> குருத்து: சிதம்பரம் கோவிலில் உண்டியல்! தீட்சிதர்கள் கதறி அழுகை!

February 5, 2009

சிதம்பரம் கோவிலில் உண்டியல்! தீட்சிதர்கள் கதறி அழுகை!சிதம்பரம் கோவிலில் உண்டியல்! தீட்சிதர்கள் கதறி அழுகை!
– தினமலர் – 06.02.2008

“வரலாற்றில்

முதன்முறையாக”
சிதம்பரம் கோவில்
உண்டியல் பார்த்திருக்கிறது.

“வரலாற்றில்
முதன்முறையாக”
ஜீவதார வாழ்வுரிமை
பறிக்கப்பட்டதாக
வாயிலும், வயிற்றிலும்
அடித்து
தீட்சிதர்கள் கதறி அழுகை.

இனி –
தீட்சிதர்களின் கொழுப்பு
அதனால் எழுந்த திமிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
குறையும்.

தீட்சிதர்களுக்கு,
டையட்டிசனாக (Dietician)
தொடர்ந்து
ம.க.இ.க.,
ம.உ.பா.மை.
செயல்படும்.

குறிப்பு :
ம.க.இ.க – மக்கள் கலை இலக்கிய கழகம்
ம.உ.பா.மை – மனித உரிமை பாதுகாப்பு மையம்.

22 பின்னூட்டங்கள்:

Anonymous said...

deekshitars met jeyalalitha to support.

Anonymous said...

//இனி –
தீட்சிதர்களின் கொழுப்பு
அதனால் எழுந்த திமிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
குறையும்.//

yes. Congrats.

குருத்து said...

“தில்லையில் தீட்சிதர்களிடமிருந்து நடராசரை காப்பாற்ற வாருங்கள்!” என்றதும் மக்கள் அமோக ஆதரவு தந்தார்கள்.

தீட்சிதர்கள் யாரென்றால்… கைலாயத்திலிருந்து 3000 தீட்சிதர்கள் பூமிக்கு வந்து, சிதம்பரத்தை அடையும் பொழுது, எண்ணிப்பார்த்தார்களாம். 2999 பேர் தான் இருந்தார்களாம். 1 ஆள் மிஸ்ஸிங்.

அந்த மிஸ்ஸிங் ஆள் தான் நடராசராம். தீட்சிதர்கள் நடராசரின் நெருக்கமான உறவினர்களாம்.

எப்பேர்ட்டப்பட்ட உடான்ஸ் கதை. எனக்கென்னமோ, இந்த கதையில் கூட, மிஸ்ஸிங் என்பது சந்தேகம் தான். தீட்சிதர்களின் பண்பைப் பார்க்கும் பொழுது, அப்பொழுதே, ஒரு தீட்சிதரை போட்டுத்தள்ளி விட்டு, காணாமல் போனவர் நடராசர் என கதைவிட்டு விட்டார்கள் என நினைக்கிறேன்.

Anonymous said...

தீட்சிதர்களுடைய கொழுப்பு குறைக்கப்படத்தான் வேண்டும். திருவாசகம் பாட போராடிய அந்த பெரியவரை கை ஒடித்தவர்களாயிற்றே இவர்கள். தமிழில் பாட வேண்டும் என்ற ஆணையை நிறைவேற்ற போலீசோடு மல்லுக்கு நின்றார்களே! உண்டியல் காசை தின்பதற்கு தானே!

Anonymous said...

இதோ, தில்லைக் கோயிலின் உள்ளே நிர்வாக அதிகாரியின் அலுவலகம் தயாராகி விட்டது. அடையாளமாக பக்தர்களிடமிருந்து காணிக்கைகளை வாங்கத் தொடங்கினார் அறநிலையத் துறையின் நிர்வாக அதிகாரி. சிறிது நேரத்தில் சேர்ந்த தொகை சில ஆயிரங்கள். 2007 ம் ஆண்டு மூழுவதும் தில்லை நடராசர் கோயிலுக்கு பக்தர்கள் மூலம் வந்த காணிக்கை என்று தீட்சிதர்கள் கொடுத்திருக்கும் கணக்கு என்ன தெரியுமா? 2007 ம் ஆண்டின் மொத்த காணிக்கை வரவு ரூ. 37,199. செலவு 37,000. கையிருப்பு 199 ரூபாய்!

“பரமேஸ்வரன் ஆனந்த நடனம் ஆடறார் பாருங்கோ” என்று தமிழிலும், “தி காஸ்மிக் டான்ஸ் ஆப் லார்டு ஷிவா” என்று ஆங்கிலத்திலும், இன்னும் எல்லா உலக மொழிகளிலும் வருசம் பூரா பேசி தீட்சிதர்கள் வசூலித்த தொகை வெறும் 37,199 ரூபாய்தானாம். அதாவது தினமொன்றுக்கு 100 ரூபாய். நடைபாதை பிள்ளையார் கூட உட்கார்ந்த இடத்தில் 400, 500 வசூல் பண்ணுகிறார். நம்ம நடராசப் பெருமானோ நாள் முழுவதும் டான்ஸ் ஆடுகிறார். இருந்தாலும் தினசரி வசூல் நூறு ரூபாய்தான் என்றால் நம்ப முடிகிறதா?

from

http://vinavu.blogspot.com

Anonymous said...

ஒரு குருவிக் கூட்டைக் குழைப்பதே பாவம் என்று எண்ணிய மனிதர்கள் வாழ்ந்த நாட்டில்,
இன்று பெரிய கூட்டுக்குடும்மத்தையே குழைத்து, அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடும் மனிதர்களின் அற்ப குணத்தை என்ன சொல்வது!!!!!!!!!!

கலிகாலத்தின் இயல்பே அதுதான்.

Anonymous said...

//ஒரு குருவிக் கூட்டைக் குழைப்பதே பாவம் என்று எண்ணிய மனிதர்கள் வாழ்ந்த நாட்டில்,
இன்று பெரிய கூட்டுக்குடும்மத்தையே குழைத்து, அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடும் மனிதர்களின் அற்ப குணத்தை என்ன சொல்வது!!!!!!!!!!

கலிகாலத்தின் இயல்பே அதுதான்.//

kalikalam is very good to asurars

குருத்து said...

//deekshitars met jeyalalitha to support.//

தீட்சிதர்களுக்கு ஆதரவாக வழக்கம் போல கருத்து சொல்ல, வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

அவாள்கள் எல்லா பதவிகளிலும் இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்திலும் அவாள்கள் இருக்கிறார்கள். ஆதரவாக தீர்ப்பும் வாங்கி வருவார்கள்.

எல்லாவற்றையும், மக்கள் ஆதரவோடு தான் நாம் எதிர்கொள்ள வேண்டும்.

குருத்து said...

//ஒரு குருவிக் கூட்டைக் குழைப்பதே பாவம் என்று எண்ணிய மனிதர்கள் வாழ்ந்த நாட்டில்,
இன்று பெரிய கூட்டுக்குடும்மத்தையே குழைத்து, அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடும் மனிதர்களின் அற்ப குணத்தை என்ன சொல்வது!!!!!!!!!!

கலிகாலத்தின் இயல்பே அதுதான்.//

என்னே ஒரு குடுமி பாசம்!

தீட்சிதர்கள் உழைத்து வாழ்ந்திருந்தால், இந்தியா முழுவதும் சிதறி போயிருப்பார்கள். அல்லது குறைந்தபட்சம் தமிழ்நாட்டிலாவது பரவி வாழ்ந்திருப்பார்கள்.

மணியாட்டி கொண்டு, வந்த வசூலை பங்கு போட்டுக்கொண்டு வாழ்வதால் தான், "பெரிய கூட்டுக் குடும்பமாக" வாழ முடிந்திருக்கிறது.

கடந்த காலம், பார்ப்பன இருள் கவ்வியிருந்த காலம். அவாள் காலம்.

இன்றைக்கு அவாளோட ஆதிக்கத்தை உழைக்கும் மக்கள் ஆதரவோடு, வீழ்த்தும் காலம்.

கலிகாலம் இனி நமக்கானது.

Anonymous said...

ஏண்டா பன்னிகளா உங்களுக்கு தான் தெய்வ நம்பிக்கை இல்லையே அப்புறம் எது எப்படி போனால் என்ன.

குருத்து said...

//ஏண்டா பன்னிகளா உங்களுக்கு தான் தெய்வ நம்பிக்கை இல்லையே அப்புறம் எது எப்படி போனால் என்ன.//

அனானியே!

தெய்வ நம்பிக்கைத்தான் இல்லை! ஆனால், நிறைய சுயமரியாதை இருக்கிறதே!

நெய்யும் பருப்புமாய் உழைக்காமல் உண்டு கொழுத்து, தீட்சிதர்கள் செய்கிற அட்டுழீயங்களை கண்டும் காணாமல் போக எங்களால் முடியாதே!

தட்டேந்தி தமிழர்களிடமே காசு வாங்கி கொண்டு, எங்கள் தமிழை தீட்டு என சொல்லும் தீட்சிதர்களை நிம்மதியாய் வாழ வைக்க முடியாதே!

எது எப்படி போனால் என்ன? என உன்னால் வாழ முடியும். எங்களால் வாழ முடியாது. நாங்கள் கம்யூனிஸ்டுகள்.

அடுத்தப் பதிவு, தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலில் செய்த லீலைகளை அம்பலப்படுத்தி ஒரு பதிவு.

பன்னி என அன்போடு திட்டிய அனானிக்கு எனது அன்பு பரிசு.

Anonymous said...

அவர்கள் அப்பீல் செய்கிறார்ளாமே?.
இடைக்காலத்தடை பெற்றால் என்னாகும்?.மீண்டும் அவர்கள்
வசம் கோயில் போய்விடுமா?

Anonymous said...

அவர்கள் அப்பீல் செய்கிறார்ளாமே?.
இடைக்காலத்தடை பெற்றால் என்னாகும்?.மீண்டும் அவர்கள்
வசம் கோயில் போய்விடுமா?

குருத்து said...

//அவர்கள் அப்பீல் செய்கிறார்ளாமே?.
இடைக்காலத்தடை பெற்றால் என்னாகும்?.மீண்டும் அவர்கள்
வசம் கோயில் போய்விடுமா?//

வினவின் இந்த பத்தி, உங்கள் கேள்விக்கு சரியாக பொருந்துகிறது.

இனி என்ன நடக்கும்? அப்பீல் ஜெயிக்குமா? அது எப்படி நமக்குத் தெரியும்? அதெல்லாம் அந்த ஆடல்வல்லானுக்குத்தான் வெளிச்சம். மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர்கள் மறுபடியும் ஹை கோர்ட் படியேறத் தயாராகி விட்டார்கள். வழக்கு செலவுக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாயாக மக்களிடம் நிதி திரட்டும் பணியை மறுபடியும் தொடங்கி விட்டார்கள் எங்கள் தோழர்கள்.

ராஜ நடராஜன் said...

ஒரு மனிதனின் அழுகையில் சுகம் காண்பதில் எனக்கு உடன்பாடில்லை.தீட்சிதர்களுக்கு மாற்று வாழ்க்கை வழிகளை அமைப்பது அரசின் கடமை.

Anonymous said...

//கலிகாலம் இனி நமக்கானது.//

கலின்னாலே துன்பமும் துயரமும் தான் அதயப்போய் இப்படி ஆசையா எடுத்துகிறீங்களே! என்னமோ...... செஞ்சுக்கிங்க.
//நெய்யும் பருப்புமாய் உழைக்காமல் உண்டு கொழுத்து,//

உண்மையில் நீங்கள் தெரியாமல் தான் சொல்கிறீர்களா?

ச்சும்மா யாரோ சொல்லி விட்டார்கள் என்பதற்காக பார்ப்பானர் மேல் துவேசம் பாராட்டாதீர்கள்.

அவர்களுடன் ஒரு நாள் இருந்து பாருங்கள். அவர்கள் செய்யும் வேலைகளைப் பாருங்கள். அப்புறமா சொல்லுங்கள் வாரத்தில 7நாளும் லீவே இல்லாம உங்களால் அப்படி உழைக்கமுடியுமான்னு.

எல்லாமே இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.

வெத்து வேட்டு said...

Chithambaram temple must be taken over from Dixiters..they ruined it because of their greediness
all big temples must be taken over
what about SreeRangam?
Kallazhagar temples?
all the corrupt rats should be kicked out of temples..
all archanai should be conducted without tickets
first of all all temples should be CLEANED....

குருத்து said...

//ஒரு மனிதனின் அழுகையில் சுகம் காண்பதில் எனக்கு உடன்பாடில்லை.தீட்சிதர்களுக்கு மாற்று வாழ்க்கை வழிகளை அமைப்பது அரசின் கடமை.//

மனிதன் என பொதுமைப்படுத்துவது சரியல்ல!

தீட்சிதர்கள் இதுவரைக்கும் கோவிலுக்கு முதலாளிகளாக இருந்தார்கள். இனி, பூசாரியாக மட்டும் இருப்பார்கள்.

தீட்சிதர்களுக்கு சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டு, அரசால் கொடுக்கப்படும் அவ்வளவு தான்.

அந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு, ஏற்கனவே வாழ்ந்த மாதிரி, ஆடம்பரமாய் வாழ முடியாது. அதையெல்லாம், இழக்கப்போகிறோமே என்பதால் தான் இவ்வளவு கதறல்கள்.

என்னைப் பொறுத்தவரையில், தீட்சிதர்களுக்கு இந்த கதறல்கள் அவர்களுக்கே நல்லது தான் செய்யும்.

இதுவும், ஆடல்வல்லானின் திருவிளையாடல் மற்றவர்களுக்கு போதிப்பது மாதிரி, தாங்களும் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் ஆத்திகர்கள் தானே! நாத்திகர்கள் இல்லையே!

குருத்து said...

//அவர்களுடன் ஒரு நாள் இருந்து பாருங்கள். அவர்கள் செய்யும் வேலைகளைப் பாருங்கள். அப்புறமா சொல்லுங்கள் வாரத்தில 7நாளும் லீவே இல்லாம உங்களால் அப்படி உழைக்கமுடியுமான்னு.

எல்லாமே இக்கரைக்கு அக்கரைப் பச்சைதான்.//

சாக்கடைக்குள் இறங்கி அடைப்பை சுத்தம் செய்வதில்,
கட்டுமான தொழிலில் மேலிருந்து விழுந்து, தொழிற்சாலைகளில் இயந்திரத்தில் சிக்கி, வெல்டிங் பட்டறையில் ஷாக் அடித்து பல ஆயிரம் தொழிலாளர்கள் தினந்தோறும் உயிரிழக்கிறார்கள்.

ஒரு பார்ப்பன பூசாரி வாழ்வில் இப்படி செத்ததுண்டா! 7 நாளும் லீவு இல்லாமல் பார்க்கும் அந்த மிகச் சிரமமான பூசாரி வேலையை மற்றவர்கள் செய்யட்டும். நீங்கள் கொஞ்சம் வேறு வேலை பாருங்கள்.

இந்தக்கரையில் சிரமம், துன்பங்கள், துயரங்கள்.

அந்தக்கரையில் சொகுசு, பவுசு, பகுமானம்.

இக்கரைக்கு அக்கரைப் பச்சை – எப்பொழுதும், எங்கும் பொருந்துவதில்லை!

Anonymous said...

I find this constant attack on Brahmins is getting out of hand.

Government taking over the temple is fine. It is rubbish to say that one can't sing in Tamil, especially in a temple within Tamilnadu. One should be able to praise God in the language they want.

But making a mockery out of a community is not really needed. I have read that Brahmin community is the fundamental reason for India's social attrocities. But then, instead of giving importance to raising the oppressed and poor from their living standards, I think too much time and money is wasted on hitting back at them. Improve the base society that makes up 90% of the population. Let them learn about great people, politics, economics, social responsibilities, awareness of population issues, health issues, and so much more. Only then, will we not have people cine people dominating in politics. Where in developed countries, degrees and experience in economics, law, business, international relationship is required, we have 'kutthu' dancers, so-called Tamil worshippers, actresses and all, vying for spotlight, fame and money through politics. How will society become better in such a scenario?

Karunanidhi's true face came long back. The man insults hindu practices, but his wife cleans the feet of 'so-called' divine people, so that her husbands faults are forgiven. Who knows if government will keep the temples well? So many great architectures are rotting away while these politicians swindle money.

Most important thing is for all Temples to be free for access, cleanliness should be practiced by upkeepers and public, and it should be a place of equal worship for everyone.

-Kajan

குருத்து said...

//ச்சும்மா யாரோ சொல்லி விட்டார்கள் என்பதற்காக பார்ப்பானர் மேல் துவேசம் பாராட்டாதீர்கள்//

உலக மதங்களிலேயே இந்து மதம் தான் பிற்போக்குத்தனமானது என்பார் அம்பேத்கார்.

கிறிஸ்துவ மதம் பிற்போக்கான மதம் என்றாலும் கூட, தனது பைபிளை எழுத்து வடிவம் இல்லாத பல பழங்குடியினருக்கு எழுத்தை உருவாக்கி, பைபிளை மொழிபெயர்த்து
தருகிறது.

ஆனால், இந்து மதம் ஒரு மதமல்ல என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இந்து மதத்தின் வேதங்களை வேறு யாரும் படிக்க கூடாது, கேட்க கூடாது என்றெல்லாவா எழுதி வைத்திருக்கிறார்கள். மீறி படிப்பவர்களை கடுமமயாக தண்டித்தல்லவா இருக்கிறார்கள்.

இந்த நாட்டில் அதிகபட்ச துவேசத்தை கக்கியவர்கள் பார்ப்பனர்களும், அதன் விளைவாய் எழுந்த பார்ப்பனியமும் அல்லவா!

துவேசத்தின் தந்தை, தாய் எல்லாம் பார்ப்பனர்கள் தான். அதெல்லாம், எத்தனை கொடுமைகள், கொடூரங்கள் இந்த சமுதாயத்தில்.

ராஜ நடராஜன் said...

//தீட்சிதர்கள் இதுவரைக்கும் கோவிலுக்கு முதலாளிகளாக இருந்தார்கள். இனி, பூசாரியாக மட்டும் இருப்பார்கள்.

தீட்சிதர்களுக்கு சம்பளம் என நிர்ணயிக்கப்பட்டு, அரசால் கொடுக்கப்படும் அவ்வளவு தான்.//

விளக்கத்திற்கு நன்றி.