> குருத்து: தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?

July 21, 2026

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி?


இன்றைய கூட்டத்தில் தமிழில் தட்டச்சு செய்த பொழுது, அதை எப்படி என தெரிந்துகொள்ள ஒருவர் கேட்டார். அவருக்காக சொன்ன பதிலை இங்கு பகிர்கிறேன்.

 

இணையத்தில், NHM writer என தேடினால், 1 MB என்கிற அளவில் கிடைக்கும். அதை உங்கள் Windows மூலம் இயங்கும் உங்கள் கணிப்பொறியில்  தரவிறக்கம் (download) செய்து கொள்ளுங்கள்.

 

அந்த சின்ன மென்பொருளை இன்ஸ்டால் செய்யும் பொழுது தமிழ் மொழியை தேர்வு செய்யுங்கள். (அதில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நிறைய இருக்கும். தேவையெனில் அதிலும் எழுதலாம்.) 

 

ஒருவேளை உங்கள் சிஸ்டத்தில் வேலை செய்யவில்லை என்றால், உங்கள் கணிப்பொறி தன்னுடைய பாதுகாப்புக்காக புதிய மென்பொருள் எதையும் கணிப்பொறியில் அனுமதிக்காமல் தடுக்கும். அதை சரி செய்தால் தான், இந்த மென்பொருள் வேலை செய்யும்.

 

Alt + 2 press செய்தால் தமிழ் மொழியில் தட்டச்சு செய்யலாம்.  மீண்டும் Alt + 2 press செய்தால்  பழைய நிலைமைக்கே ஆங்கிலத்தில் மாறும்.

 

முயற்சி செய்யுங்கள்.

 

நன்றி.

 

-         இரா. முனியசாமி

 

குறிப்பு : NHM மென்பொருளை எப்படி இன்ஸ்டால் செய்வது என்பதை காணொளியில் விளக்குகிறார். கவனியுங்கள்.

 

https://www.youtube.com/watch?v=6OlWMK8Tsqc

 

0 பின்னூட்டங்கள்: