> குருத்து: May 2011

May 30, 2011

மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள் - முதலாளிகளின் அடியாட்படை கிரிமினல்கள்!




குறிப்பு : தெளிவாக படிக்க, பிரசுரத்தின் மீது சொடுக்கவும்.

May 27, 2011

கல்லா கட்டும் எண்ணெய் நிறுவனங்கள்! நெருக்கடியில் தவிக்கும் மக்கள்!

முன்குறிப்பு : கச்சா பேரல் விலை அதிகரித்துவிட்டது. நாங்கள் நட்டத்தில் தவிக்கிறோம் என்கிற எண்ணெய் நிறுவனங்களின் புலம்பல்கள் பொய்யானது என்கிற பின்வருகிற செய்திகள் நிரூபிக்கின்றன. கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் விலையை 9 தடவை ஏற்றிவிட்டன. பணவீக்கம் அதிகமாகி, விலைவாசி உயர்வில் வாடுகிறார்கள் மக்கள். விலையை தீர்மானிக்கும் அதிகாரத்தை மீண்டும் அரசே எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அளவில் நாடு முழுவதும் போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

****
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் இணையதளங்களில் சென்று பார்த்தால் கடந்த 3 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாக 4 அல்லது 5 இலக்க கோடிகளில் நிகர லாபம் அவற்றுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிகர லாபம் மார்ச் 2008-ல் ரூ.6962.58 கோடி, 2009-ல் 2,949.55 கோடி, 2010 நிதி ஆண்டு இறுதியில் ரூ.10,220.55 கோடி. பன்னாட்டு எண்ணெய் நிறுவனங்களின் லாபமோ பல மடங்காக உயர்ந்து வருகின்றன.

"கெய்ர்ன் இந்தியா லிமிடெட்' (சி.ஐ.எல்.) என்ற பன்னாட்டு எண்ணெய் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 10 மடங்கு உயர்ந்திருக்கிறது என்று அந்த நிறுவனமே பெருமை பொங்க அறிவித்திருக்கிறது.

ராஜஸ்தானில் நிலப்பகுதியில் (கடலில் அல்ல) எண்ணெய் வளத்தை அகழ்ந்து எடுத்து சுத்திகரித்து விற்பனை செய்கிறது இந்த நிறுவனம். கடந்த ஆண்டு இதே காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.245.19 கோடி. இந்த ஆண்டு இது ரூ.2,457.79 கோடி. ஒரிரு ஆண்டுகளிலேயே நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 20% - அதாவது ஐந்தில் ஒரு பங்குத் தேவையை - பூர்த்தி செய்துவிட முடியும் என்று இந்தப் பன்னாட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

ராஜஸ்தானில் பூமிக்கடியில் மிகப்பெரிய கடல்போல தேங்கியுள்ள எண்ணெயை அகழ்ந்தெடுக்கும் மிகப்பெரிய ஒப்பந்தத்தை இந்தப் பன்னாட்டு நிறுவனம் பெற்று நமக்கே விற்று லாபம் சம்பாதிக்கிறது.

- தகவல் - தினமணி தலையங்கத்திலிருந்து...26/05/2011

May 18, 2011

ஈழம் - இன்று பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம்!

2009 மே 18ல் முள்ளி வாய்க்கால் படுகொலை!

உழைக்கும் மக்களே!

ஈழத் தமிழர்களுக்கு எதிரான
இன அழிப்பு போர்க் குற்றவாளி
ராஜபக்சேவைத் தண்டிப்போம்!

இனப்படுகொலைக்கு துணை நின்ற
மன்மோகன் அரசின்
முகத்திரையை கிழிப்போம்!

ஈழ மக்களின்
சுய நிர்ணய உரிமைக்கு
குரல் கொடுப்போம்!

இடம் : பனகல் மாளிகை, சைதாப்பேட்டை

நாள் : 18/05/2011 (இன்று) நேரம் : 4.30 மணி

ஏற்பாடு :

மக்கள் கலை இலக்கிய கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்பு கொள்ள : 9444834519

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்!

May 12, 2011

தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ மீது சாணம் வீசி ஓட, ஓட விரட்டியடித்த பெண்கள்!


ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்குலோயா என்ற ஊரில் ஆதிவாசிகள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அங்கு மான்யம் காடுகள் என்ற பகுதி உள்ளது.

அங்கு 'பாக்சைட் கனிமம்', பீங்கான் பொருள்கள் தயாரிக்கப் பயன்படும் 'சைனோ கிளே' என்ற விலை உயர்ந்த களிமண் நிறைந்து உள்ளன. மக்கள் பாக்சைட் கனிமம் வெட்டி வெடுக்க எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், 15,613 ஹெக்டர் நிலத்தில் உள்ள 60 லட்சம் டன் சைனா கிளே கனிமத்தை, வருடத்துக்கு 15 ஆயிரம் டன் களிமண் வீதம் வெட்டி எடுக்க அரசு குத்தகைக்குவிட்டது. அந்த தொகுதியின் தெலுங்கு தேச எம்.எல்.ஏ விவேரி சோமா தனது பினாமி ஆட்கள் பெயரில் இதை குத்தகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று அங்கு முதன் முதலாக சைனா கிளே களிமண்ணை வெட்டி எடுக்க ஆட்கள் சென்றனர். இதை அறிந்த ஆதிவாசிகள், துடைப்பம், முறம், கட்டைகள் போன்றவற்றுடன் அதிக அளவில் அங்கு திரண்டனர். களிமண்ணை வெட்டி எடுக்ககூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள்.

இதை அறிந்த எம்.எல்.ஏ. விவேரி சோமா, அந்த பகுதியின் மண்டல தலைவரோடு சமாதான பேச்சு வார்த்தை நடத்தினார்கள். சமாதானத்தை ஏற்காமல் அவர்கள் மீது சாணத்தை அள்ளி வீசினார்கள். எம்.எல்.ஏ-வும், மண்டல தலைவரும் தலை தெறிக்க ஓடி, காரில் ஏறி தப்ப முயன்றார்கள். காரையும் அடித்து நொறுக்கினார்கள். உயிர் பிழைத்தால் போதும் என ஓடிவிட்டனர்.