> குருத்து: தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள்

September 8, 2025

தயவுசெய்து என்னை அவசரப்படுத்தாதீர்கள்



நானொரு நத்தை 

தயவுசெய்து 

என்னை அவசரப்படுத்தாதீர்கள்

அதோ அந்த செர்ரி மரங்களை நோக்கி 

நான் மெல்ல நகர்கிறேன்; 

நான் சென்றடையவேண்டிய 

இடம்  ஒன்றுமில்லை, 

செய்தே தீரவேண்டிய 

வேலைகளும் கிடையாது 

இந்த வேகமே எனக்கு உவப்பு.

நான் மெதுவாகப் 

போகவே விரும்புகிறேன்; 

இது எனக்கு 

நான் கடந்து செல்லும் 

பூக்கள் அனைத்தையும், 

புல்லின் இதழ்கள் 

ஒவ்வொன்றையும் அறிந்துகொள்வதற்கு, 

வேண்டிய நேரத்தைத் தருகிறது. 

 

நான் ஒரு நத்தை; 

இது என் பாதை. 

தயவு காட்டுங்கள் 

என்னை அவசரப்படுத்தாதீர்கள், 

எனக்கு இந்நாள் முழுவதும் 

இன்னும் மீதமிருக்கிறது.

 

-   பார்பரா வான்ஸ்,

அமெரிக்கப் பெண் கவிஞர்

 

தமிழில் -  க.மோகனரங்கன்

0 பின்னூட்டங்கள்: