொல்லுக்கு ‘அழகு’ எனப் பொருள். ‘நங்கேலி’ என்பது தலித் சமுதாயத்தைச் சார்ந்த ஒரு பெண்ணின் பெயர்.

இவர் முப்பது வயதை அடைந்த அழகிய மாது. ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மார்பகத்திற்கு விதிக்கப்பட்ட வரியைச் செலுத்துவதில்லை என உறுதி கொண்டாள். ஆனால், திருவிதாங்கூர் இராஜ்யத்தின் உயர்ஜாதி ஆட்சியாளர்கள் விடுவதாக இல்லை. (முலைகள் அளவுக்கு ஏத்தா மாதிரி வரி; பெரிய முலைகளென்றால் வரி அதிகம். வரி கட்ட முடியாவிட்டால், முலைகள் அறுத்து எறியப்பட்டது.)

அதைத் தொடர்ந்து, மார்பக வரி வசூலிப்பவர்களை நங்கேலியின் விட்டுக்கு அனுப்பி வரியைச் செலுத்தக் கட்டாயப்படுத் தினார்கள். ஆனால், அழகி நங்கேலி இந்த வரியைச் செலுத்துவதை மிகப் பெரிய அவ மானமாகக் கருதினாள். அதனால் மார்பக வரியை தருவதில்லை என்ற தனது உறுதி யில் தளராமலிருந்தாள்.

இந்த மார்பக வரிக்கு மலையாள மொழியில் முலைக்கரம் என்று பெயர்.
தொடர்ந்து வரியைக் கட்டிட அவள் மறுத்து வந்ததால் வரி பாக்கி அதிகரித்துக் கொண்டே சென்றது. மார்பகம் பெரியதாக இருந்ததால் வரியும் அதற்குத் தகுந்தாற் போல் அதிகமாக இருக்கும். அழகியின் மார்பகங்கள் பெரியவை. அதனால் விதித்த வரியும் அதிகம்.

முலைக்கரம் பார்வத்தியார் அதாவது மார்பக வரியை வசூல் செய்யும், பார்வத்தி யார் ஒரு நாள் நங்கேலியை தேடிப் போய் விட்டார்.

நங்கேலி தன் வீட்டுக்கு வந்த அவரை சற்றுப் பொறுங்கள் இதோ வரித் தொகை யோடு வருகின்றேன் என்று வீட்டிற்குள் சென்றாள். ஒரு வாழை இலையை எடுத்து விரித்தாள். விளக்கொன்றை ஏற்றி வைத் தாள். தன் மார்பகங்களை ஒவ்வொன்றாக அறுத்து வைத்தாள். அப்படியே சாய்ந்து இறந்தாள். மார்பக வரியை வசூலிக்க வந்த பார்வத்தியாருக்கு இந்த மார்பகங்களைத் தந்தாள். மார்பக வரிக்கு எதிராகத் திப்பு சுல்தானின் கடும் நடவடிக்கைகளுக்குப் பின், அது சமுதாயத்தில் ஒழிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளுக்கு முன் அழகி நங்கேலி அறுத்து வைத்த மார்பகங்கள் தாம் முலைவரி என்ற மார்பக வரிக்கு எதிராக எழுந்த முதல் எதிர்ப்பலை.
இந்த அதிர்வான நிகழ்ச்சிக்குப் பின் அவள் வாழ்ந்த இடம் ‘முலைச்சிபரம்பு’ (மார்பகப் பெண் வாழ்ந்த இடம்) என்றே வழங்கப்பட்டது.

பின்னர் இந்த போராட்ட வரலாற்றை வரலாற்றுச் சுவடுகளிலிருந்து மறைத்திட விரும்பினார்கள் பார்ப்பனர்கள். அதனால் அந்த இடத்தை முலைச்சிபரம்பு என்பதற்குப் பதிலாய் ‘மனோரமா காவலா’ என மாற்றினார்கள்.

ஆனால், அவள் வாழ்ந்த அந்த ஓலைக்குடிசை இடிபாடுகளுடன் அதே இடத்தில் இருக்கின்றது. முரளி என்ற ஓவியர் இந்த வரலாற்றைச் சித்திரமாகத் தீட்டி அந்த இடத்தில் வைத்திருக்கின்றார். அந்த ஊர் மக்கள் ஒவ்வொருவரும் "நாங்கள் இந்த வரலாற்றை செவி வழி செய்தியாகக் கேட்டு வளர்ந்தோம். இப்போது எங்கள் உள்ளக் கிடக்கையை அப்படியே சித்திரமாக வரைந்துள்ளார் முரளி” என அவரைப் பாராட்டுகிறார்கள்.

இந்த வரலாறுகள் எல்லோருக்கும் தெரிந்திருக்க வேண்டியவை. ஆரிய இந்து மதத்தின் சாதி பிரிவினைகளும் அடக்கு முறைகளும் தமிழரை எவ்வாறு பாடாய் படுத்தியது என்பதை எமது சந்ததிக்கு எடுத்து சொல்லவேண்டியது எமது கடமை.

திருவிதாங்கூர் சமஸ்தானம் (கன்னியாகுமரி மாவட்டம் உட்பட ) “ராமராஜியம்” நடத்திய போது அங்கிருந்த பெண்களின் கதி இது தான்.
இனியொரு முறை “ராமராஜியம்” என்று எவரும் நம் காதில் பூ சுத்தினால், அவர்கள் பெண்களுக்கும் குழந்தைகளுக்கு எதிரானவர்கள் என்று அறிவீராக...!

- Vijay C

குறும்படத்திற்கான சுட்டி :

https://youtu.be/Bg0h7XM_7zA

குடிமகனை தேடிய கதை!

வக்கீல் அலுவலகம். அன்றைக்கு காலையில் அலுவலகத்தில் அன்றாட வேலைகளை செய்ய துவங்கி இருந்த பொழுது... நண்பனின் உறவுக்கார பெண்மணி அவருடைய அண்ணனுடன் எங்களைத் தேடிவந்தார். அந்த பெண்ணுக்கு வயது முப்பது இருக்கும். ”நேற்றைக்கு முதல்நாள் காலையில் வீட்டை விட்டுப்போன கணவர் இன்னும் வீடு திரும்பவில்லை. அவருடைய செல்லுக்கு கூப்பிட்டா, போகவும் மாட்டேங்குது! நேற்றைக்கே திரும்பிவிடுவார் என எதிர்பார்த்தேன். வரவில்லை. எனக்கு தெரிந்த எல்லோரிடமும் கேட்டுப்பார்த்துவிட்டேன். யாருக்கும் விவரம் தெரியவில்லை” என எப்பொழுது வேண்டுமென்றாலும் கண்ணீர் வந்துவிடும் அளவில்.. அடக்கிக்கொண்டு பேசினார்.

"இப்ப எங்கே போயி தேடுவது? போலீசில் ஒரு புகார் கொடுத்துவிடலாமா?" அந்த பெண்ணிடமே கேட்டோம்.

"இங்க டாஸ்மாக் கடைக்கு லீவு விட்டுட்டாங்கன்னா அவரும், அவங்க கூட்டாளியும் சேர்ந்து டிரெயின் ஏறி (ஆந்திரா) சூலூர்ப்பேட்டை போயி, முன்னாடி ஒருமுறை குடிச்சாங்கண்ணா! அதே கூட்டாளிக்கு போன் அடிச்சா ரிங் போகுது! ஆனா எடுக்க மாட்டேங்குகிறார்." என்றார். பர பரவென வேலைகளில் இறங்கினோம். அந்த கூட்டாளியின் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தோம்.

நிறைபோதையில் இருந்தார். எதையும் கேட்டு பதில் சொல்லும் நிலையில் இல்லை. தண்ணீரை முகத்தில் தெளித்தும், வேறு வகைகளில் கேட்டும் பிரயோஜனமில்லை. போதை இறங்கும் வரை, காத்திருக்க வேண்டியது தான். காத்திருந்தோம். பிறகு கொஞ்சம் தெளிந்து, "சூலூர்ப்பேட்டைக்கு போய் குடிச்சோம். திரும்ப டிரெயின்ல நான் ஏறிட்டேன். அவனால ஏறமுடியவில்லை. அடுத்த டிரெயின்ல வந்துருவான்னு நினைச்சேன். இன்னும் வரல்லையா!" என அரைபோதையில் நம்மையே திரும்ப கேட்டார்.
சாதாரணமாக இருந்தால் பரவாயில்லை. ஆந்திரா போய் குடித்துவிட்டு காணாமல் போனால்... விசும்ப ஆரம்பித்தார். அப்போதே மதியம் 12 மணியாகிவிட்டது. சூலூர்பேட்டை போய்த்தான் தேடனும் என்ற முடிவுக்கு வந்தோம்.

நானும் சக வழக்கறிஞரும், ஆந்திரா என்பதால், தெலுங்கு கொஞ்சம் தெரிந்த இன்னொரு வழக்கறிஞர், காணாமல் போனவருடைய மனைவி, அவருடைய அண்ணன், அவரது மனைவி என ஆறு பேரும் திருவெற்றியூர் போய் டிரெயின் ஏறினோம். மொத்தம் 80 கிமீ. டிக்கெட் விலை ரூ.20. டாஸ்மாக் விடுமுறை நாட்களில் இங்கிருந்து டூப்ளிகேட் சரக்கு அடிச்சு சிரமப்படுறதுக்கு அடுத்த மாநிலத்திற்கு போய் சரக்கடிச்சிரலாம் என்ற தொலைதூர சிந்தனை தான் இவ்வளவு தூரம் போகவச்சிருக்கு!

வாழ்க்கையில ஒரு குடிகாரனைத் தேடி இப்படி பயணம் போறோமே என்கிற சிந்தனை வந்தது. "இரண்டு பிள்ளை வைச்சிருக்கேண்ணா!" என அந்த பெண் அழுதுகொண்டே சொன்னது நினைவுக்கு வந்தது. குடிகாரன்கள் அப்பனாகவும் இருந்து தொலைக்கிறார்களே! என கோபம் வந்தது.
மதியம் 2.30மணிக்கு ஒரு வழியாக சூலூர்ப்பேட்டை வந்து சேர்ந்தோம். நிலைய அதிகாரியைப் போய் பார்த்து விசயத்தைச் சொன்னோம். தமிழ்நாட்டுல டாஸ்மாக் கடை லீவுன்னா ரயிலேறி கூட்டம் கூட்டமா வந்து குடிக்க வந்துவிடுகிறார்கள். ஒரு ரயில்ல 1000 பேர், 1500 பேரெல்லாம் வருகிறார்கள் என தெலுங்கில் அலுத்துக்கொண்டார்.

பிறகு, கடந்த இரண்டு நாட்களில் இந்த ஏரியாவில் இரண்டு பேர் ரயிலில் அடிப்பட்டு இரண்டு பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அதில் ஒருவர் அம்பத்தைந்து வயதுகாரர். இன்னொருவருக்கு முப்பதைந்து வயதிருக்கும் என அவர் சொன்னதும், அந்த பெண்மணி அழவே ஆரம்பித்துவிட்டார்.
இறந்ததுமே புகைப்படம் எடுத்து பைலில் வைத்துக்கொள்கிற நடைமுறை ரயில்வேதுறையில் இருந்ததால், அதை உடனே வாங்கி சோதித்தோம். இரண்டு புகைப்படங்களுமே கோரமாய் இருந்தன. முப்பதைந்து வயதுகாரருடைய புகைப்படம், அவர் போட்டிருந்த ஆடைகளும் நாம் தேடிவந்தவருடையதில்லை. நிம்மதி அடைந்தோம்.

பிறகு அங்கிருந்தவர்களிடம் கையில் கொண்டு போயிருந்த புகைப்படம் காட்டி விசாரித்துக்கொண்டிருந்த பொழுது, மாலை ஐந்துமணியாகிவிட்டது. அந்த பெண்ணுக்கு அவருடைய கணவர் செல்லிலிருந்து அழைப்பு வந்தது. வீட்டுக்கு வந்ததாகவும், மனைவியை காணோம் என உடனே அழைத்திருக்கிறார். இந்தம்மா இந்த விவரங்களைத் தெரிவித்ததும், “நான் என்ன சின்ன பிள்ளையா, வீடு வந்துசேர தெரியாது!” என கெத்தாக பேசினார். நேரில் பார்த்திருந்தால், இரண்டு அறைவிடும் அளவிற்கு கோபம் வந்தது. ஆள் கிடைத்துவிட்டார் என்றதும் எல்லோருக்குமே நிம்மதி. உடனே அடுத்த வண்டியை பிடித்து ஊர் வந்து சேர்ந்தோம்.

குடிச்சது சரி! அதென்ன ஊர் வந்து சேர இரண்டு நாள் ஏன் ஆச்சு? என பிறகு ஆற அமர விசாரித்த பொழுது, நல்லா தண்ணியடிச்சிட்டு, தெற்கு பக்கம் தமிழ்நாட்டு ரயில்ல ஏறுவதற்கு பதிலா, வடக்கு பக்கம் போகிற ரயில்ல போதையில் ஏறிவிட்டார். போதை தெளிஞ்சு ஊர்ப்பக்கம் வருவதற்கு தாமதமாகி இருக்கிறது.

டாஸ்மாக் இப்படி எத்தனையோ குடும்பங்களின் வாழ்வை தினந்தோறும் சீரழித்து வருகிறது. எவன் குடி கெட்டால் என்ன? யார் தாலி அறுந்தால் என்ன? எங்களுக்கு கல்லாப்பெட்டி நிறைஞ்சா போதும் என்கிற உயர்ந்த சிந்தனை தான் அரசுக்கு இருக்கிறது.

அட்வைஸ் வாரம்!

கடந்த ஒரு வார காலமாக வருடத்திற்கு ஒருமுறை கடைப்பிடிக்கிற "சாலை பாதுகாப்பு வாரம்" என பரவலாக விளம்பரப்படுத்தி வருகிறார்கள்.

பெயரிலேயே குழப்பம் இருக்கிறது. "சாலை பயணிகள் பாதுகாப்பு வாரம்" என்பது தான் பொருத்தமானது. இதனால் தான், பொறுப்பே இல்லாமல் வண்டி ஓட்டும் பொழுது குறுக்கே லத்தியை நுழைத்து, சாகடிக்கிறார்கள்.
அரசுக்கு மக்கள் மீது அக்கறை எல்லாம் இருந்தால் தானே! அப்படியெல்லாம் யோசிக்க போகிறார்கள்.

சாலை பாதுகாப்பு வாரத்தை துவக்கி வைத்து அதிமுக அமைச்சர் பேசும்போது "சாலைகள் எல்லாம் அருமையாக இருப்பதால் வண்டியில் செல்பவர்கள் ஓட்டி செல்லாமல் பறக்கிறார்கள். அதனால்
நிதானமாக செல்லுங்கள்" என அறிவுரை வழங்கினார்.
சிரிப்பு வந்துவிட்டது. கடந்த முறை ஊருக்கு செல்லும்போது ஆட்டோ ஓட்டுனரிடம் பேச்சு கொடுத்தேன். "ரோட்டை பாருங்க சார்! எவ்வளவு குண்டும் குழியுமா இருக்கு! அரசு ஒழுங்கா ரோடும் போட மாட்டேங்குது! அதை பாதுகாக்கவும் மாட்டேங்குது! கமிசன் அரசாங்கம் சார். கர்ப்பிணிப் பெண்களை அழைத்து செல்லும் பொழுது அவ்வளவு கஷ்டமாயிரும் சார்!" என சாலைகளின் தகுதி பற்றி கழுவி கழுவி ஊற்றினார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு திருமங்கலத்தை கடக்கும் போது ஹெல்மெட் போடாத ஆட்களை பிடித்து வைத்து, ஒரு போலீஸ் அதிகாரி அறிவுரைகளை அள்ளி விட்டுக்கொண்டிருந்தார்.

அபராதத்துடன், அட்வைசுமா? அல்லது அட்வைசே அபராதம் என்பதால் அப்படியே அனுப்பி விடுவார்களா? என தெரியவில்லை.

தெருவுக்கு தெரு சாராயக் கடைகளைத் திறந்து வைத்துக் கொண்டு...
சாலைகளை மோசமாக வைத்துக்கொண்டு...
மக்களுக்கு அட்வைஸ் பண்ணுவது எல்லாம் ரொம்ப அநியாயம்.
நீங்க என்ன நினைக்கிறீங்க?