பள்ளி செல்லும் மூன்று சிறுமிகள் மூவர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். தீடீரென ஒரு சிறுமி காணாமல் போகிறாள். தலைவெட்டப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்டு உடல் மட்டும் ஓரிடத்தில் கிடைக்கிறது. யூதர்களை பொறுத்தவரையில் முறையாக முழுமையாக உடல் அடக்கம் செய்யப்படவேண்டும். இல்லையெனில் அதை பெரிய சிக்கலாக கருதுகிறார்கள்.
ஒரு அதிகாரி
ஒரு ஆண் ஆசிரியரை சந்தேகித்து போலீசு தன்
ஆட்களை இருவரை வைத்து அடித்து உதைத்து “உண்மையை” கக்க வைக்க முயற்சி செய்கிறார். ஆனால், அந்த காட்சிகள் மக்கள் மத்தியில் வைரலாகிறது.
இதனால் சம்பந்தப்பட்ட
அதிகாரிக்கு வேலை பறிபோகிறது. ஆனால் அந்த ஆசிரியரை பள்ளியில் மாணவர்கள் சந்தேகத்துடன்
பார்க்கிறார்கள். அவருடைய வேலையும் சிக்கலாகிறது.
வேலை இழந்த
அதிகாரி அந்த ஆசிரியரை கடத்தி வந்து ”உண்மையை” வரவழைத்து வேலையை காப்பாற்றிக்கொள்ளலாம்
என திட்டமிடுகிறார். அதே வேளையில் அந்த பெண்ணின் அப்பா அந்த ஆசிரியர் மீது கொலைவெறியோடு
சுற்றிக்கொண்டிருக்கிறார்.
அதற்கு பிறகு
நடப்பதெல்லாம் களேபரம் தான்.
****
படத்தின்
இறுதியில் எதையும் பளிச்சென சொல்லாமல், பார்வையாளர்களே சிந்திக்கட்டும் என இயக்குநர்
விட்டுவிடுகிறார்.
எந்த ஆதாரங்களின்
அடிப்படையில் அந்த போலீசு அந்த ஆசிரியரை சந்தேகிக்கிறது என்பதை கடைசி வரை சொல்லமாட்டார்கள்.
அந்த ஆசிரியரும் கடைசி வரை தான் குற்றம் செய்யவில்லை என சொல்லிக்கொண்டே இருப்பார்.
ஆதாரங்களின்
அடிப்படையில் முறையாக சட்ட விசாரணை நடைபெறாமல், கொலைவெறியோடு முன்முடிவோடு “விசாரணை”
செய்வது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதைத் தான் படம் சொல்கிறது.
படத்தில்
குதிரையில் ஒருவர் சுற்றிக்கொண்டிருப்பார்.
ஓரிடத்தில் கேட்பார். அரேபியன் என்றாலே ஏன் கொலை செய்ய போகிறவர் என்றே பார்க்கிறீர்கள்?
என்பார். அப்பொழுது தான் இது இசுரேலிய படம் என்பது நினைவுக்கு வருகிறது.
இந்தப் படம்
வெளிவந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளன. இரண்டு இயக்குநர்கள் எழுதி, இயக்கியுள்ளனர்.
எந்த ஓடிடியிலும் இல்லை. யூடியூப்பில் இருக்கிறது. அதன் சப்டைட்டில் செட்டிங்க்ஸ்ல் கொஞ்சம் மாற்றினால் தமிழிலேயே கிடைக்கிறது. பாருங்கள்.

