வயதான, நினைவிழந்த, படுத்த படுக்கையாய் இருக்கும் கன்னியாஸ்திரிகளை பார்த்துக்கொள்ளும் இத்தாலியில் ஒரு கிறித்துவ நிறுவனம்.
முதல் காட்சியில் ஒரு இளம்பெண் நடுநிசியில் தப்பித்துச்
செல்ல முயல்கிறாள். ஆனால், இழுத்து வந்து,
உயிரோடு புதைத்துவிடுகிறார்கள். படுபாவிகள்.
இளம்பெண்ணான நாயகி வெகு தூரத்திலிருந்து அந்த இடத்திற்கு
வந்து சேர்கிறாள். அங்கு வந்து சேர்ந்ததில்
இருந்து சில வித்தியாசமான விசயங்களை உணர்கிறாள்.
புதிது என்பதால் யாரிடமும் கேட்கமுடியவில்லை.
வாந்தி, மயக்க. சோதிக்கும் பொழுது அவள் கர்ப்பமாக இருப்பது
தெரியவருகிறது. அவள் யாரோடும் உறவு கொள்ளவும்
இல்லை. ஆண்டவர் அவள் வயிற்றில் தோன்றியிருப்பதாக
அங்கு பொறுப்பில் உள்ளவர்கள் எல்லோரிடமும் தெரிவிக்கிறார்கள். அவளை கவனமாக பார்த்துக்கொள்கிறார்கள்.
ஏற்கனவே சில வித்தியாசமான விசயங்களை உணர்ந்தவள், தன்னுடைய
கர்ப்பமும் அவளுக்கு இன்னும் சந்தேகத்தை உருவாக்க அங்கு இருந்து தப்ப முயல்கிறாள்.
ஆனால் அது பெரிய சவாலாக இருக்கிறது.
அதற்கு பிறகு அங்கு நடந்ததை கொஞ்சம் சஸ்பென்ஸ் + கொஞ்சம்
வன்முறை கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
****
”ஆண்டவர் மீண்டும் இந்த மண்ணிற்கு வருவார்” என்பதை கொஞ்சம்
‘அறிவியல்’ கலந்து முயற்சித்திருக்கிறார்கள்.
அதற்கு அவர்கள் செய்யும் ”பாவ காரியங்கள்” ஒவ்வொன்றும் பயங்கரமாயிருக்கிறது.
ஹாரர் படம் என்பதை விட திரில்லர் படம் எனலாம். அங்கு நடக்கும் மர்மங்களை வைத்து தான் கடைசி வரை
நகர்த்தி இருக்கிறார்கள்.
நாயகி நன்றாக நடித்திருக்கிறார். Heist சீரிசில் வரும் புரபசர் ஒரு பாத்திரத்தில்
வந்து போகிறார். அந்த பாத்திரத்தை இன்னும்
கொஞ்சம் நன்றாக எழுதியிருக்கலாம்.
பிரைமில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டே இருக்கிறது.
திரில்லர், ஹாரர் ரசிகர்கள் பார்க்கலாம். மற்றவர்கள் நிறைய நேரம் இருந்தால் பாருங்கள்.