> குருத்து: October 2020

October 25, 2020

நிசப்தம் (2020)

 


இன்று (02/10/2020) அமேசான் பிரைமில் வெளிவந்திருக்கிறது.
வாய் பேச முடியாத, காது கேட்காத ஓவியர் அனுஷ்கா. அனாதை இல்லத்தில் வளர்கிறார். ஒரு பிரபல இசைக்கலைஞன் மாதவனுடன் காதல். நிச்சயதார்த்தம் என நகர்கிறது.
திடீரென ஒரு 'பேய்' வீட்டில் இசைக்கலைஞன் கொலை செய்யப்படுகிறான்.
பின்னணியில் என்ன நடந்தது என்பதை சொல்லியிருக்கிறார்கள்.
சில மாதங்களுக்கு பிறகு அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் என சின்ன திரையில் பார்க்க முடிகிறது. ஏன் மாற்றுத்திறனாளியாக அனுஷ்கா? தேவையேயில்லை.
பெண்களின் தொடர் கொலைகளுக்கான நியாயம் ஒட்டவேயில்லை. இதையே உல்ட்டா பண்ணி எடுத்தால் எதார்த்தமாக இருந்திருக்கும்.
கதைக்களம் அமெரிக்கா. பல மொழிகளில் ஒரே நேரத்தில் எடுத்ததால், பட்ஜெட் கிடைத்திருக்கும் போல! மற்றபடி நம்மூரிலேயே எடுத்திருக்க கூடிய கதை தான்.
எல்லா 'பேய்' கொலைகளுக்கு பின்னாலும், ஏதோ மனிதர்களின் 'சதி' இருக்கிறது என்ற செய்தி பிடித்திருந்தது. 🙂

Midnight Runners (2017) Korean


கதை. போலீஸ் அகாடமியின் பயிற்சியின் பொழுது இருவர் நண்பர்களாகிறார்கள். இரண்டு வருடங்கள் கடக்கின்றன. தங்களுடன் பயிற்சியில் இருக்கும் ஒருவனுக்கு தோழி ஒருவள் இருக்கிறாள். எப்படி என விசாரிக்கும் பொழுது, பப்பில் சந்தித்ததாக சொல்கிறான். இவர்களும் ஆர்வமாக வெளியே வர அனுமதிவாங்கி, பப்புக்கு வருகிறார்கள். நடுநிசி வேளையில் வீடு திரும்பும் பொழுது, ஒரு இளம்பெண் கண்ணில்படுகிறாள். அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அந்த பெண்ணை காரில் கடத்துகிறார்கள். முயன்றும், அவர்களால் தடுத்து நிறுத்தமுடியவில்லை.

ஒருவர் கடத்தப்பட்ட பிறகு வருகிற ஏழு மணி நேரம் என்பது முக்கியமான நேரங்கள் (Critical Hours). அதற்குள் கடத்தப்பட்டவர்களை மீட்டுவிடவேண்டும். இல்லையெனில் சிரமம் என பாடத்தில் படித்திருப்பார்கள். அதனால், உடனடியாக போலீஸ் ஸ்டேசனில் போய் புகார் தெரிவிக்கிறார்கள். அவர்களோ வேறு வேறு வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரிய அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கிறது. இருவருமே தங்கள் கற்றதை வைத்துக்கொண்டு, விசாரித்து, விசாரித்து, கடத்திய பெண்ணை கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

அங்கு அந்த பெண் மட்டுமல்ல! நிறைய இளம்பெண்கள் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடத்திய ஆட்களோ ஒரு மாபியா கும்பலாக இருக்கிறது. எதற்காக இளம்பெண்கள் கடத்தப்பட்டார்கள்? அந்த பெண்களை அவர்கள் மீட்டார்களா என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

****

இரண்டு கத்துக்குட்டிகள். தங்களை விட இளம்வயது பெண் கடத்தப்படுவதைப் பார்த்து பதைப்பதைத்து ஒரு மனிதாபிமானத்துடன் மல்லுக்கட்டுவதை உணர்வுபூர்வமாகவும், காட்சிகளில் நகைச்சுவையாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

கற்பது வேறு. நடைமுறை வேறு என்கிற முரண்பாட்டை அவர்கள் உணரும் இடம் முக்கியமான இடம். பெண்ணை கடத்தி சென்றுவிட்டார்கள் என இவர்கள் பதைபதைப்புடன் வந்து சொல்லும் பொழுது, அங்கிருக்கும் ஒரு போலீசு அதிகாரி ”ஒரு பெரிய விஜபியினுடைய பேரன் காணாமல் போய்விட்டான். என்னவென்று உடனே பாருங்கள் என மேலிருந்து உத்தரவு வந்திருக்கிறது. மேலிட உத்தரவு ரெம்ப முக்கியம்” என சொல்லி வேகமாக கிளம்பி செல்வார்.

நம்மூரில் எளிய மக்களின் புகாரை போலீஸ் ஸ்டேசனில் பதிவு செய்வதே பெரிய போராட்டம் தான். பல சமயங்களில் அவர்களை வழக்கை பதிய வைப்பதற்கே, ஒரு வழக்கறிஞரை பார்த்து, உயர்நீதிமன்றத்தில் வழக்காடி உத்தரவு வாங்கி வரவேண்டியிருக்கும். அப்பவும் போலீசு உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்கமாட்டார்கள். ”உங்க உத்திரவை மதிக்க மாட்டேங்கிறாங்க!” என திரும்பவும் நீதிமன்றத்தில் வரிசையில் நிற்கவேண்டியிருக்கும். இப்படி பல ஆயிரம் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தேங்கி கிடக்கின்றன என்பது தனிக்கதை. ஆனால், அதிகாரத்தில், ஆட்சியில், பணம் படைத்தவர்களுக்கு போலீசில் கிடைக்கும் மரியாதை எப்போதும் தனிதான்.

கத்துக்குட்டிகள் இந்த உண்மையை, எதார்த்தத்தை பணியில் சேர்ந்த சில நாட்களிலேயே கற்றுக்கொள்வார்கள். பிறகு அதுவே பழக்கமாகிவிடும். பிறகு அந்த உயரதிகாரியை போலவே ”சாமர்த்தியமாக” நடந்துகொள்வார்கள்.

மற்றபடி, கமர்சியலான படம். நண்பர்கள் இருவரும் சிறப்பாக தங்கள் பாத்திரத்தை தாங்கியிருக்கிறார்கள். வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

படம்_செய்தி :

எதார்த்தம் ஒன்றாகவும், பாடம் நடத்துவது ஒன்றாகவும் இருப்பதைப் பார்த்து ஆசிரியரை உற்றுப்பார்க்கிறார்கள்.

Nightcrawler (2014) English


கதை. நாயகன் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்துவருகிறான். ஒருநாள் இரவு ஒரு விபத்து. அங்கு வந்த ஒரு நிருபர் வேகவேகமாக வந்து அந்த விபத்தை எடுத்துவிட்டு உடனே கிளம்புகிறார். எதையும் வேகமாக கற்கும் திறனுள்ள (பெரும்பாலான திருடர்களுக்கு உள்ள விசேச திறன் அது) அவன் இதன் மூலம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்கிறான்.

கையிருப்பை வைத்து, ஒரு கார், ஒரு கேண்டி கேமிரா, போலீஸ் தங்களுக்குள் பேசிக்கொள்ளும் வயர்லெஸ் செய்திகளை ஒட்டு கேட்க ஒரு ரேடியோ, ஒரு தொலைக்காட்சி நிறுவனத்தோடு தொடர்பு என அடிப்படையான அம்சங்களை தயார் செய்து இரவுகளில் அலைய துவங்குகிறான். முதலில் ஏமாற்றம் இருந்தாலும், மெல்ல மெல்ல முன்னேறுகிறான். அவன் தரும் வீடியோக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஒரு முன்னாள் திருடன் என்பதால், தன்னுடைய வளர்ச்சி மட்டும் தான் கண்முன்னால் நிற்கிறது. ஒரு பத்திரிக்கையாளனுக்குரிய அறம் என்பதே அவனிடம் இல்லை. அந்த தொலைக்காட்சி சானலின் முதலாளிக்கும் திருடனைப் போலவே தன் வளர்ச்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது.

அதற்கு பிறகு அவன் செய்வதெல்லாம் இன்னும் மோசமான கிரிமினல் வேலைகளாக இருக்கிறது. இறுதியில் என்ன ஆனது என்பதை யதார்த்தமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லியிருக்கிறார்கள்.

*****

தொலைக்காட்சி சானல்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் கூடிக்கொண்டே போகின்றன. பெரும்பாலான தொலைக்காட்சி சானல்கள் பெரும் முதலாளிகளின் சானல்களாக இருக்கின்றன. கட்சிகளுனுடையதாக இருக்கின்றன. எந்த செய்தியை முதன்மைப்படுத்துவது: எதை விடுவது என்பதில் மிகவும் கவனமாக இருக்கின்றன. இதில் எந்த ஊடகமாவது ‘’நடுநிலை’ என்று சொன்னால் வாய் கொள்ளாமல் சிரித்துவிடுகிறேன்.

இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு பத்திரிக்கையாளன் தனக்கான அறம் என்பதை கடைப்பிடிக்க இங்கு வாய்ப்பேயில்லை. அப்படி கடைப்பிடித்தால், அவனால் அங்கு நீடிக்கமுடிவதில்லை. சமீபத்திய தமிழகத்து சானல்களில் நடந்துகொண்டிருக்கும் நிலை இதுதான்.

நேர்மையில்லாத பத்திரிக்கையாளன் என்றே நேரடியாக கதையில் சொல்லியிருக்கலாம். அவனை ஏன் ஒரு திருடன் என சொன்னார்கள் என்பது தான் எனக்கு வியப்பு. அவன் திருடன். ஆனால், தொலைக்காட்சி சானலின் முதலாளியின் கூட்டு அருமையாக பொருந்துகிறதே! அது எப்படி? அது தான் கள எதார்த்த நிலைமையாக இருக்கிறது.

இதில் பார்வையாளர்களின் நிலை தான் மிகவும் சிக்கலானது. செய்திகளுக்கு பின்னால் தான் உண்மை இருக்கிறது என்பார்கள். பார்வையாளர்களுக்கு ஒரு தெளிவான பார்வை இருந்தால் தான் நம்மால் உண்மையை கண்டறியமுடியும். இல்லையெனில் நம்மை எல்லாம் இருட்டிலேயே தான் வைத்திருப்பார்கள். அதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.

படம் பட்ஜெட் படமாக இருந்தாலும், படம் எடுத்துக்கொண்ட கதைக்கரு என்பது சமூகத்தை பாதிக்க கூடியதாக இருக்கிறது. ஆகையால், இந்தப் படம் கவனிக்கத்தக்கதாய் இருக்கிறது.

படத்தின் முடிவும் அத்தனை எதார்த்தம். 'நீதிக்கதை'யை போல அவனை தண்டிக்காமல், மங்காத்தாவின் முடிவு தான். படத்தின் இறுதியில் தனது எல்லைகளை விரிவாக்குகிறான்.

படத்தில் சொற்ப பாத்திரங்கள் தான். ஆனால், எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். இதில் நாயகனும், அந்த சானல் முதலாளியும், அந்த சானலில் முதன்மை பத்திரிக்கையாளரின் நடிப்பும் சிறப்பு.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள்.

Fabricated City (2017) South Korea


கதை. நாயகன் இளைஞன். தன்னுடைய பொழுதையெல்லாம், கண்ணுக்கு தெரியாத நண்பர்களுடன் வீடியோ விளையாட்டு விளையாடி பொழுதை போக்குகிறான். ”உருப்படுற வேலையை பாருடா” என அவனுடைய அம்மா திட்டிக்கொண்டே இருக்கிறார்.

ஒரு இளம்பெண்ணை பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்ப்பட்ட வழக்கில் சம்பந்தமில்லாத இவன் வலுவாக சிக்கவைக்கப்படுகிறான். நாடே கொந்தளிக்கிறது. பரோல் இல்லாத ஆயுள் தண்டனை. சிறையிலும் மாபியா கும்பல் அவனை சித்திரவதை செய்கிறது. தன் மகன் அப்பாவி என தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த அவனின் அம்மாவும் ‘தற்கொலை’ செய்துகொண்டதாக தகவல் சொல்கிறார்கள்.

சிறையிலிருந்து தப்பிக்கிறான். தன்னுடைய வீடியோ கேம் நண்பர்கள் உதவுகிறார்கள். யார் தன்னை சிக்க வைத்தார்கள் என தேடும் பொழுது தான் அவர்களின் வலைப்பின்னல் மிகவும் சிக்கலாக இருப்பதை உணர்கிறான். வழக்கிலிருந்து தப்பித்தானா என்பதை பரபர சண்டை காட்சிகளுடனும், கொஞ்சம் நகைச்சுவை கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

****


தமிழ் ரசிகர்களுக்கு இந்த கதை ஏற்கனவே பழகியது தான். படம் வணிக ரீதியிலாக எடுக்கப்பட்டப் படம் தான். ஆனால் எடுத்தவிதத்தில் பார்க்க வைக்கிறார்கள்.

சக வீடியோ விளையாடுகிறவர்கள் தான் இந்தப் படத்தில் நண்பர்கள் என்பது புதுசாக இருந்தது. நாயகனுக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதிலும், நகைச்சுவைப் பகுதியையும் இவர்கள் தான் கவனித்துக்கொள்கிறார்கள். கூடுதலாக மாபியா கும்பலின் தலைவனும் அவ்வப்பொழுது சிரிக்க வைக்கிறார்.

இரும்பு திரையில் வரும் அர்ஜுன் தனக்கென நெட்வொர்க்கை உருவாக்கி மிகுந்த வலுவுள்ளவனாக காட்டியிருப்பார்கள். இந்தப் படத்திலும் அப்படி ஒரு வில்லனை காட்டியிருப்பார்கள். உட்கார்ந்த இடத்தில் எல்லோரையும் கண்காணிக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி கொஞ்சம் மலைக்கத்தான் வைக்கிறது.

தமிழில் மொழிமாற்றம் செய்தும் கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் பாருங்கள்.

Stree (பெண்) 2018


Hindi Comedy Horror

கதை. நாயகன் பெண்கள் உடை தைப்பதில் கைதேர்ந்தவன். கண்களாலே அளவெடுத்துவிடுகிறான். ஊர் திருவிழாவிற்கு வந்த நாயகி அவனை தனியாக சந்தித்து, தன் ஆடையை விரைவில் தைக்க சொல்லி வேண்டுகிறாள். மிகுந்த விருப்பத்துடன் சம்மதிக்கிறான்.

வட இந்தியாவில் ஒரு பழமையான கிராமம் அது. வருடம் தோறும் திருவிழா நடக்கும் நாட்களில், ஸ்திரி என்ற 'பிசாசு' ஊரைச் சுற்றிவரும். இளைஞர்கள் தனியாக சிக்கினால், அலேக்காக தூக்கிசென்றுவிடும். அதனால் ஸ்திரியை திசை திருப்பும் விதமாக "ஸ்திரி நாளை வா!" என எல்லோருடைய வீடுகளிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். அந்த மக்குப் பிசாசும் கட்டுப்படுகிறது.

இதற்கிடையில், இளைஞர்கள் ஒரு வீட்டில் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடுகிறார்கள். இடையில் வெளியில் வந்த நாயகன் விளையாட்டாய் உச்சாப் போய் "ஸ்திரி நாளை வா!" வார்த்தைகளில், "நாளை" அழித்துவிடுகிறான். மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. பிசாசு ஒரு இளைஞனை தூக்கி சென்றுவிடுகிறது. ஊரே களேபரமாகிவிடுகிறது.

நாயகனை நாயகி எப்பொழுதும் தனியாகவே சந்திக்கிறாள். சில விசேஷ பொருட்களையும் வாங்கி வரச்சொல்கிறாள். நாயகனின் நண்பன் அவள் 'ஸ்திரி'யாக இருக்கலாம் என எச்சரிக்கிறான்.

நாயகி தான் பேயா? நாயகியை காதலித்த நாயகன் என்ன ஆனான்? என்பதை கலகலப்பாகவும், பயமுறுத்தியும் சொல்லியிருக்கிறார்கள்.

*****

கர்நாடகத்தின் ஒரு பின்தங்கிய கிராமத்தில் நிலவுகிற ஒரு மூடக் கதையை எடுத்துக்கொண்டு, மத்திய இந்தியாவில் பொருத்தி இந்திப் படமாக எடுத்திருக்கிறார்கள்.

ஒரு சின்ன கிராமம். சில கதாப்பாத்திரங்கள். பிசாசை நம்பி, களத்தில் குதித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.

'ஸ்திரி' பிசாசுக்கு சொல்லப்படுகிற கதையும், படத்தின் இறுதியில் சொல்லப்படுகிற செய்தியும் உணர்வுபூர்வமானவை. முடித்தவிதமும் பாராட்டத்தக்கவை.

நாயகியை சுற்றிய படம் என்றாலும், ஸ்ரத்தா கபூரை விட, நாயகன் ராஜ்குமார் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் புகுந்து விளையாடுகிறார். மற்ற பாத்திரங்களும் சிறப்பு.

இந்தப் படம் பிலிம்பேர் விருதுகளுக்காக பல பிரிவுகளில் பரிந்துரைப்பட்டிருந்தாலும், 'அறிமுக இயக்குநர் பிரிவில்' இயக்குனர் வெற்றிபெற்றிருக்கிறார். படத்தின் வெற்றியில் இரண்டாவது கதை எடுக்க திட்டமிருக்கிறது என்கிறார்கள்.

பேய் படங்களை ஒரே மாதிரியே எடுக்காமல், நம்மூர்களில் நிலவுகிற இது போன்ற கதைகளை எடுத்தால், புதுசாவும் இருக்கும். இயல்பாகவும் இருக்கும்.

யூடியூப்பில் ஆங்கில சப் டைட்டிலுடன் நல்ல பிரதி இலவசமாக கிடைக்கிறது. பாருங்கள்.

ஒரு நீல திமிங்கலத்தின் கதை!

 


ஆயிரத்து தொளாயிரத்து எண்பதுகளின் இறுதியில் ரஷ்யாவுக்கும் அமேரிக்காவுக்குமான பனிப்போர் உக்கிரமாக இருந்த காலப்பகுதியில் , கிடைத்த இடைவெளியில் எல்லாம் தமது நாட்டின் பலத்தையும் செல்வாக்கையும் நிலை நிறுத்துவதில் இந்த இரண்டு நாடுகளும் கடும் முனைப்புக்காட்டின. தரை, ஆகாயம், அண்டவெளி என்று நீண்ட இந்தப் பனிப்போரின் விளைவுகள் ஆழ்கடலையும் ஆக்கிரமித்தது. ரஷ்யாவின் நீர்மூழ்கிக் கப்பல்களின் ரேடியோ சமிக்கைகளை ஒட்டுக்கேட்பதற்கென்று நீருக்கடியில் தொலைதூரத்திலும் கேட்கும் சத்தங்களை, ஒலி அலைவரிசைகளை உணரும் விசேட ஒலிவாங்கிகளை ( Hydrophone) பொருத்திய அதி நவீன நீர்மூழ்கிக் கப்பல்களை தயாரியித்து கடலின் அடியில் அனுப்பியது அமேரிக்கா. 1989 இல் 52Hz வலுவுடைய ஒரு ஒலியை இந்த நீர்மூழ்கிக் கப்பலொன்றின் ஒலிவாங்கி பதிவு செய்கிறது. தீர்க்கமாய் ஆராய்ந்தவிடத்தில் அது திமிங்கிலம் ஒன்றின் பாடல் என்பதைக் கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் இது மிகவும் விசித்திரமான பாடலாக இருந்தது.

திமிங்கிலங்கள் நீரில் வாழும் பாலூட்டிகள். நிலத்தில் வாழ்ந்துவிட்டு சில பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் வாழப் புகுந்த விலங்குகள். இன்னமும் குட்டி போட்டு பாலூட்டுகிற தொட்டில் பழக்கத்தை தொடருவதோடு மிகவும் நெருக்கமான குடும்ப உறவுகளைப் பேணுபவை. திமிங்கிலங்கள் கூட்டமாக வாழும். அம்மா, அப்பா, பிள்ளைகள், மாமன் , மச்சான் , சித்தப்பா , பெரியப்பா , நண்பர்கள் என்று அதன் கூட்ட்த்தில் ஆட்கள் இருப்பார்கள். சுறாக்களைப் போல திமிங்கிலங்கள் தனிமை ( Solidary ) விலங்குகள் கிடையாது. உண்மையைச் சொல்லப்போனால் கூட்டாக வாழும் போது தான் திமிங்கிலங்கள் ஆரோக்கியமாக வாழுகின்றன. டொல்பின்களைப் போலவே திமிங்கிலங்களும் சமூக விலங்குகள்.

திமிங்கிலங்களுக்கு மொழி உண்டு. நமது அறிவு அதை வித்தியாசமான ஒலிகளாக வகைப் படுத்துகிறது. இந்த ஒலி மொழியை திமிங்கிலங்கள் உணவைக் கண்டு பிடிக்கவும், இணைய அழைக்கவும், குடும்பத்தவர்களை ஒன்று சேர்க்கவும் பயன்படுத்தும். இதை திமிங்கிலங்களின் பாடல்கள் என்பார்கள். மனிதர்களுக்குள் வட்டார வழக்கு இருப்பதைப் போல திமிங்கலங்களுக்குள்ளும் வட்டார வழக்கு உண்டு. உலகின் வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் திமிங்கிலங்கள் வெவ்வேறு வட்டார வழக்குகளைப் பேசுகின்றன. அவற்றின் மொழியில் ஒரு பொதுக் கருத்து இருந்தாலுமே கூட அவற்றின் வட்டார வழக்கின் துல்லியத்தன்மையும் குறிப்பிடத்தக்கது. குறித்த 52Hz இல் பாடலைப் பாடிய திமிங்கிலம் ஒரு நீலத்திமிங்கிலம் என்று அறிந்த போது ஒட்டுமொத்த அறிவியல் உலகமும் ஒருகணம் அதிர்ந்தது. உலகில் வாழுகின்ற விலங்குகளில் ( வாழ்ந்து இறந்துபோன டைனோசரைவிடவும் என்ற கோட்பாடும் உண்டு ) ஆகப் பெரியது நீலத்திமிங்கிலம் ஆகும். ஆனால் இவற்றின் பாடல்கள் 15Hz-40Hz வரைக்குமே இருக்கும். 40 என்பது கூட அதிகப்படி தான். சராசரியான பாடலின் அதிர்வெண் 15Hz-25Hz தான்.

இது விஞ்ஞானிகளை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் தள்ளவே குறித்த திமிங்கிலத்திற்கு "Whale 52 " என்ற பெயரைச் சூட்டி அது குறித்து மேலும் தேட ஆரம்பிக்கிறார்கள். நெஞ்சு கனக்கிற உண்மைகள் வெளியே வர ஆரம்பிக்கின்றன. Hydrophone மூலம் தொடர்ந்தும் அந்த திமிங்கிலத்தின் பாடல்களைச் சேகரிக்கிறார்கள். 1989-2004 வரை இந்த சேகரிப்பு தொடர்ச்சியாக நடக்கிறது.

ஆய்வுகளின் முடிவில் அது தனிமையில் உழல்கிற ஒரு திமிங்கிலம் என்பதைக் கண்டறிகிறார்கள். நான் முன்பு சொன்னது போல , குடும்பமோ , இணையோ, நண்பர்களோ இல்லாத ஒரு தனிமைத் திமிங்கிலம்... அதை தொடர்ச்சியாக ஆய்வு செய்த பதினைந்து வருடங்களிலும் , அதன் பிறகு 2013 வரை விவரணப் படத்திற்காக இடையிடையே ஆராய்ந்த போதும் சரி அந்தத் திமிங்கிலம் இன்னுமொரு சக திமிங்கிலத்தை சந்தித்தேயிருக்கவில்லை. அதன் துயரம் மிகுந்த பாடல் கடல் முழுவதும் அதிர்ந்துகொண்டேயிருந்தது. திமிங்கிலங்களின் பாடல்களில் துயர் மிகுந்த பாடல்களும் உண்டு. உணவு, மகிழ்ச்சி, இணை கூடுவது தவிர துக்கத்திலும் தனிமையிலும் திமிங்கிலங்கள் பாடலைப் பாடுகின்றன. இந்தப் பாடல்கள் இணை, குடும்பம் , நண்பர்களுக்கு மட்டுமானது அல்ல, எவரேனும் ஒரு சக இனத்தவர் அதைக் கேட்டு பதில் அளிக்கும்படி இரஞ்சிப் பாடுவது. Whale 52 ன் அழைப்புப் பாடலை முதலில் அது இணை கூடுவதற்காக பாடுகிறது என்று விஞ்ஞானிகள் கருதினார்கள். ஆனால் அந்தப் பாடல் திமிங்கிலங்களின் இணைகூடற் காலம் கழிந்தும் ஒலித்துக்கொண்டிருந்தது. அப்போது தான் அது ஏதேனும் ஒரு திமிங்கிலமாவது தனது குரலுக்கு பதில் கொடுக்காதா என்ற துயரோடு பாடுவது கண்டறியப்பட்டது.

Whale 52 இன் குரலுக்கு மூன்று தசாப்தகாலமாக எந்தத் திமிங்கிலமும் பதில் கொடுக்கவில்லை. 15Hz-25Hz அதிர்வெண் கணக்கில் தமக்குள் உரையாடிக்கொண்டும், அழைத்துக்கொண்டும் , அழைப்புக்கு அதில் சொல்லிக்கொண்டிருக்கும் நீலத்திமிங்கிலங்கள் 52Hz அளவில் வந்த இந்த துயரம் மிகுந்த அழைப்பை கேட்டிருந்தாலுமே கூட அதை இன்னுமொரு திமிங்கிலத்தின் அழைப்பாக நினைத்து பதில் கொடுக்கவில்லை. காரணம் அவைகளைப் பொறுத்தமட்டில் இது அவர்களில் ஒருவனின் ஒலி கிடையாது. வழக்கத்துக்கு மாறாக 52Hz இல் இந்த திமிங்கிலம் ஒலியெழுப்ப என்ன காரணம் என்று விஞ்ஞானிகள் மட்டில் தீர்க்கமான ஒரு முடிவு இல்லை. ஆனால் இது ஒரு Hybrid திமிங்கிலமாக இருக்க முடியும் என்கிற அனுமானம் வலுவானது. நீலத்திமிங்கிலம் ஒன்றிற்கும் Fin திமிங்கிலம் ஒன்றிற்கு பிறந்த குட்டியாக இது இருக்க முடியும். சிறிது வளர்ந்ததும் நீலத்திமிங்கிலம் போலவோ , fin திமிங்கிலம் போலவோ ஒலியெழுப்ப முடியாத இந்த திமிங்கிலம் துரத்தியடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் Whale 52 ஒரு வழித்துணைக்காகவேனும் சக திமிங்கிலத்தைக் காண துயர் மிகுந்த அழைப்புகளை ஆழ்கடலில் பாடியபடி அலையத்தொடங்கியிருக்கிறது.

Whale 52 இன் பயணப்பாதையை விஞ்ன்கானிகள் தொடர்ந்தார்கள். அது உலகில் வழக்கில் இருக்கிற திமிங்கில பயணப்பாதை எதனோடும் ஒத்துப் போகவில்லை. அது துயர்மிகுந்த அழைப்புகளை ஏற்படுத்தியபடி உலகின் சமித்திரங்களெங்கும் இலக்கில்லாமல் அலைகிறது. திமிங்கிலங்களுக்கு பயணப் பாதை உண்டு, நல்ல உணவு, சுத்தமான நீரோட்டம் , கருத்தரிக்க சிறந்த நீர் , குட்டிகளை பராமரிக்க உகந்த கடல் இப்படியாக அனைத்தும் ஒவ்பொரு வருடத்திலும் உலகின் எந்த கடல்பகுதியில் கிடைக்கும் என்று திமிங்கிலங்களுக்கு தெரியும். தெரியும் என்றால் அது மூளையில் பிறப்பிலிருந்தே இருபது அல்ல. தாய், தந்தை, குழுவில் மூத்த திமிங்கிலங்கள் என்று உரையாடல்கள் மூலமும், ஒவ்வொரு வருடமும் பிரயாணப்படுகிற அனுபவத்தின் மூலமும் அறிந்துகொள்ளப்படுபவை. இதற்காகவே திமிங்கிலங்கள் வருடம்தோறும் உலகைச் சுற்றி வருகின்றன. இதற்கான பாதை தான் திமிங்கிலங்களின் பாதை. ஆனால் whale 52 ற்கு அது எதுவும் கிடையாது. தெரியாது. அதற்கு யாரும் சொல்லிக்கொடுக்கவில்லை. அதன் தேவையெல்லாம் இன்னொரு திமிங்கிலத்தைப் பார்த்துவிடவேண்டும். துரதிஷ்டவசமாக whale 52 ஏனைய திமிங்கிலங்களில் பயணப்பாதையில் வரவே இல்லை. அது தனது இனத்துக்கான தேடலோடு குரல் எழுப்பியபடி இன்னமும் விலகி விலகி நீந்தியது. தற்செயலாக அது ஒருநாள் திமிங்கில குழு ஒன்றின் பயணப்பாதையை கடந்த போது அது பனிக்காலமாக இருந்தது. ஆனால் கோடையில் தான் அந்தப் பாதையில் திமிங்கிலங்கள் வரும். இன்னொரு நேரம் பனிக்கால பயணப்பாதையை கோடையில் கடந்தது. அதன் அழைப்பு எதற்கும் பதில் இல்லை.

இந்த உலகை 97% போர்த்தியிருக்கும் இந்த பரந்த அடர்ந்த சமுத்திரங்களில் அது தனியாகவே அலைந்துகொண்டிருந்தது. Whale 52 இன் கதை பொதுமக்களுக்கு தெரியவந்தபோது அனேகர் அதற்காக பரிதாபப்பட்டனர். குழுவாக வாழவென்று பரிணாமமடைந்து விலங்கு, மனிதர்களைப் போலவே குடும்ப உணர்வுகளைக் கொண்ட ஒரு விலங்கு இருபது, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னொரு திமிங்கிலத்தை சந்தித்துவிட வேண்டும் என்ற துயரோடு அந்தப் பரந்து விரிந்த சமுத்திரத்தின் தனிமையில் சுற்றிக்கொண்டிருபது மக்களை நெகிழ வைத்தது. Whale 52க்கு ஆதரவளித்தும், அதன் நலன் விசாரித்தும், அதன் தனிமையிலும் துபத்திலும் பங்கெடுத்து அழுகிற ஆயிரக்கணக்கான கடிதங்கள் , ஈமெயில்கள் ஆராட்சியாளர்களை அடைந்தன.

உண்மையில் திமிங்கிலத்தின் மேல் வந்த இரக்க உணர்வு என்பற்கு மேலாய் மனிதர்கள் தம்மைக் குறித்து கவலைப்பட்டார்கள். தங்களைப் போலவே சமூக கட்டமைப்புள்ள ஒரு விலங்கு, பரந்து விரிந்த ஆளரவமற்ற கடல் , அழைக்கும் குரலுக்கு பதில் இல்லை, முப்பது ஆண்டுகளாகத் தனிமை , இப்படியாக தனிமை குறித்த மனிதர்களது பயத்தையும் பரந்த இந்த சமூகத்தில் அவர்களுக்கு இருக்கிற insecure feel ஐயும் Whale 52 விடயத்தில் மனிதர்கள் வெளிக்காட்டினார்கள். சமூகமட்டத்தில் தங்களது இருப்போடு whale 52 ஐ அவர்களால் இலகுவில் பொருத்திப்பார்க்க முடிந்தது. உண்மையில் அவர்களை அறியாமலே அவர்கள் மனம் அதைச் செய்தது. வந்த கடிதங்களிலும், ஈமெயில்களிலும் பெரும்பாலானவை பெண்களிடமிருந்து வந்தது.

2004 வரையான தொடர்ச்சியான அதன் குரல் பதிவுகள் வரையிலும் அது இன்னுமொரு திமிங்கிலத்தைச் சந்திக்கவில்லை. அதன் பாடலுக்கு பதில் வரவுமில்லை. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் இந்த திமிங்கிலத்தை யாரும் பார்த்தது கிடையாது. தசாப்தகாலமாக பாடலாக மட்டுமே அது பதிவாகியிருக்கிறது. 2013 இல் whale 52 தொடர்பிலான விவரணப் படம் ஒன்றை எடுக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு லியனாடோ டீ காப்ரியோ நிதியுதவி அளித்திருந்தார். தனிமையாக அறியப்பட்ட விலங்கு அறியப்பட்டவரைக்கும் தனிமையிலே உழன்று மனிதத் தேடல்களில் இருந்து மறைந்து போனது.

அநாவசியம் என்றாலும் , இந்த whale 52 தொடர்பில் நான் படிக்கும் போது எனக்கு தோன்றிய ஒன்றைச் சொல்கிறேன். கிட்டத்தட்ட நாமும் whale 52 தான். உண்மையான உறவு, உண்மைக் காதல், உண்மை நட்பு என்று genuine authentic உறவுகளுக்கான உணர்வு போராட்டம் எம் வாழ்க்கையில் ஒரு அங்கம். அதை அடைந்து கொள்வதற்கான தேடல் ஒவ்வொரு நாளும் நடக்கிறது...
முயற்சி செய்கிறோம். அடைகிறோம் அல்லது அடைய முடிவதில்லை. சில நேரம் அடைந்தாலும் இடையில் பிரிகிறோம்.

Are we singing the correct song at correct pitch ?

- Kishoker Stanislas

Drag me to Hell (2009) Horror


கதை. நாயகி வங்கியில் பணிபுரிகிறார். அவருடைய வேலை திறனால், அவருக்கு விரைவில் உதவி மேலாளர் பதவி கிடைக்க இருக்க கூடிய நல்ல தருணம். இந்த சமயத்தில் தன்னால் வீட்டுக்கடனை அடைக்கமுடியவில்லை. இன்னும் கூடுதல் காலம் வேண்டும் என கேட்டு வருகிறார் ஒரு வயதான அம்மா.

மேலாளரிடம் விவாதிக்கும் பொழுது, “நீயே முடிவெடு!” என்கிறார். ரிஸ்க் வேண்டாம் என முடிவெடுத்து, கூடுதல் தவணைக்கு வாய்ப்பில்லை என மறுத்துவிடுகிறார். முதலில் கெஞ்சும் அம்மா, அங்கு நடக்கும் களேபரத்தால், கடுப்பாகி திட்டிவிடுகிறாள். வலுக்கட்டாயமாக வெளியேற்றுகிறார்கள்.

இரவு வேலை முடிந்து, பார்க்கில் வண்டியை எடுக்கும் பொழுது, அந்த அம்மா காத்திருந்து தாக்குகிறாள். இறுதியில் எதையோ ஓதிவிட்டு சென்றுவிடுகிறாள்.

அதற்கு பிறகு அவளைச் சுற்றி நடப்பது எல்லாம் கோளாறாகவும், பயமுறுத்துவையாகவும் இருக்கின்றன. தன்னை காதலிக்கும் மருத்துவனோடு, பில்லி, சூன்யம் தொடர்பான ஒரு நபரை சந்திக்கிறார்கள். அவன் சோதித்துவிட்டு, ”அந்த அம்மா உன்னை கடுமையாக சபித்து இருக்கிறாள். இன்னும் மூன்று நாள். அந்த சாபத்தில் இருந்து விடுபடவேண்டும். இல்லையெனில், உயிரை பறித்துக்கொண்டு போய்விடும்” என திகிலூட்டுகிறான்.

பிறகு என்ன நடந்தது எனபது முழு நீள பயமுறுத்துகிற கதை.

***** 


1981ல் Evil Dead என்றொரு பேய்ப்படம். சமீபத்திய Conjuring போல மிகப்பிரபல படம். உலகையே அலற வைத்தது. அதன் தாக்கம் உலகம் முழுவதிலும் எடுக்கப்பட்ட பேய்ப்படங்களில் இருந்தது. மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்த மைடியர் லிசாவில் அதன் தாக்கம் அதிகம். அந்தப் படம் பார்த்து சிறுவயதில் அவ்வளவு பயந்திருக்கிறேன். அந்த பிரபல இயக்குனர் Sam Raimi. அவர் வேறு வேறு படங்கள் எடுத்து பிறகு பேய்ப்படம் எடுத்தார். அது தான் இந்தப்படம்.

சூன்யக்கார கிழவி என்பார்களே அது போல அந்த வயதான அம்மாவை காண்பித்திருப்பார்கள். அருமையாக பயமுறுத்திருக்கிறார். நாயகியும் சிறப்பாக பயந்திருக்கிறார். பிறகு அந்த சாபத்தை நீக்க போராடும் இடமும் காட்சிகளும் அருமை. கடைசியில் வருகிற ட்விஸ்ட் எதிர்பாராதது.

ஒரு இடத்தில் தனக்கு கிடைத்த சாபத்தை யாருக்கு கைமாற்றிவிடலாம் என நாயகி யோசிப்பாள். அதுபோல நமக்கு இந்த சாபம் கிடைத்து யாருக்கு கைமாற்றிவிடலாம் என யோசித்தால், தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பலபேர் மனதில் வந்துபோனார்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், யாருக்கு கைமாற்றிவிடுவீர்கள்?

எதிர்ப்பார்ப்பு இல்லாமல் பாருங்கள். உங்களுக்கும் கொஞ்சம் பயம் வரும். கொஞ்சம் சில்லிடவைக்கும்.

ஒரு மரணம் - சில குறிப்புகள்


தொன்னுறை தொட்ட
ஆலமரம் போல
நிறைய கிளைகள் விரித்து...
நிறைய பிள்ளைகள்,
நிறைய பேரப்பிள்ளைகள் என
முழுமையாய் வாழ்ந்த மனுசி அவள்.

பிள்ளைகளில் பலர்
நன்றாக படித்து
நல்ல பதவிகளில் இருக்கிறார்கள்.

காலையில் இருந்து
யார் வந்தாலும்
அரற்றிக்கொண்டே வருகிறார்கள்.
அந்த அறையில் இருக்கும்
பெண்கள் ஒவ்வொரு முறையும்
கண் கலங்குகிறார்கள்.
ஆண்கள் வெளியே அமர்ந்து
செய்தித்தாள்களை
படித்து கொண்டிருக்கிறார்கள்.

மேளக்காரர்கள்
சோகப்பாடல்களை
இசைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.

நோயில் வாடாமல்
மருத்துவமனையில் சிக்காமல்
சாவு கூட
அந்த மனுசியை
ஆசிர்வதித்து இருக்கிறது.

இந்த சாவு துக்கமல்ல!
எல்லா சொந்தங்களும்
மகிழ்வோடு
அந்த மனுசியை
அனுப்பியிருக்கவேண்டும்.

இழப்பு துயரம் தான்!
எல்லா இழப்புகளும்
துயரம் மட்டும் தானா?

இராஜலெட்சுமி அம்மாவுக்கு அஞ்சலி!

 


எனது இணையரின் அக்கா மாமியார் அவர். உறவுமுறையில் தான் மாமியார், அத்தை எல்லாம். அவரை அந்த குடும்பத்து மனிதர்கள் எல்லோரும் ஆத்தா என்று தான் அழைப்பார்கள்.

அவருக்கு நிறைய ஆண்பிள்ளைகள். சில பெண்பிள்ளைகள். அவர்களில் சில ஆசிரியர்கள், வங்கி மேலாளர், கன்சல்டன்ட் என தொழில்ரீதியில் இருந்தாலும், பழகும் மனிதர்களை மிகவும் மரியாதையுடனும், அன்புடனும் பழககூடியவர்கள்.
குடும்பத்தில் ஒருவிழா என்றால், அந்த குடும்பத்து மனிதர்கள் எல்லாம் ஒன்று கூடினாலே மண்டபம் நிறைந்துவிடும். அவ்வளவு சொந்தங்கள். உறவுகள்.
மகாவோட கணவர் என அண்ணி என்னை அவரிடம் அறிமுகப்படுத்திய பொழுது, என்னிடம் மிகவும் அக்கறையுடனும், அன்புடனும் பேசி "தூரத்து" சொந்தமாய் இருந்த என்னை மிகவும் நெருங்கிய சொந்தமாய் என்னை மாற்றிவிட்டார்.
அம்மாவுக்கு நல்ல நினைவாற்றல். சில மாதங்கள், ஒரு சில வருடங்கள் கழித்து, ஏதேனும் குடும்ப விழாவில் மீண்டும் பார்த்தால், அடையாளம் கண்டுகொண்டு, நாம் முதலில் பேசவேண்டும் என்றெல்லாம் நினைக்கவேமாட்டார். நம்மை அடையாளம் கண்டு, அவரே அழைத்து பேசுவார். அன்புடன் பேசி, இடைப்பட்ட அந்த காலத்தை காணாமல் போகசெய்துவிடுவார். அவருடைய வாரிசுகள், வாரிசுகளின் வாரிசுகள் எப்படி
அருமையாக
உறவு பேணுகிறார்கள் என்பது அம்மாவிடம் பேசிய பொழுது புரிந்தது.
சமீப காலங்களில் அம்மாவை குடும்ப விழாக்களில் காணமுடியவில்லை. விசாரித்தால், முதுமை காரணமாக நடக்க இயலவில்லை என்றார்கள். வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.
இன்று மாலை இராஜலெட்சுமி அம்மா காலமாகிவிட்டார் என செய்தி சொன்ன பொழுது, கலங்கித்தான் போனேன்.
நாங்கள் ஐந்து பிள்ளைகள். எங்கள் அம்மாவை எங்க சின்ன அக்கா மட்டும் ஆத்தா! என அழைப்பார். அம்மாவை விட, ஆத்தா இன்னும் நெருக்கமாக உணரமுடிகிறது.
அந்த பெரிய குடும்பம் இன்று ஆத்தா இல்லாமல் கலங்கி, அவரை இறுதியாய் காண எல்லா திசைகளில் இருந்தும் கும்பகோணம் விரைகிறார்கள். நானும் அவர்களோடு பயணித்துக்கொண்டு இருக்கிறேன்.
ஆத்தா தனது வாழ்நாளில் நிறைய வயர்பின்னல்கள் செய்து தனது சொந்தங்களுக்கும், உறவுகளுக்கும் செய்து தருவார்.
அப்படி எங்களுக்கும் ஒன்று செய்து தந்தார். ஆண்டுகள் பல கடந்தும் கடிதங்களையும், ரசீதுகளையும் சேகரித்து, எங்கள் வீட்டில் ஒன்றாய் இருந்துவருகிறது. இனி அது ஆத்தாவின் நினைவுகளை தந்துகொண்டே இருக்கும்.

அஞ்சலி!

 


ஜவஹர் தோழரின் இணையரும், முன்னாள் பேராசிரியருமான பூரணம் அம்மா இன்று காலையில் கொரோனா தொற்றால் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் இருக்கிறோம்.
****
அம்மா இறந்து விட்டார். கொரோனா நோய்த்தொற்று காரணமாக மூச்சுவிடுவது கடினமாகி இன்று காலையில் இறந்தார்.
கொரோனா இறப்பு எனவே உடலை நம்மிடம் தர மாட்டார்கள். மருத்துவமனையில் இருந்து அப்படியே கொண்டுசென்று அடக்கம் செய்யப் போகிறார்கள். அப்பா உடன் செல்கிறார். வெங்கடேஸ்வரா மருத்துவமனை நந்தனம்.

Badhaai Ho (2018) இந்தி


கதை. ஒரு நடுத்தர குடும்பம். அப்பா ரயில்வேயில் அதிகாரி. வீட்டில் துணைவியார், அம்மா இருக்கிறார்கள். வேலைக்கு செல்கிற 25வயது மூத்த பையன். மேல்நிலைப் பள்ளியில் படிக்கிற இரண்டாவது பையன். குடும்ப தலைவிக்கு முடியாமல் போக, சோதிக்கும் பொழுது கர்ப்பமாக இருப்பது தெரியவருகிறது. தம்பதிகளால், குடும்பத்தில் உள்ளவர்களையே எதிர்கொள்ளமுடியாமல் தவிக்கிறார்கள். சமூகமோ இன்னும் சிக்கலாய் எதிர்கொள்கிறது.

மூத்தப் பையனின் காதலியின் அம்மா “அந்த குழந்தையை வளர்த்து எடுக்கும் பொறுப்பு உன் தலைமீது விழும்” என பேசுகிறார். பிறகு என்ன ஆனது என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும், நகைச்சுவை கலந்தும் சொல்லியிருக்கிறார்கள்.

***

நம் நாட்டில் பிள்ளைகள் பிறந்துவிட்டால், அம்மாவும், அப்பாவும் மொத்த சந்தோசத்தையும் பிள்ளைகளுக்காக சமர்ப்பித்துவிடவேண்டும் என்பது ‘விதி’யாக இருக்கிறது. அதை மீறி நடந்தால் குற்றவாளிகளாக பார்ப்பார்கள். நான் அறிந்த உண்மை கதை. ஒரு தாய். தன் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகள் வாழ்வையே தனது வாழ்க்கையாக வாழ்ந்தார். மகனுக்கு திருமணம் ஆனது. தன்னை பிரிந்து போய்விடுவானோ என்ற பயத்தி்ல் தன் மகன் பொண்டாட்டியோடு சிரித்து பேசுவதையே சிக்கலாக்கினார். இப்படி சமூகத்தில் நிறைய கோளாறுகள் இருக்கின்றன.

இப்படி ஒரு சமூகப் பிரச்சனையை எடுத்துக்கொண்டு, வெற்றி பெற வைத்த இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும் படம் இன்னும் கூடுதலாக பேசியிருக்கலாம். படம் வெற்றி பெறுமா என்ற குழப்பம் இயக்குனரை கட்டுப்படுத்தியிருக்கலாம்.

இதே சூழ்நிலையில், எழுத்தாளர் ஜெயகாந்தன் ஒரு சிறுகதை அருமையாக எழுதியிருப்பார். தலைப்பு தெரிந்தால், பகிருங்கள்.

படத்தில் நடித்த அனைவருமே சிறந்த தேர்வு. படம் தேசிய விருதை வென்றிருக்கிறது. துவக்கத்தில் மருமகளைத் திட்டித்தீர்த்த பாட்டி, பிறகு தனது சொந்த மகள்களிடையே தனது மருமகளை விட்டுக்கொடுக்காமல் வெடுக் வெடுக்கென பேசும் அந்தப் பாட்டிக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. நிறைய பிலிம்பேர் விருதுகளையும் வென்றிருக்கிறது.

நம்மூராக இருந்தால் ஆயுஷ்மான் குரானா போன்ற பெரிய நடிகர்கள் இந்த கதாப்பாத்திரத்தை தவிர்த்து இருப்பார்கள். Andhadhun, Article 15க்கு பிறகு நான் பார்த்த இன்னுமொரு நல்லப்படம்.

பார்க்கவேண்டிய படம்.பாருங்கள்.

Awe (2018) Telugu Pshychological thriller


ரகசியம் (தமிழில்)

கதை. ஒரு மாநகர மாடர்ன் உணவகம். தன் அம்மா, அப்பாவிற்கு தன் காதலனை அறிமுகப்படுத்த காத்திருக்கிறாள். காதலன் வந்ததும், அதிர்கிறார்கள். தான் தான் மேஜிக்கில் பெரிய ஆள் என தலைக்கனத்தோடு வருபவரை மாயமாய் இருக்கும் ஒரு மேஜிக் மேன் அவரை அலைக்கழிக்கிறார். நன்றாக சமைக்கிறானா என சோதிக்கும் பொழுதே, யூடியூப் பார்த்து சமைக்கிறான் அவன். அங்கிருக்கும் ஒரு தங்கமீனும், போன்சாய் மரமும் அவனுக்கு உதவுகின்றன.

போதை மருந்து ஏற்றிக்கொண்டு உணவகத்தில் வேலைசெய்யும் ஒருத்தியை துணைக்கு வைத்துக்கொண்டு, ஒருவன் அங்கு வரும் இன்னொருவனிடம் கொள்ளையடிக்க‌ திட்டமிடுகிறான். தன்னுடைய பிறந்தநாளிலேயே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறாள் ஒருத்தி.

தன் வீட்டைத்தான் உணவகமாக மாற்றியிருக்கிறார்கள் என, பழைய நினைவுக்களுக்காக தினமும் வந்து இறந்து போன (!) தன் துணைவியாருடன் காபி குடிக்கிறார். அறிவியலில் ஆர்வம் கொண்ட ஒருவன் காலயந்திரத்தை கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறான். அந்த உணவகத்தில் இப்படி பல்வேறு கதாப்பாத்திரங்கள் ஒன்று கூடுகிறார்கள்.

இவர்கள் அனைவரையும் பாதிக்ககூடிய சம்பவம் ஒன்று இறுதிக்காட்சியை நோக்கி நகருகிறது. பிறகு என்ன ஆனது என்பது மீதிக்கதை!

****
தெலுங்கில் எடுக்கப்பட்டு, தமிழில் ’ரகசியம்’ என மொழிமாற்றம் செய்திருக்கிறார்கள். காஜல், நித்யா, ரெஜினா, தேவதர்ஷினி என நமக்கு பரிச்சயமான முகங்கள் நிறைய இருக்கிறார்கள். ஆகையால் நம்மால் ஒட்டமுடிகிறது.

எதார்த்தவாத படமில்லை. பேண்டசி (Fantasy) வகை என படம் துவங்கி சில காட்சிகளிலேயே நமக்கு புரிந்துவிடுகிறது. படத்தை எடுத்தவிதத்திலும், வசனங்களிலும் நம்மை ஈர்க்கிறார்கள். அந்த ஈர்ப்பினால், இறுதியில் சொல்லும் சில பல சமூக செய்திகளும் மனதில் பதிக்க முயல்கிறார்கள். இயக்குநரை நம்பி நடிகர் நானி தயாரித்திருக்கிறார். நம்பிக்கை வீண்போகவில்லை.

பார்க்கலாம். பாருங்கள்.

Eyes wide Shut (1999)


Erotic mystery psychological drama
- Stanley Kubrick Movie

கதை. ஒரு பிரபல இளம்மருத்துவர். தன் துணைவியார், மகள் குட்டிப் பொண்ணுடன் வாழ்ந்துவருகிறார். ஒரு பார்ட்டிக்கு கிளம்புகிறார்கள். அங்கு மருத்துவர் இரண்டு பெண் மாடல்களுடன் ஜாலியாக நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கிறார். நிறைய‌ போதையுடன் இருக்கும் மருத்துவரின் துணைவியாருடன் வேறு ஒரு ஆள் நடனம் ஆடிக்கொண்டே இனிக்க இனிக்க பேசுகிறார். ஒரு வழியாக வீடு வந்து சேர்கிறார்கள்.

வீட்டில் கொஞ்சம் போதை ஏற்றிக்கொண்டு பார்ட்டியில் நடந்த விசயம் குறித்து பேசும் பொழுது, இருவருடைய அந்தரங்கம் குறித்து பேச்சு எழுகிறது. விவாதத்தின் ஒரு இடத்தில் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சந்திப்பில் ஒரு கப்பல் அதிகாரியை பார்த்தேன். அவனோடு காதல் கொண்டேன். அவன் ஒருவேளை "கிளம்பி வா!" என சொல்லியிருந்தால், உன்னை, பிள்ளையை விட்டுவிட்டு போயிருப்பேன். நல்லவேளை அதற்கு பிறகு அவன் என்னை அழைக்கவில்லை என்கிறாள். தன் மீது மிகவும் அன்பு கொண்டவள் இப்படி சொன்னது அவனை நிறைய கலக்கமடைய வைக்கிறது.

அப்பொழுது அவருடைய பேஷண்ட் ஒருவரி இறந்த செய்தி வருகிறது. இவள் சொன்னதை நினைத்துக்கொண்டே செல்கிறான். திருமண வயதில் இருக்கும் அவளுடைய மகளுக்கு ஆறுதல் சொல்லும் பொழுது, திடீரென மருத்துவரை காதலிப்பதாக சொல்கிறாள். அவளிடம் நாசூக்காக சொல்லி, அங்கிருந்து கிளம்புகிறான்.

நடந்து சொல்லும் பொழுது, ஒரு பிராஸ்ட்யூட்டை சந்திக்கிறான். அவள் வீட்டிற்கு சென்று கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருக்கிறான். அங்கிருந்தும் கிளம்புகிறான். பிறகு, இசைக்கலைஞனான தன் நண்பனை ஒரு பாரில் பார்க்கிறான். அப்போழுது அவனுக்கு போன் வருகிறது. ஒரு பாஸ்வேர்ட் சொல்கிறார்கள். ஒரு வித்தியாசமான விழா. அங்கு தான் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசிப்பேன் என்கிறான். இவன் இருக்கும் மனநிலையில் ஆர்வமாக விசாரிக்கிறான். முதலில் மறுத்தாலும், பிறகு சொல்கிறான்.

அங்கு ஒரு டாக்ஸியில் கிளம்புகிறான். ஒரு பெரிய பங்களா. பாஸ்வேர்ட் சொல்லி உள்ளே சென்றுவிடுகிறான். நவநாகரிக உடைகளுடன் எல்லோரும் விதவிதமாக‌ முகமூடி அணிந்திருக்கிறார்கள். அங்கு சடங்குகள் செய்ய துவங்குகிறார்கள்.

அதன்பிறகு அங்கு நடப்பது எல்லாம் விநோதமாக இருக்கிறது. ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொள்கிறான். அங்கிருந்து தப்பித்தானா? துணைவியாருடனான மனக்கசப்பு என்ன ஆயிற்று? என்பதை சொல்லியிருக்கிறார்கள்.

***

புகழ்பெற்ற இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்கின் படமிது. இறுதிப்படமும் இதுதான். அவருடைய இயக்கத்தில் அதிக நாட்கள் படபிடிப்பு நடந்ததும் இந்தப்படம் தான் என்கிறார்கள். Shining படத்தை பயந்து பயந்து பார்த்த பிறகு, இப்பொழுது அவருடைய அடுத்தப் படத்தைப் பார்க்கிறேன். டாம் குரூஸ் தன் ரியல் துணைவியாருடன் படத்தில் தம்பதிகளாக நடித்திருக்கிறார்கள். படம் நன்றாக வரவேண்டும் என தம்பதிகளுக்குள் இருந்த முரண்பாட்டை குப்ரிக் தூண்டிவிட்டார் என சொல்கிறார்கள். உண்மையா என தெரியவில்லை. ஆனால், படம் வெளிவந்து இரண்டு வருடங்கள் கழித்து, பிரிந்துவிட்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் இரவு துணைவியாருடனான வாதத்தில் கொஞ்சம் சிக்கலாகி, அந்த குழப்பமான மனநிலையில் அடுத்து அடுத்து என்னென்ன‌ நடக்கிறது என்பது தான் படம். அதை குப்ரிக் தன் ஸ்டைலில் சொல்லியிருப்பது ஒரு அனுபவம். பொண்டாட்டியோடு தண்ணியோ போதையோ ஏத்திக்க கூடாது என்பது படம் சொல்லும் பாடம்.

மற்றபடி படத்தில் பெரியவர்களுக்கான விசயங்கள் நிறைய இருக்கிறது. ஆகையால், குடும்பத்தோடு பார்க்க வாய்ப்பில்லை. அமேசான் பிரைமில், நெட் பிளிக்சில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். தேடிப் பாருங்கள்.

எழுத்து!


கேள்வி : //படிக்கின்ற விசயங்கள் மற்றும் தோன்றும் எண்ணங்களை வார்த்தை வடிவில் கொண்டுவர தடுமாற்றம் தோன்றுகிறது.. எழுத நினைக்கும் போது எண்ணங்கள் மறந்துவிடுகிறது ஏன்?//

– நவநீதன்

அன்புள்ள நவநீதன்,

எழுதுவதற்கு முன்னர் நாம் நிறைய படிக்க வேண்டும். அந்த படிப்பையும் ஏதேனும் ஒரு தேவையின் அடிப்படையில் குறிப்புகளோடு படிப்பது அவசியம். குறிப்பிட்ட நூலில் இருந்து நாம் என்ன புதிதாக கற்றுக் கொண்டோம், அந்த நூலில் நம் மனம் கவர்ந்தது எது – ஏன், கவராதது எது – ஏன்? என்பதை நம் சொந்த மொழியில் குறிப்புகளாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.

எழுத்துக்கு திட்டமிட்ட செயல்பாடும், திட்டமிடாத கற்பனை வளம் இரண்டும் வேண்டும். அதற்கு இந்த செயல்முறை உதவுமென நம்புகிறோம். நீங்கள் குறிப்பாக இன்னதுதான் எழுதப் போகிறீர்கள் என்பதறியாமல் இந்த கருத்து பொதுவாக முன்வைக்கப்படுகிறது.

நன்றி!

நன்றி : வினவு

The Ninth Gate (1999)


கதை. நாயகன் அரியவகை புத்தகங்களை வாங்கி, புத்தக ஆர்வலர்களிடம் விற்க கூடிய ஆள். நியூயார்க்கில் பிரபலமான புத்தக ஆர்வலர் நாயகனை வரச்சொல்லி, தன்னிடம் உள்ள ஒரு அரிய புத்தகத்தை காண்பிக்கிறார். அதே போல வேறு இருவரும் அதே போல பிரதிகளை வைத்திருக்கிறார்கள். ஆக உலகத்திலேயே அந்த புத்தகம் மூன்று மட்டுமே இருக்கின்றன. அந்த மூன்றிலும் ஒன்று தான் மூலப்பிரதி. அந்த இரண்டு பிரதிகளையும் சம்பந்தப்பட்டவர்களிடம் வாங்கி ஆய்வு செய்து, எது உண்மையான பிரதி என கண்டறியவேண்டும். விலைக்கும் வாங்கி வந்துவிடவேண்டும் என பணியை தருகிறார். முதலில் தயங்குகிற நாயகன் அந்த வேலையை ஏற்றுக்கொள்கிறார்.

ஐரோப்பா சென்று முதலில் ஒருவரை சந்திக்கிறார். அவர் வைத்திருக்கும் பிரதியை காண்பிக்கிறார். இரண்டு புத்தகங்களையும் ஆய்வு செய்யவும் சம்மதிக்கிறார். இரண்டுக்கும் சில நுட்பமான வித்தியாசங்கள் இருக்கின்றன. அதை குறித்துவிட்டு வந்துவிடுகிறார். இந்த வேலையை ஒப்படைத்தவருக்கு தெரிவிக்கும் பொழுது, ”அந்த புத்தகத்தை வாங்கிவிடு! இப்பொழுது போய் அவரைப் பார்” என சொல்கிறார். அங்கு போனால், புத்தக உரிமையாளர் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அந்த புத்தகத்தை யாரோ நெருப்பில் எரியவிட்டு சென்றிருக்கிறார்கள்.

இப்படி புத்தகங்களை தேடிய பயணத்தில் பல்வேறு சோதனைகள். இறுதியில் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை முடித்தாரா? என்ன நடந்தது என்பதை விரிவாக சொல்லியிருக்கிறார்கள்.

*****

முதலில் படத்தில் என்னை ஈர்த்தது புத்தகங்களை தேடித் தேடிச் சேர்ப்பதும், அத்தனை புத்தகங்களையும் மர அடுக்குகளில் முறையாக பராமரிப்பதும், அந்த புத்தகங்களைப் பற்றி பேசும் பொழுது, கண்களில் ஒளியுடன் பேசுவதைப் பார்க்கும் பொழுது, நாம் புத்தகங்களை எவ்வளவு அலட்சியமாக கையாள்கிறோம் என வெட்கப்பட வைத்துவிட்டார்கள். புத்தகங்களை ஒழுங்காக கையாளவேண்டும் என்ற உணர்வை தந்தது.

புத்தகங்களைப் பற்றிய பயணமும், அடுத்து என்ன? அடுத்து என்ன? என்பதையும் நன்றாக எடுத்திருந்தார்கள். படம் எனக்கு பிடித்திருந்தது. இந்தப் படத்தை அறிமுகப்படுத்தி எழுதியிருந்த Karundhel Rajesh சொல்வது போல இறுதிக் காட்சிகள் சொதப்பலாக இருந்தன.

படத்தில் பிரதானமாக நடித்த ஜானி டெப் மொத்த படத்தையும் தாங்கியிருக்கிறார். மற்றவர்களும் அவரவர் வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். புகழ்பெற்ற Pianist படத்தை இயக்கிய ரோமன் பொலன்ஸ்கி தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.

பார்க்கலாம். பாருங்கள்.

Mindscape ( 2013)


கதை. நாயகன் மனிதர்களின் நினைவுகளில் நுழையும் திறன்பெற்றவர். வழக்குகளை தீர்க்க இந்த முறை உதவினாலும், நீதிமன்றங்கள் இன்னும் இதை ஏற்பதில்லை. ஒருமுறை ஒரு கேஸில் இவருக்கு வலிப்பு (Stroke) வந்துவிட இரண்டு ஆண்டுகள் ஓய்வு அளிக்கப்படுகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்.

அவருடைய சீனியர் ”ஒரு சிம்பிள் கேஸ்” என ஒரு புதிய வழக்கு ஒன்றை தருகிறார். 16 வயது பெரிய பணக்கார வீட்டுப் பெண். அவள் நல்ல திறமையானவள். ஒரு முறை தற்கொலைக்கு முயல, அதற்கு பிறகு அவளை வீட்டில் சிசிடி கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். வெளியில் அனுப்ப மறுக்கிறார்கள். அதற்காக உண்ணாவிரதம் இருக்கிறாள். அவளை சாப்பிட வைக்கவேண்டும். இது தான் இவருக்கு கொடுக்கப்படுகிற வேலை.

போகிறார். அவளோடு பேசுகிறார். அவளும் நன்றாக ஒத்துழைக்கிறாள். பெரும்பணக்கார வீடு என்பதால், அதற்குரிய குழப்பங்கள் அங்கு நிலவுகின்றன. சில சம்பவங்கள் நடக்கின்றன. இது சிம்பிள் கேஸ் இல்லை என்பதை உணர்கிறார். பிறகு என்ன ஆனது என்பது முழு நீளக்கதை.

****

மனிதனின் எண்ணங்களுக்குள் சென்று தெரிந்துகொள்ளும் முறை என படத்தில் சொல்லப்படுகிற ஒன்று நடைமுறையில் இருக்கிறதா என தெரியவில்லை. நீதிமன்றத்தில் இந்த முறையை சாட்சியமாக ஏற்பதில்லை என பாதுகாப்பாக சொல்லிவிடுகிறார்கள்.

நாயகன் அவள் சிறுமி தானே என நினைத்து அணுகுவான். ஆனால், அந்த பெண் செய்யும் விளையாட்டு இருக்கிறதே! கில்லாடி.

பார்த்தே ஆகவேண்டிய படம் இல்லை. எடுத்துக்கொண்ட கதையை அருமையாக எடுத்திருக்கிறார்கள். பார்க்கலாம். பாருங்கள்.

கனஷத்ரு (மக்கள் விரோதி)


மேற்கு வங்கத்தில் இருக்கும் சாந்திபூரில் 26 ஆண்டுகளாக மருத்துவராகப் பணியாற்றி நற்பெயர் எடுத்த அசோக் குப்தா தன்னிடம் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை கவனித்து அதன் காரணத்தைக் கண்டுபிடிக்க முற்படுகிறார். அவர்களுள் பெரும்பாலோர் நகரத்தின் மக்கள் தொகை நெருக்கம் அதிகமான பகுதியிலிருந்து வருவதால் அந்தப் பகுதியில் இருக்கும் திரிபுரேஷ்வர் கோவிலில் புனித தீர்த்தமாகத் தரப் படும் நீரை அறிவியல் பரிசோதனைக்கு அனுப்புகிறார்.

தண்ணீர் கொண்டுவரும் நிலத்தடிக் குழாய் உடைந்திருப்பதால் அந்த நீர் மாசு பட்டிருப்பதை ஆய்வு உறுதி செய்கிறது. அந்தக் குழாயை சரி செய்யும் வரை கோவிலை மூட வேண்டும் என்று ஒரு பத்திரிக்கைக்கு கட்டுரை எழுதுகிறார்.

அவருடைய கோரிக்கைக்கு முதல் எதிர்ப்பு அவருடைய சகோதரரும், நகரசபைத் தலைவருமான நிசித்திடமிருந்து வருகிறது. நிசித் அந்தக் கோவிலின் உரிமையாளர் நடத்தும் பார்கவா டிரஸ்டின் முக்கிய உறுப்பினரும் ஆவார். கோவில் உரிமையாளர் அசோக் குப்தாவின் வீட்டிற்கு ஒரு புட்டியில் புனித தீர்த்தத்தைக் கொண்டு வருகிறார். அதில் துளசி போன்ற மூலிகைகள் இருப்பதால் அது மாசுபடவே வாய்ப்பில்லை என்றும், இந்துக்கள் ஆயிரம் ஆண்டுகளாக அதை நம்புவதாகவும் கூறி அசோக் குப்தாவின் கோரிக்கையை பின் வாங்குமாறு மிரட்டுகிறார்.

மத நம்பிக்கை இல்லாததால் 10 ஆண்டுகளாக கோவிலுக்குப் போகாத அசோக் குப்தா இந்தப் பிரச்சினையில் தலையிட உரிமையில்லை என்று நிசித்தும் கூறுகிறார். அந்தக் கோவில் ஒரு சுற்றுலாத் தலமாகவும் இருப்பதால் அந்த வருமானத்தைக் கொள்ளையடித்து வரும் இந்தக் கூட்டம் கோவிலை மூட மறுக்கிறது.
அசோக் குப்தா இது குறித்து எழுதிய கட்டுரையை வெளியிட ஒப்புக் கொண்ட ஜன வார்த்தா என்கிற பத்திரிக்கையும் மிரட்டலுக்கும், பக்தர்களின் எதிர்வினைக்கும் பயந்து பின்வாங்குகிறது.

இந்த ஊழல் கூட்டணியால் தூண்டிவிடப் பட்ட கூட்டம் அவருடைய வீட்டைத் தாக்குகிறது. வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்.குப்தாவும், பள்ளி ஆசிரியரான அவருடைய மகளும் வேலையை விட்டு நீக்கப் படுகிறார்கள்.

குப்தாவின் குடும்பம் அவருக்கு ஆதரவாக இருந்தாலும் அவர் விரக்தியின் விளிம்பிற்கே சென்று ஊரை விட்டுச் செல்ல முடிவெடுக்கிறார்.

படத்தின் கடைசி நிமிடங்களில் ஒரு திடீர் நம்பிக்கை பிறக்கிறது அவருக்கு. மக்கள் பிரச்சினைகளில் முன் நின்று போராடும் அனைவரையும் சிலிர்க்க வைக்கும் முடிவு.

இப்செனின் எனிமி ஆஃப் தி பீப்பிள் என்கிற நாடகத்தைத் தழுவி இதை ஒரு காவியமாக 1989இல் உருவாக்கியவர் சத்யஜித் ரே எனும் ஜீனியஸ்.

ஆங்கில சப்டைட்டிலுடன் யூட்யூபில் கிடைக்கும் இந்தப் படத்தை இன்றைய அரசியல் சூழலில் அனைவரும் பார்ப்பது அவசியம்.

- Vijayasankar Ramachandran

What happened to Monday (2017)


கதை. எதிர்காலமான 2043ல் நடக்கிறது. மக்கள் தொகை பெருக்கம் அதனால் உணவுப் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் கேடு என பல்வேறு சிக்கல்களை உருவாக்குகிறது. ஆகையால் குடும்பத்திற்கு ஒரு குழந்தை தான். ஒன்றை மீறினால் அரசின் ஆட்கள் அந்த குழந்தையை கொண்டுபோய், ஆழ்ந்த தூக்கத்தில் ஆழ்த்துவதாகவும், இந்த நெருக்கடி நிலைமை சரியான பிறகு, அவர்களை எழுப்புவதாகவும் மக்களுக்கு சொல்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு தாய்க்கு ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகள் பிறக்கிறார்கள். தாய், தந்தை இல்லை. ஆகையால், குழந்தைகளின் தாய்வழி தாத்தா ஏழு பிள்ளைகளையும் அரசுக்கு தெரியாமல் வளர்க்க முடிவு செய்து, ஒரு வீட்டில் ஏழு பிள்ளைகளையும் வளர்க்கிறார். ஏழு பேருக்கும் ‘Sunday, Monday” என ஏழு கிழமைகளின் பெயர் வைக்கிறார். எழுவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால், பள்ளி வயதில் ஒருவரின் பெயரை பதிவு செய்து, தினம் ஒருவராக பள்ளிக்கு அனுப்புகிறார். அந்த நாளில் என்னென்ன நடந்தன என்பதை வீட்டிற்கு வந்த பிறகு எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிவிடவேண்டும். கையில் உள்ள பதிவு செய்யும் கருவியும் அதற்கு உதவும்.

ஒருமுறை வியாழன் யாருக்கும் தெரியாமல் வெளியே ஸ்கேட்டிங் விளையாடி, ஆட்காட்டி விரலில் நகப்பகுதி வரைக்கும் வெட்டிக்கொண்டு வந்துவிடுகிறாள். ஒரே மாதிரி இருப்பது மிக அவசியம் என்பதால், மற்ற சகோதரிகளின் விரல்களையும் அதே அளவுக்கு வெட்டுகிறார்.

வருடங்கள் உருண்டோடுகின்றன. தாத்தா இறந்துவிடுகிறார். முப்பது வயதில் இருக்கிறார்கள். தினம் ஒருவராக வேலைக்கு சென்றுவருகிறார்கள். தோற்றத்தில் ஒன்றாக இருந்தாலும், ஏழு பேரும் குணத்தில், கெட்டிக்காரத்தனத்தில் வேறு வேறு நபராக இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும், ஒற்றுமையாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களுடைய ’ஒற்றுமையில்’ தான் எல்லோருடைய வாழ்விலும் இருக்கிறது.

ஒருநாள் வேலைக்கு சென்ற “Monday” திரும்பிவரவில்லை. குழப்பமும் பதட்டமும் வருகிறது. அவளைத்தேடி “Tuesday” அலுவலகம் செல்கிறாள். அவளும் திரும்பவில்லை. அதற்கு பிறகு பல்வேறு திருப்பங்கள். இழப்புகள்.

எல்லோரும் தப்பித்தார்களா? என்பதை பரபர ஆக்சன் கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

****
கதை சுவாரசியமான கதை. அவர்களுடைய ஒற்றுமையில் தான் வாழ்வு. அதில் ஒருவர் விலகி சென்றாலும், மற்றவர்களுடைய வாழ்வு மிகவும் சிக்கலாகிவிடும் என்பதை நன்றாக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒருவரே எழுவராகவும் வித்தியாசம் காட்டி மொத்தப் படத்தையும் தாங்கியிருக்கிறார். இந்த கதையை உணர்வுபூர்வமாகவும் கொண்டு சென்றிருக்கலாம். இயக்குநர் ஆக்சன் வகையாக தேர்ந்தெடுத்துவிட்டார். இருப்பினும் உணர்வுபூர்வமாகவும் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.

மற்றபடி ஒரு குடும்பம். ஒரு குழந்தை என்பது மற்ற சொத்து, சிவில் விசயங்களை போல கையாள்வது மிகவும் சிக்கலாக்கிவிடும். சீனாவில் ஒரு குழந்தைத் திட்டத்தை சில ஆண்டுகள் அமுலாகி இருந்திருக்கிறது. அதில் என்னவித அனுபவங்கள் கிடைத்தன என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தை இந்தப் படம் தந்தது.

நகர்ப்புற படித்த மக்கள் ஒரு குழந்தை, இரண்டு குழந்தையோடு நிறுத்திக்கொள்கிறார்கள். அதில் கல்வி, விழிப்புணர்வு, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்கிற சூழ்நிலை, பொருளாதாரம் என பல அம்சங்கள் அதில் இருக்கின்றன. தமிழ்நாடு நகர்ப்புறத்தோடு பல கிராமங்களோடு இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால், நிறைய குழந்தைகள் பெற்றெடுப்பது குறைந்திருக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் அந்த நிலை இல்லை. சமீபத்தில் ஒரு தொழிற்சாலை விபத்தில் ஒரு இளைஞர் இறந்துபோனார். அவருடைய ரேசன் அட்டையை வாங்கிப் பார்த்த பொழுது, அண்ணன்கள், தம்பி, அவர்களுடைய குழந்தைகள் என ஒரே அட்டையில் 20 பேர்வரை இருந்தார்கள்.

ஆக கல்வி, விழிப்புணர்வு, பொருளாதாரத்தில் உயர்த்துவது தான் இதற்கு தீர்வாக இருக்கமுடியும். ஆனால் நிலவுகிற மத்திய, மாநில அரசுகள் கல்வி கொடுக்கும் பொறுப்பிலிருந்து மெல்ல மெல்ல கழன்று கொண்டு வருகிறார்கள். அதை ஒரு தேசத்தின் முதலீடாக கருதாமல், செலவாக பார்க்கும் கண்ணோட்டம் தான் இருக்கிறது. பிறகெப்படி மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்? பெரும்பாலான மக்களின் நலனை அக்கறை கொண்டு அதிகாரத்திற்கு வரும் ஒரு அரசு தான் இதை சாத்தியப்படுத்த முடியும் என கருதுகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

மற்றபடி, படம் பார்க்ககூடிய படம். பாருங்கள். ஒரே ஒரு காட்சி 18+யாக இருக்கிறது. ஆகையால், குடும்பத்தோடு பார்க்க இயலாது.

Hereditary (2018)


Disturbing Horror Movie

கதை. அந்த வீட்டில், அம்மா, அப்பா, மகன், மகள் என வாழ்ந்துவருகிறார்கள். அந்த வீட்டில் அம்மா வழி பாட்டி இறந்துவிடுகிறார். இறப்புச் சடங்கிலிருந்து தான் படம் துவங்குகிறது. பாட்டி இறந்ததால், சோகமாக இருக்கிறாள் பேத்தி. அவளைத் தேத்த முயற்சிக்கிறார்கள்.

தன் அம்மாவின் இறப்புக்கு பிறகு, அந்த வீட்டில் சில வித்தியாசமான உணர்வுகளை பெறுகிறாள். மகன் சக மாணவர்களுடன் ஒரு பார்ட்டிக்கு செல்கிறான். மகள் சோர்வாக இருக்கிறாளே என அவளையும் அழைத்துக்கொண்டு போக சொல்கிறாள். வேண்டா வெறுப்பாக தன் தங்கையை அழைத்துச்செல்கிறான். அங்கு இருக்கும் கேக்கை சாப்பிடுகிறாள். அவளுக்கு அலர்ஜியாகிவிடுகிறது. தங்கையை தூக்கிக்கொண்டு, காரில் அழைத்துவருகிறான். பின்சீட்டில் வலியால் துடிக்கிறாள். மிக வேகமாக வருகிறான். அவள் காருக்கு வெளியே எட்டிப்பார்க்கிறாள். விளைவு தங்கை தலை துண்டிக்கப்பட்டு இறக்கிறாள். அந்த இழப்பை அவர்களால் தாங்க முடியாததாக இருக்கிறது.

அந்த குடும்பத்தில் அதற்கு பிறகு விரும்பதகாத சம்பவங்கள் நடக்கிறது. ஏன் நடக்கிறது? அதன் பின்னணி என்ன என்பதை விலாவரியாக சொல்லியிருக்கிறார்கள்.

****

கான்ஜூரிங் படங்கள் ஒரு வகை என்றால், இது ஒரு வகைப்படமாக இருக்கிறது. விபத்தில் தங்கை சாகும் பொழுது, அந்த பெண்ணுக்கு என்ன நடந்தது என காட்சியாக காண்பிக்கமாட்டார்கள். ஆனால், அவன் காட்டும் உணர்வுகள் இருக்கிறதே! அதை அப்படியே நமக்கு கடத்தியிருப்பார்கள். இயக்குநருக்கு முதல்படம் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. எல்லோரும் அவரவர் பாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தாலும், அம்மாவாக நடித்திருக்கிற Toni Collette அருமையாக செய்திருக்கிறார்.

1978ல் மக்கள் ஆலயம் என்கிற அமைப்பை நிறுவிய ஒரு சாமியார் ”சொர்க்கத்துக்கு போவோம்” என்ற கருத்தை நம்பி குடும்பம் குடும்பமாக 900 பேர் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் 304 குழந்தைகள். 2018ல் தில்லியில் 11 பேர் உள்ள குடும்பம் மொத்தமும் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்கள். விசாரிக்கும் பொழுது, ”சொர்க்கத்திற்கு செல்வோம்” என்கிற ரீதியாக கருத்துதான். படம் பார்த்து முடிந்த பொழுது இந்த சம்பவங்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போனது. கடவுள் நம்பிக்கை என்பது தனிநபரோடு இருக்கும் வரைக்கும் பெரிய ஆபத்தில்லை. அது ஒரு நிறுவனமாக மாறும் பொழுது, சமூகத்திற்கு ஏகப்பட்ட மோசமான விளைவுகளை உருவாக்கிவிடுகிறது.

குடும்பத்தோடு பார்ப்பது உசிதமில்லை. தனியாக பார்த்துவிட்டு, முடிவெடுங்கள். இயக்குநரின் அடுத்தப்படத்தை இப்போது பார்க்க எடுத்துவைத்திருக்கிறேன் Midsommar.

Bell Bottom (2019) கன்னடம்


80களில் கதை நடக்கிறது. நாயகன் சிறுவயதில் இருந்து துப்பறியும் படங்களை ஆர்வமாய் பார்த்துவருகிறார். தான் ஒரு துப்பறிவாளராக ஆகவேண்டும் என்பது கனவு. அப்பா போலீஸ். வாழ்க்கையில் கிடைத்ததோ கான்ஸ்டபிள் வேலை. இருப்பினும் எதைச்சையாய் ஒரு வழக்கை விசாரிக்க சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்கிறார். அதை கொஞ்சம் மெனக்கெட்டு அந்த வழக்கை முடித்துவைக்கிறான். ஸ்டேசனில் நல்ல பெயர் கிடைக்கிறது.

ஸ்டேசனில் லாக்கரில் பூட்டி வைத்திருந்த பணம் காணாமல் போகிறது. எந்த துப்பும் கிடைக்கவில்லை. மர்மமாக இருக்கிறது. அதே போல இன்னொரு ஸ்டேசனிலும் நடக்கிறது. உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தால், வேலை போய்விடும். ஆகையால், ரகசியமாய் விசாரிக்க சொல்லி, நாயகனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார் இன்ஸ்பெக்டர். மூன்றாவது ஸ்டேசனில் இவனே அந்த ஸ்டேசன் இன்ஸ்பெக்டரோடு இரவு முழுவதும் காவல் காக்கிறான். காலையில் பார்த்தால் பணம் காணாமல் போகிறது. திகைத்துப் போய்விடுகிறார்கள்.

இடையில் காதல் கண்ணை மறைக்கிறது. பிறகு மேலதிகாரி நெருக்குதலுக்கு பிறகு உண்மைகளை கண்டுபிடித்தாரா என்பது மீதிக்கதை.

*****
சமீபத்தில் Kirik Party என ஒரு கன்னடப்படம் பார்த்தேன். கல்லூரியை களமாக வைத்து எடுக்கப்பட்ட படம். அந்த படம் அங்கு பெரிய வெற்றி பெற்றது. இதன் இயக்குநர் தான் இந்தப் படத்தின் நாயகன் Rishab Shetty. சேரன், பிரசன்னா நடித்த முரண் படத்தின் நாயகி இந்தப் படத்தில் வருகிறார் ஹரிப்பிரியா. ரசிக்க வைக்கிறார்.

முண்டாசுப்பட்டி போல ஒரு நகைச்சுவைப் படம். ஆனால், முண்டாசுப்பட்டியை நன்றாக ரசிக்க முடிந்தது. இந்தப் படம் வெற்றி பெற்றிருந்தாலும், பெரிதாக ரசிக்கமுடியவில்லை. நகைச்சுவை படம் என்பதால், லாஜிக் பெரிசா பார்க்க தேவையில்லை என நினைத்தார்கள் போலிருக்கிறது. பல இடங்களில் ஒட்ட முடியவில்லை. இந்தப் படத்தின் வெற்றியில் இந்தியில் அக்ஷய்குமார் நடிக்கிறார். தமிழில் கிருஷ்ணா நடிக்கிறாராம். கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

மெனக்கெட்டு பார்க்கவேண்டியதில்லை. வாய்ப்பு இருந்தால், நிறைய நேரம் இருந்தால், பாருங்கள்.

கனவு


ஒரு நாள், சிஷ்யன் திடீரென அழுதுகொண்டே தூக்கத்திலிருந்து கண்விழிக்கிறான்.

ஸென் குரு அவனிடம் பேசுகிறார்.

’கெட்ட கனவு எதாவது கண்டாயா?’

‘இல்லை’

’சோகமான கனவு ஏதேனும் கண்டாயா?’

’இல்லை… நான் கண்டது மிகவும் சந்தோஷமான கனவு’

‘பிறகு ஏன் அழுகிறாய்?’

சிஷ்யன் கண்ணீரை அமைதியாகத் துடைத்துக்கொண்டே சொல்கிறான் –

'ஏனெனில், நான் கண்ட கனவு ஒருபோதும் நிஜமாகாது என்பதால்தான்’....

- Karundhel Rajesh

Captain Fantastic (2016)


கதை. நாயகன் தன் ஆறு பிள்ளைகளுடன் (6 வயது முதல் 18 வயது வரை) பசிபிக் வடமேற்கு ஆழமான காட்டிற்குள் ஒரு கூட்டை கட்டி, சமூகத்திலிருந்து முற்றிலுமாக தன்னை துண்டித்துக்கொண்டு வாழ்கிறார். அவருடைய துணைவியாருக்கு மனநிலை பிரச்சனை இருந்ததால், நாயகியின் பெற்றோர் பராமரிப்பில், மருத்துவம் பார்த்துவருகிறார்.

முறையான உடற்பயிற்சி, மலையேற்றம், வேட்டையாட பயிற்சி, இலக்கியம், அரசியல், அறிவியல், மொழிகள் கற்றுத்தருவது என எல்லாவற்றையும் பயிற்றுவிக்கிறார். வாழ்வதற்கு தேவையான எல்லாமும் காட்டிலிருந்து பெறுகிறார்கள். நகரத்திற்கு வந்து போக ஒரு பேருந்து வைத்திருக்கிறார். தேவையான பொழுது வந்து போகிறார்.

இதற்கிடையில் மருத்துவம் பார்த்து வந்த நாயகனின் துணைவியார் தற்கொலை செய்துகொள்கிறார். துணைவியார் இறப்புச் சடங்குக்கு நாயகன் வந்தால், "போலீசில் புகார் செய்து உள்ளே தள்ளுவேன்" என மிரட்டுகிறார் நாயகனின் மாமா. போனால் பிரச்சனை வரும். ஆகையால் செல்லவேண்டாம் என நினைக்கிறார். ஆனால் பிள்ளைகள் போகவேண்டும் என அடம்பிடிக்கிறார்கள். வேறு வழியில்லாமல் நாயகன் பிள்ளைகளோடு கிளம்புகிறார்.

இறந்த தன் மகளை தனது கிருத்துவ முறைப்படி அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறார். இறந்தவரோ புத்த பழக்கவழக்கங்களை பின்பற்றியவர். சடங்குகளை எதிர்ப்பவர். ஆகையால், தனது உடல் புதைக்கப்பட கூடாது. எரிக்கப்பட வேண்டும். எரித்த சாம்பலை சடங்குகள் ஏதும் இல்லாமல், ஒரு டாய்லட்டில் போட்டுவிடவேண்டும் என தன் கணவரிடம் உயில் போல எழுதி தந்திருக்கிறார்.

சர்ச்சில் இறந்தவரை சாந்திப்படுத்த சடங்குகள் செய்கிறார்கள். நாயகன் அங்கு வந்து, நாயகி தன்னிடம் எழுதிக்கொடுத்ததை அனைவரின் முன்னிலும் வாசிக்கிறார். தனது செல்வாக்கால், நாயகியின் அப்பா அவர்களை வெளியே துரத்திவிடுகிறார். புதைத்தும்விடுகிறார்.

மூத்த பையனுக்கு கல்லூரிக்கு சென்று படிக்கவேண்டும் என விரும்புகிறான். கல்லூரியில் விண்ணப்பிக்க அவனுடைய அம்மா உதவியும் செய்திருக்கிறார். சின்ன பையனுக்கும் காட்டில் வாழும் வாழ்க்கை பிடிக்கவில்லை. நகருக்கு வந்தபிறகு, தன் தாத்தா, பாட்டியுடன் ஒட்டிக்கொள்கிறான். அவர்களோடு வர மறுக்கிறான்.

அதற்கு பிறகு நடக்கும் சில நிகழ்வுகளால் நாயகன் மீண்டும் காட்டிலேயே சென்று வாழ்ந்தாரா? என்பதை மீதிப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

****

நிலவும் முதலாளித்துவ சமூகம் மிக மோசமாக இருக்கிறது. ஆகையால் அதிலிருந்து தனது குடும்பத்தை துண்டித்துக்கொண்டு வாழ முயல்வதும், அதில் எழுகின்ற முரண்பாடுகளும் தான் கதை.

முதலாளித்துவ சமூகம் பல்வேறு கோளாறுகளுடன் இருக்கிறது. அதில் பெரும்பான்மையான மக்கள் துன்பங்களோடு உழல்கிறார்கள். அப்படிப்பட்ட மக்களோடு ஐக்கியப்பட்டு, அவர்களை அமைப்பாக்கி, அரசியல்படுத்துவதின் மூலம் தான் சமூக மாற்றம் செய்யமுடியும். அதற்கு முதலில் மக்கள் தான் வரலாற்றை படைப்பவர்கள் என கற்கவேண்டும். அசாத்திய கூட்டு உழைப்பு தேவைப்படுகிறது. ஒரு சரியான அமைப்பை கண்டுப்பிடித்து அதன் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு வேலை செய்யவேண்டும். இப்படித்தான் சமூக மாற்றத்திற்கான வேலைகளை பலரும் செய்துவருகிறார்கள்.

ஒரு சில அறிவுஜீவிகளுக்கு இதற்கு பொறுமையும் இல்லை. மக்கள் மீது நம்பிக்கையும் இல்லாமல், தன் "சக்திக்குட்பட்டு" தன் குடும்பத்தை வைத்து சோதனை செய்யும் (கற்பனை) முயற்சி தான் படம். பிள்ளைகள் முரண்படுகிறார்கள். அது தனி. நாயகனின் துணைவியாரே இதில் உடன்பாடு இல்லாமல், நாயகனோடு விவாதித்துக்கொண்டு இருந்திருப்பார் என்பதை சில காட்சிகள் மூலம் நாம் உணர்கிறோம்.

படம் ஒரு சோதனை முயற்சி. சுயாதீனப்படம். படத்தில் எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள். படத்தின் நாயகன் ஆஸ்காருக்கான பரிந்துரையில் இருந்திருக்கிறார். படத்தை வகைப்படுத்தும் பொழுது, காமெடி டிராமா என வகைப்படுத்தி விக்கியில் எழுதியிருக்கிறார்கள். இந்தப் படம் எப்படி காமெடியில் வரும் என தெரியவில்லை.

பார்க்கவேண்டிய படம். பாருங்கள். பிறகு சந்தேகங்கள் இருந்தால், விவாதிப்போம்.

October 1, 2020

List of Lists: நான் பின்பற்றும் திரைப்பட லிஸ்ட்கள் – Part 1


எனக்கும் திரைப்பட லிஸ்ட்களுக்கும் உள்ள உறவை பற்றி இந்த போஸ்டில் சொல்லியிருக்கிறேன்.


https://www.facebook.com/tom.leazak/posts/976313109496625


அதில் குறிப்பிட்டிருந்தபடி, நான் “முடிக்க வேண்டும்” என்று பின்பற்றி வந்த, பின்பற்றி வரும், பின்பற்ற போகும் லிஸ்ட்களை பற்றி இங்கு பகிர்கிறேன்.


Source Category: User data Lists

***************************

1. IMDb Top 250 list

Link: [https://www.imdb.com/chart/top/](https://www.imdb.com/chart/top/)


சினிமாவை ஆர்வமாக பின்பற்றும் எவருக்கும் பரிச்சயமான லிஸ்ட் இது. எனக்கும் இந்த லிஸ்டுக்குமுண்டான பந்தத்தை கூட மேற்சொன்ன பதிவில் குறிப்பிட்டிருப்பேன். என்னை பொறுத்தவரையில், சினிமாவின் ஆரம்ப நிலையில் இருக்கும் ரசிகர்கள் ஏதாவது ஒரு mainstream லிஸ்டை பின்பற்ற விரும்பினால் தாராளமாக இந்த லிஸ்டை நம்பி பின்பற்றலாம். ஆனால் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டிய விஷயம், இந்த லிஸ்ட் வெறும் Gateway to World of Moviesதான். இதைத்தாண்டி ஒரு பெரிய உலகமே உள்ளது. அதேபோல் படங்களின் IMDb ratingகும் சரி இந்த லிஸ்டில் உள்ள rankingகும் சரி, இத்தளத்தை உபயோகிக்கும் வெகுஜன ரசிகர்களின் மனப்போக்கை, ரசனையை வெளிப்படுத்தும் ஒரு அளவீடே தவிர, படத்தின் தரத்தை பற்றிய இறுதிதீர்ப்பு அல்ல.

2. Reddit Top 250


Link: [https://letterboxd.com/…/reddit-r-movies-top-250-2019-edit…/](https://letterboxd.com/…/reddit-r-movies-top-250-2019-edit…/)


புகழ்பெற்ற Reddit தளத்தின் users ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுத்த படங்கள் லிஸ்ட். IMDb லிஸ்டை போன்றே இதுவும் another mainstream லிஸ்ட். நான் பின்தங்கி இருக்கும்departmentடான கொஞ்சம் recent படங்கள் நிறைய இருப்பதால் இந்த லிஸ்டயும் பின்தொடர்கிறேன்.


3. Letterboxd top 250


Link: [https://letterboxd.com/…/official-top-250-narrative-featur…/](https://letterboxd.com/…/official-top-250-narrative-featur…/)

Letterboxd தளத்தை பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருப்பீர்கள் . Cinephile ஆகவேண்டும் என்று விரும்பும் பலரும் follow செய்யும் தளம். அருமையான user interfaceஸுடன், பல்வேறு லிஸ்ட்களின் களஞ்சியமாக விளங்கும் தளம் இது. நான் பின்பற்றும் பல லிஸ்ட்கள் இங்கிருந்து எடுத்தவைதான். அந்த தளத்தின் users rating மூலம் compile செய்யப்பட்ட லிஸ்ட் இது. இதில் கொஞ்சம் recent films, classic films ratio ஓரளவிற்கு balancedடாக இருக்கும்.


4. MUBI Top 1000


Link: [https://mubi.com/lists/the-top-1000](https://mubi.com/lists/the-top-1000)

Arthouse படங்களின் களஞ்சியமாக விளங்கும் MUBI தளத்தின் user voting மூலம் compile செய்யப்பட்ட லிஸ்ட். Mainstream சினிமாவை விட்டு சற்று விலகி Classic, Arthouse, Off-beat, experimental படங்களை விரும்புவோர் நிச்சயம் follow செய்ய வேண்டிய லிஸ்ட்.

Source Category: Critics Lists

************************


5. Jim Emerson’s Essential Films to become Movie Literate


Link: https://www.rogerebert.com/…/101-102-movies-you-must-see-be…

சினிமா ஆர்வலர் Jim Emerson, சினிமா பற்றி சீரியஸான விவாதங்களில் ஈடுபடுவதற்கு பார்த்திருக்கவேண்டிய அவசியமான படங்கள் என்று 1999ல் தொகுத்த லிஸ்ட் இது. இதையும் ஆரம்ப நிலை சினிமா ரசிகர்களுக்கு நிச்சயம் பரிந்துரை செய்வேன்.


6. 1001 Movies You Must See Before You Die

Link 1 (2018 version): [https://en.wikipedia.org/…/1001_Movies_You_Must_See_Before_…](https://en.wikipedia.org/…/1001_Movies_You_Must_See_Before_…)


Link 2 (All films): [https://1001films.fandom.com/wiki/The_List](https://1001films.fandom.com/wiki/The_List)

சினிமா வட்டாரங்களில் புகழ்பெற்ற லிஸ்ட் இது. சினிமா விமர்சகர் Steven Jay Schneider 2003இல் எழுதிய சிறந்த 1001 படங்கள் பற்றிய புத்தகம் இது. இந்த லிஸ்டை வருடந்தோறும் சில படங்களை நீக்கி புது படங்கள் கொண்டு அப்டேட் செய்து புது editionகளாக வெளியிட்டு வருகிறார். Link 1 நான் பின்பற்றும் 2018 version of the list. Link 2 2015லிருந்து இந்த புத்தகத்தில் இடம்பெற்ற (அடுத்தடுத்த வருடங்களில் நீக்கப்பட்ட படங்களையும் சேர்த்த) படங்களின் லிஸ்ட்.


7. Roger Ebert’s Great Movies

Link: [https://www.rogerebert.com/great-movies](https://www.rogerebert.com/great-movies)

புகழ்பெற்ற, எனக்கும் பிடித்த விமர்சகர்களின் ஒருவரான Roger Ebert, Great Movies என்று தேர்ந்தெடுத்த படங்களின் லிஸ்ட்.


8. Jonathan Rosenbaum’s essential films

Link: [https://mubi.com/l…/jonathan-rosenbaums-1000-essential-films](https://mubi.com/l…/jonathan-rosenbaums-1000-essential-films)

எனது மற்றுமொரு favorite criticகான Jonathan Rosenbaumதேர்ந்தெடுத்த அவரின் favorite படங்கள். மற்ற எந்த லிஸ்டை காட்டிலும் இதிலதான் ஏகப்பட்ட variety, off-beat, rare கேள்வியேபட்டிராத படங்கள். அநேகமாக என் வாழ்நாளில் நான் முடிக்கும் கடைசி லிஸ்ட்டாகத்தான் இருக்குமிது.


9. Leonard Maltin's 100 Must-See Films of the 20th Century

Link: [https://www.listchallenges.com/leonard-maltins-100-must-see…](https://www.listchallenges.com/leonard-maltins-100-must-see…)

Source Category: Entertainment Media / Websites / Magazines Lists

********************************************************

நான் பின்பற்றும் பெரும்பாலான லிஸ்ட்கள் இந்த வகைதான். அந்த அளவுக்கு சினிமாவிற்காக செய்ல்படும் மீடியாக்கள், இதழ்கள், வலைத்தளங்கள் இன்டர்நெட் முழுக்க நிறைந்துள்ளன. அதேபோல் இவற்றில் பெரும்பாலானவை எனது weak areaவான சமீபத்திய படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும் நான் இவற்றை அதிகம் follow செய்வதற்கு ஒரு காரணம்.


“All-Time” Lists:


10. Sight & Sound Magazine’s The 100 Greatest Films of All Time

Link: https://en.wikipedia.org/…/The_Sight_%26_Sound_Greatest_Fil…

சினிமா ஆர்வலர்களிடம் நடத்தப்படும் opinion pollகளில் மிகவும் புகழ் பெற்றது பிரிட்டிஷ் இதழான Sight & Sound இதழ் நடத்தும் இந்த poll. இந்த polls 1952லிருந்து பத்து வருடத்திற்கு ஒரு முறையென இன்று வரை தொடர்கிறது. கடைசி poll 2012ல் நடத்தப்பட்டது. அடுத்த poll இன்னும் இரண்டு வருடத்தில்.


11. Rotten Tomatoes’ TOP 100 MOVIES OF ALL TIME

Link: https://www.rottentomatoes.com/top/bestofrt/

இந்த தளத்தை பற்றி அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அவர்களின் சில formula படி 100 best reviewed films.


12. Metacritic’s Top 100 Films of All Time

Link: [https://www.metacritic.com/…/m…/score/metascore/all/filtered](https://www.metacritic.com/…/m…/score/metascore/all/filtered)

Rotten Tomatoesஸைவிட கொஞ்சம் ஸ்ட்ரிக்டான அளவீடுகள் கொண்ட review gathering then scoring kind of தளம்.


13. TIME Magazine’s ALL-TIME 100 Movies

Link: [https://entertainment.time.com/…/all-time-100-mo…/slide/all/](https://entertainment.time.com/…/all-time-100-mo…/slide/all/)

பாப்புலர் சினிமா இதழான TIME இதழ் வெளியிட்ட லிஸ்ட். பொதுவாக மேற்கத்திய மீடியாக்கள் தொகுக்கும் All-time 100 best படங்களின் லிஸ்ட்களில் இந்திய படங்கள் இடம்பெறுவதே கடினம். மிஞ்சிப்போனால் Pather Panchaliயை மட்டும் சேர்ப்பார்கள். ஆனால் இந்த லிஸ்ட்டில் ஒரு தமிழ் படம் (நாயகன்) இடம்பெற்றிருக்கிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த லிஸ்ட் நம்மூர் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டது.


14. Cahiers du Cinéma's 100 Films for an Ideal Cinematheque

Link: [https://fr.wikipedia.org/…/100_films_pour_une_cin%C3%A9math…](https://fr.wikipedia.org/…/100_films_pour_une_cin%C3%A9math…)

புகழ்பெற்ற பிரெஞ்சு சினிமா இதழான Cahiers du Cinema தொகுத்த நூறு முக்கிய திரைப்படங்கள் லிஸ்ட்.


15. Taschen’s 100 All-Time Favorite Movies

Link: [https://letterboxd.com/…/taschens-100-all-time-favorite-mo…/](https://letterboxd.com/…/taschens-100-all-time-favorite-mo…/)

புகழ்பெற்ற ஜெர்மன் பதிப்பகமான Taschen தொகுத்த லிஸ்ட்.


16. Bravo! Magazine’s 100 Essential films

Link: [https://www.listal.com/list/bravo-100-filmes-essenciais](https://www.listal.com/list/bravo-100-filmes-essenciais)


17. Slant magazine’s 100 Essential Films

Link: [https://www.slantmagazine.com/film/100-essential-films/](https://www.slantmagazine.com/film/100-essential-films/)

ஒரு இயக்குனருக்கு ஒரு படம் மட்டும் அனுமதிக்கும் இந்த லிஸ்டின் கண்டிஷன் இந்த லிஸ்டை மற்ற All-time 100 essential films லிஸ்ட்களிலிருந்து தனித்து தெரிய வைக்கிறது. பொதுவாக பேசுபொருளாகாத நிறைய முக்கிய படங்கள் இதில் இடம்பெற்றிருக்கும்.


18. TimeOut’s 100 best movies of all time

Link: [https://www.timeout.com/…/f…/the-100-best-movies-of-all-time](https://www.timeout.com/…/f…/the-100-best-movies-of-all-time)


19. BBC Culture’s The 100 Greatest American films

Link: [https://www.bbc.com/…/20150720-the-100-greatest-american-fi…](https://www.bbc.com/…/20150720-the-100-greatest-american-fi…)


20. Empire Magazine’s The 500 Greatest Movies Of All Time

Link: [https://www.empireonline.com/…/features/500-greatest-movies/](https://www.empireonline.com/…/features/500-greatest-movies/)

Empire Magazine ஒரு புகழ்பெற்ற சினிமாவுக்காக இயங்கும் மீடியா .இவர்கள் லிஸ்ட்கள் கொஞ்சம் populistடாகவும் mainstream மாகவும் இருக்கும்.


21. TSPDT’s 1000 Greatest Films

Link: [http://www.theyshootpictures.com/gf1000_all1000films_table.…](http://www.theyshootpictures.com/gf1000_all1000films_table.…)

Official opinion pollகளுக்கு Sight & Sound list போல unofficial survey listகளுக்கு இந்த லிஸ்ட் மிக பிரபலம். பல்வேறு வல்லுநர்கள் பல்வேறு காலங்களில் பிரசுரித்த லிஸ்ட்களிலிருந்து formula apply செய்து உருவாக்கப்பட்ட லிஸ்ட் இது.


22. TimeOut's 1000 Films to Change Your Life

Link: [https://www.imdb.com/list/ls033334936/](https://www.imdb.com/list/ls033334936/)

லண்டனின் TimeOut இதழின் “வாழ்க்கையை மாற்றக்கூடிய 1000 படங்கள்” என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது இந்த லிஸ்ட் . இதிலிருந்து சில படங்களை பார்த்தவுடனேயே தெரிந்தது இது மற்ற All time best படங்கள் லிஸ்ட் போல இல்லை என்று. வாழ்க்கையை மாற்றவில்லையென்றாலும் ஒரு சிறு impactடயாவது ஏதேனும் ஒரு வகையில் இல்லிஸ்டில் உள்ள படங்கள் ஏற்படுத்தின. அதனால் நான் பின்பற்றும் ஒரு முக்கிய லிஸ்ட்டாக இது மாறி போனது.


23. All-Time Worldwide Box office Blockbusters

Link: [https://www.boxofficemojo.com/chart/top_lifetime_gross/…](https://www.boxofficemojo.com/chart/top_lifetime_gross/…)

உலகளவில் அதிக வசூல் செய்த படங்களின் லிஸ்ட். So 99% Hollywood Blockbusters படங்கள்தான். இருக்கும் இதில். Current Trend, வெகுஜன மக்களின் ரசனை, பொழுதுபோக்குக்காக எடுக்கப்படும் படங்கள்ல டச் விட்டு போயிடக்கூடாது என்பதுதான் நான் இந்த லிஸ்ட்ட பின்தொடர முக்கிய காரணம் .


Non-English Film Lists:


24. BBC Culture’s The 100 Greatest Foreign-Language Films

Link: https://www.bbc.com/…/20181029-the-100-greatest-foreign-lan…

BBC நிறுவனம் கடந்த சில வருடங்களாக சினிமா வல்லுனர்களிடமிருந்து பல லிஸ்ட்களை தொகுத்து வழங்கிக்கொண்டிருக்கிறது. அப்படி தொகுக்கப்பட்டு சமீப காலங்களில் பரவலாக பின்பற்றப்படும் லிஸ்ட் இது.


25. Empire’s The 100 Best Films Of World Cinema

Link: https://www.empireonline.com/…/100-greatest-world-cinema-f…/


26. The Satyajit Ray Memorial Anything-But-Definitive List of Non-English Language Films

Link: [http://eddieonfilm.blogspot.com/2005/12/foreign-art.html](http://eddieonfilm.blogspot.com/2005/12/foreign-art.html)

சத்தியஜித் ரே நினைவுநாளுக்காக 2007ல் எட்வர்ட் கோப்லேண்ட் என்னும் சினிமா ஆர்வலர் மற்ற சினிமா ஆர்வலர்களிடமிருந்து லிஸ்ட்களை பெற்று தொகுத்த லிஸ்ட்.


21st Century Lists:


27. BBC Culture’s The 21st Century’s 100 Greatest films

Link: [https://www.bbc.com/…/20160819-the-21st-centurys-100-greate…](https://www.bbc.com/…/20160819-the-21st-centurys-100-greate…)


28. Empire’s The 100 Greatest Movies Of The 21st Century

Link: [https://www.empireonline.com/…/features/best-movies-century/](https://www.empireonline.com/…/features/best-movies-century/)


29. AV Club’s The best films of the 2000s

Link: https://film.avclub.com/the-best-films-of-the-00s-1798222348


30. AV Club’s The best films of the 2010s

Link: [https://film.avclub.com/the-100-best-movies-of-the-2010s-18…](https://film.avclub.com/the-100-best-movies-of-the-2010s-18…)


31. IndieWire’s The 100 Best Movies of the Decade(2010s)

Link: [https://www.indiewire.com/gall…/best-movies-of-2010s-decade/](https://www.indiewire.com/gall…/best-movies-of-2010s-decade/)


Silent Films Lists:

32. Paste Magazine’s The 100 Best Silent Films of All Time

Link: [https://www.pastemagazine.com/…/the-100-best-silent-films-…/](https://www.pastemagazine.com/…/the-100-best-silent-films-…/)


33. Filmsranked.com’s 100 Greatest Silent Films of All Time

Link: [https://www.filmsranked.com/silent-films/](https://www.filmsranked.com/silent-films/)

Source Category: Film Institutes / Organizations Lists

*******************************************


34. American Film Institute’s (AFI) 100 Years… 100 Movies

Link 1 (1998 version): [https://en.wikipedia.org/wiki/AFI%27s_100_Years...100_Movies](https://en.wikipedia.org/wiki/AFI%27s_100_Years...100_Movies)

Link 2 (2007 version): https://en.wikipedia.org/…/AFI%27s_100_Years...100_Movies_(…

American Film Institute (AFI), அமெரிக்க சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் விதமாக AFI 100 years… என்னும் தலைப்பில்1998 லிருந்து வெவ்வேறு பிரிவில் சிறந்த, cultural impact ஏற்படுத்திய முக்கியமான அமெரிக்க சினிமாக்களை தேர்ந்தெடுத்தது. அதில் சிறந்த படங்கள் பிரிவுக்கான லிஸ்ட் இது. இது தவிர Thrillers, Comedies, Heroes & Villains, Quotes என்று நிறைய லிஸ்ட்கள் உள்ளன. மேற்சொன்ன Wikipedia லிங்கை பார்த்தாலே அவைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம்.


35. British Film Institute’s (BFI) Top 100 British Films

Link: [https://en.wikipedia.org/wiki/BFI_Top_100_British_films](https://en.wikipedia.org/wiki/BFI_Top_100_British_films)

AFI lists பொதுவாக தரத்தை விட வசூல் சாதனை செய்த mainstream படங்களுக்கு முன்னுரிமை தருவதாக பரவலான குற்றச்சாட்டு பொதுவாக சினிமா ஆர்வலர்கள் மத்தியில் உண்டு. அதனால் BFIலிஸ்ட்களுக்கு அவர்களிடம் மதிப்பு கொஞ்சம் அதிகம். BFI யும் பல்வேறு genreகளுக்கு லிஸ்ட்களை தயாரித்துள்ளது. BFI தளத்தில் அவைகளைப்பற்றி அறிய முடியும் .

36. BFI’s 100 Essential Silent Films

Link: [https://www.imdb.com/list/ls006276824/](https://www.imdb.com/list/ls006276824/)

37. National Film Archive of India's 125 Great Indian Films

Link: [https://www.imdb.com/list/ls004942690/](https://www.imdb.com/list/ls004942690/)

International Federation of Film Archives 1995ல் National Film Archive of Indiaவை கலாச்சாரம், வரலாறு, திரைப்பட தரம், கலை போன்றவற்றில் சிறந்து விளங்கிய இந்திய படங்களின் பட்டியலை தருமாறு கேட்டுக்கொண்டது. அதற்கு NFA அளித்த லிஸ்ட்தான் இது. Classic Indian படங்களை பின்தொடர விரும்புவோருக்கு ஏற்ற லிஸ்ட்.


38. National Board of Review’s Best films

Link: [https://nationalboardofreview.org/award-years/2019/](https://nationalboardofreview.org/award-years/2019/)

1930 முதல் அமெரிக்காவின் National Board of Review தேர்ந்தெடுத்த Best films , Best Foreign Films லிஸ்ட்


39. Writers Guild of America’s 101 Greatest Screenplays

Link: [https://www.wga.org/…/101-bes…/101-greatest-screenplays/list](https://www.wga.org/…/101-bes…/101-greatest-screenplays/list)


40. National Society of Film Critics’ 100 Essential Films

Link: [https://www.listchallenges.com/the-national-society-of-film…](https://www.listchallenges.com/the-national-society-of-film…)

Source Category: Film Festivals / Awards

*********************************


41. Academy Awards - Best Film Winners and Nominees

Link: https://en.wikipedia.org/wi…/Academy_Award_for_Best_Picture…


42. Academy Awards – Best Foreign Film Winners and Nominees

Link: [https://en.wikipedia.org/…/List_of_Academy_Award_winners_an…](https://en.wikipedia.org/…/List_of_Academy_Award_winners_an…)


43. BAFTA Best Film Winners and Nominees

Link: https://en.wikipedia.org/wiki/BAFTA_Award_for_Best_Film


44. European Film Award for Best Film Winners and Nominees

Link: https://en.wikipedia.org/…/European_Film_Award_for_Best_Film

European Film Academyயால் 1988லிருந்து ஐரோப்பிய படங்களுக்கென்று பிரத்யேகமாக வழங்கப்படும் விருது.


45. Asian Film Award for Best Film Winners and Nominees

Link: [https://en.wikipedia.org/wiki/Asian_Film_Award_for_Best_Film](https://en.wikipedia.org/wiki/Asian_Film_Award_for_Best_Film)

Hong Kong International Film Festival Societyயால்2007லிருந்து ஆசிய படங்களுக்கென்று பிரத்யேகமாக வழங்கப்படும் விருது.


46. India’s National Film Award for Best Film

Link: [https://en.wikipedia.org/…/National_Film_Award_for_Best_Fea…](https://en.wikipedia.org/…/National_Film_Award_for_Best_Fea…)


47. Cannes Film Festival – Palme d’Or Winners

Link: [https://en.wikipedia.org/wiki/Palme_d%27Or](https://en.wikipedia.org/wiki/Palme_d%27Or)


48. Venice Film Festival – Golden Lion Winners

Link: [https://en.wikipedia.org/wiki/Golden_Lion](https://en.wikipedia.org/wiki/Golden_Lion)


49. Berlin Film Festival – Golden Bear Winners

Link: https://en.wikipedia.org/wiki/Golden_Bear

Source Category: Director’s Favorites

********************************


50. Stanley Kubrick

Link: [https://www.bfi.org.uk/…/polls-su…/stanley-kubrick-cinephile](https://www.bfi.org.uk/…/polls-su…/stanley-kubrick-cinephile)

Kubrick “இதுதான் எனது favorite படங்கள்” என்று எதையும் வெளிப்படையாக சொன்னது கிடையாது. ஆனால் வெவ்வேறு காலங்களில் அவர் வியந்து பாராட்டிய, விரும்பிய படங்களென்று அவருடன் நெருக்கமாக இருந்தவர்கள் சொன்னதை வைத்து தொகுக்கப்பட்ட பட்டியல் இது.


51. Akira Kurosawa's 100 Favorite Films of All Time

Link: [https://nofilmschool.com/…/kurosawa-master-list-akiras-100-…](https://nofilmschool.com/…/kurosawa-master-list-akiras-100-…)

ஒரு இயக்குனருக்கு ஒரு படம் வீதம் என தனக்கு பிடித்த நூறு இயக்குனர்களையும், அவர்களிடம் தனக்கு பிடித்த நூறு படங்களையும் பற்றி தனது மகளுக்கு குரொசாவா சொன்னதை வைத்து தொகுத்த லிஸ்ட்.


52. Quentin Tarantino’s Favorite Movies

Link: [https://www.indiewire.com/…/screen-shot-2019-05-16-at-9-02…/](https://www.indiewire.com/…/screen-shot-2019-05-16-at-9-02…/)


53. The Aster-Eggers Watch List

Link: [https://a24films.com/not…/2019/…/the-aster-eggers-watch-list](https://a24films.com/not…/2019/…/the-aster-eggers-watch-list)

Latest sensations Ari Aster and Robert Eggers தங்களை influence செய்த படங்களென்று போன வருடம் A24 Podcast டில் குறிப்பிட்ட படங்கள்

இவைகள்தான் இப்போதைக்கு நான் “முடிக்க வேண்டும்” என்று follow செய்யும் லிஸ்ட்கள். இவை தவிர பல லிஸ்ட்களை, நான் முடிக்கவே முடியாது என்று தெரிந்தும் பின்பற்றி வருகிறேன். மேலும் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லாத பல genre / style / thematic லிஸ்ட்களை referenceகாகவும் பின்பற்றி வருகிறேன். அந்த லிஸ்ட்களின் விவரங்கள் அடுத்த பதிவில்.


Tom Leazak