சமீபத்தில் 70+ வயதில் இருக்கும் ஒர் நிறுவனத்தின் நிர்வாகியைச் சந்தித்தேன். அவர் “உங்களை நேரில் வரவழைத்தது… அறிவு பலருக்கும் இருக்கும். செய்யும் தொழிலில் சின்சியராக இருக்கிறீர்களா? என பார்க்கத்தான் அழைத்தேன் ” என்றார். பிறகு எனக்கு நிறுவனத்தின் வேலையை கொடுத்தார்.
இன்னொரு முறை
சந்திக்கும் பொழுது… “எப்பொழுதும் நமக்கு குழு அவசியம். இல்லையென்றால், இனியாவது உருவாக்கிக்கொள்ளுங்கள். அது வளர்ச்சிக்கு
மிக அவசியம்” என ஆலோசனை தந்தார்.
நமது உறுப்பினர்
ஒருவரிடம் இதைப் பற்றி சொன்னேன். அவர் இரவு
12 மணியெல்லாம் வாடிக்கையாளர்களிடம் பேசி, வேலைகளை செய்துக்கொண்டிருந்தார்.
நமது தலைவரிடம்
17 பேர் நல்ல ஆற்றலுடன் இருந்தவர்களை வேலைக்கு வைத்து இருந்திருக்கிறார். நல்ல சம்பளம். வருடத்திற்கு இரண்டு, மூன்று போனஸ்
என நன்றாகவும் கவனித்திருக்கிறார். அவரும் குழு என்பது அவசியம். எத்தனை ஆற்றலாக இருந்தாலும், தனிநபரின் வளர்ச்சிக்கு
ஒரு வரம்பு இருக்கிறது என்பார்.
ஒரு வரி ஆலோசகர்
வேலைகளை கொண்டு வருவதிலும், தமது குழுவினருக்கு அறிவை பகிர்ந்துகொண்டே இருக்கவேண்டும்.
சரியாக வேலையை செய்கிறார்களா என கவனித்துக்கொள்ளவேண்டும் என பேசிக்கொண்டிருந்தோம்.
இப்பொழுது
அவர் இரவு வேலையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டார். வேலைக்கு ஒரு பெண் பணியாளரை நியமித்துக்கொண்டார்.
57வது ஜி.எஸ்.டி
கவுன்சில் தந்த மாற்றங்களை… கொஞ்சம் உற்றுக் கவனித்து, இரண்டு பேருக்கு தெரிவித்ததில்…
இரண்டு பேரும் ஜி.எஸ்.டி எடுத்து தாருங்கள் என சொன்னதை உற்சாகமாக பகிர்ந்துகொண்டார்.
அவர் உணரந்து
சொன்னது இது தான். நிறுவனத்தை வளர்க்கவேண்டுமென்றால், நாம் 15 மணி நேரம் வேலை செய்து
உழன்று கொண்டே இருக்கக்கூடாது. நமக்கான குழுவை உருவாக்கவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்
என்றார்.