> குருத்து

November 8, 2025

ஒரு வரி ஆலோசகருக்கு நகைச்சுவை உணர்வு (Humor Sense) ஏன் அவசியம்?

 


வரி ஆலோசகரின் நாட்கள் எளிதானவை அல்ல. சிக்கலான சட்டங்கள், குறைபாடுகளுடனான கணக்கு, எப்பொழுதும் காலக்கெடுவிற்குள் வேலையை முடிக்க மல்லுக்கட்டுவது, அதிகாரிகளின் சிடுசிடு கேள்விகள்,  வரித் தளங்களின் இழுத்தடிப்புகள், தொங்கல்கள் என எல்லாமுமாய் சேர்ந்து வாழ்க்கையே ஒரு சுழலுக்குள் சிக்கியது போல தோன்றும்.

 

இப்படிப்பட்ட சூழலில் மனதை சமநிலைப்படுத்தி, நிதானமாக புன்னகைத்துக் கொண்டே செயல்பட உதவுவது — நகைச்சுவை உணர்வு தான்.

 

 “சிரிப்பு என்பது உயிரின் சமநிலையை காப்பாற்றும் அறிவு.”

— மகாத்மா காந்தி

 

நகைச்சுவை உணர்வு என்ன தரும்?

 

1. மன அழுத்தம் கரையும். சின்ன புன்சிரிப்பு மனதைக் குளிர்விக்கும்.

 

2. வாடிக்கையாளர்கள் நெருக்கம் பெறுவர். சிரிப்புடன் பேசும் ஆலோசகர் எளிதில் நம்பிக்கையைப் பெறுவார்.

 

3. கடுமையான விவாதங்களும் மென்மையாவதுண்டு. கோபத்தையும் பதட்டத்தையும் சிரிப்பு நிமிடத்தில் உருகச் செய்கிறது.

 

4. அணி உறவுகள் வலுப்படும். அலுவலகத்தில் சிரிப்பு பரவியால் ஒற்றுமையும் பெருகும். வேலையில் லகுத்தன்மை வரும்.

 

5. சொல்வதெல்லாம் நினைவில் நிற்கும். நகைச்சுவையுடன் கூறிய விளக்கம் மனதில் தங்கும்.

 

6. நல்ல அபிமானம் உருவாகும். சிரிக்க தெரிந்தவர் *“அன்பும் அறிவும் கலந்த நிபுணர்”*  எனப் பார்க்கப்படுவார்.

 

7. தோல்வியையும் இலகுவாக ஏற்றுக் கொள்வது எளிதாகும். சிரிப்பவன் தோல்வியிலும் தெளிவை காண்கிறான்.

 

 “சிரிக்கக் கூடியவன் எதையும் சமாளிக்கக் கூடியவன்.” — மார்க் ட்வெயின்

 

நகைச்சுவை உணர்வை வளர்ப்பது?

 


1. விசயங்களைத் தீவிரமாகப் பாருங்கள். சில தவறுகள் கற்றுத்தரும் என என சொல்லிக்கொண்டு ஏற்றுகொள்ளுங்கள்.

 

2. ஒவ்வொரு சிரமத்திலும் ஒரு சிறிய சுவாரஸ்யம் மறைந்து இருக்கும். கண்டுபிடிக்கப் பழகுங்கள்.

 

3. மரியாதையுடன் நகைச்சுவைச் சொல்லுங்கள்.  எப்பொழுது எதைச் சொல்வது என்பதைப் புரிந்தால் அது கலை.

 

4. நல்ல நகைச்சுவைப் படைப்புகளைப் படியுங்கள், கேளுங்கள், சுற்றி நடப்பனவற்றை சின்ன புன்வுறுடலுடன் பாருங்கள்.

 

5. பிறரின் உணர்ச்சியை மதித்து நகைச்சுவை பேசுங்கள்.  நகைச்சுவை அன்போடு கலந்திருக்கும்போது மட்டுமே அது நயமாகும்.

 

இறுதியாக...

 

நகைச்சுவை உணர்வு என்பது கேலிச் சொல் அல்ல; அது ஒரு உளவியல் வலிமை,

ஒரு மன சமநிலைப் பயிற்சி.

 

ஒரு வரி ஆலோசகர் சிரிக்கத் தெரிந்தால், அவரின் அலுவலகம் கணக்கு அறையாக இல்லாமல் அறிவும் அமைதியும் நிறைந்த அரங்கம் ஆக மாறும்.

 

"நகைச்சுவை படைப்பாற்றலை அதிகரிக்கிறது, சுய கண்காணிப்பை எளிதாக்குகிறது, மேலும் அறிவாற்றல் மற்றும் நடத்தை மாற்றங்களைத் தூண்டுகிறது."  - Paul Hawken

 

-          இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721



High Professional Conduct- ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் அவசியம்?


ஒரு வரி ஆலோசகர் தொழில்நுட்ப அறிவால் மட்டுமே சிறந்தவர் அல்ல. உண்மையான தொழில்முறை நிபுணர் ஆக இருப்பது என்பது அவரின் நேர்மை, நேர்த்தி, பணிநெறி ஆகியவற்றின் உயர்ந்த தரத்தில்தான் உள்ளது.

 

“நான் ஒருவரை வேலைக்கு எடுப்பதற்காக மூன்று குணங்களை நாடுவேன் — *நேர்மை*, அறிவு, ஆற்றல். முதலாவது *இல்லையென்றால், மற்ற இரண்டும் ஆபத்தாக மாறும்.*”

–  வாரன் பெஃபட்

 

நேர்மை என்பது எந்த தொழிலிலும் நம்பிக்கையின் அடிப்படை. வரி ஆலோசகர் வாடிக்கையாளரின் நிதி, சட்ட ரகசியங்களை கையாள்வதால், உண்மையையும் நம்பிக்கையையும் கடைபிடிப்பது அவரது முதல் கடமை. சிறிய பொய் பெரிய இழப்பில் முடியும்.

 

நேர்த்தி (Punctuality) மற்றும் ஒழுக்கம் — ஒரு ஆலோசகரின் நன் மதிப்பை உருவாக்கும் தூண்கள்.

 

“ஒழுக்கம் என்பது இலக்குக்கும் சாதனையுக்கும் இடையே உள்ள பாலமாகும்.” – ஜிம் ரோன்

 

வரி தாக்கல், ஆலோசனை, தணிக்கை — எதிலும் நேரத்தை மதிப்பது நம்பிக்கையை உறுதிப்படுத்தும். நேரத்தை மதிப்பவன் பிறரைவும் மதிப்பான்.

 

பணிநெறி (Work ethic) என்பது வெறும் உழைப்பு அல்ல; பணியை ஒரு உணர்வுப்பூர்வமான கடமையாகக் காணும் மனநிலை.

 

*“யாரும் பார்க்காதபோதும் சரியாகச் செய்வதே தரமான பணியாகும்.”*

– ஹென்றி ஃபோர்டு

 

*ஒரு சிறந்த ஆலோசகர் வெளி பாராட்டிற்காக அல்ல, உள்ளுணர்வுக்காக சிறப்பைத் தேடுவான்.*

 


தினமும் நம்மிடம் நாமே கேட்போம்.

“இன்று நான் நேர்மை, நேர்த்தி, ஒழுக்கத்துடன் நடந்துகொண்டேனா?”
அந்த ஒரு சிந்தனையே உன்னை உயர்ந்த தரத்தில் நிறுத்தும்.

 

“தொழில்முறையின் தன்மை என்பது நாம் என்ன வேலை செய்கிறாய் என்பதல்ல;
அதை எப்படிச் செய்கிறோம் என்பதே அதின் அளவுகோல்.”

 

இறுதியாக…


நேர்மை நம்பிக்கையை உருவாக்கும்,
நேர்த்தி மதிப்பை உருவாக்கும்,
ஒழுக்கம் நீண்டகால வெற்றியை உருவாக்கும்.

இவை மூன்றும் சேர்ந்து…

“*ஒரு வரி ஆலோசகரை நிபுணராக அல்ல, நம்பிக்கைக்குரிய மனிதனாக மாற்றுகின்றன.”*

Emotional Intelligence – ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் அவசியம்?


Emotional Intelligence
(உணர்ச்சி நுண்ணறிவு) என்பது தன் உணர்ச்சிகளையும், பிறரின் உணர்ச்சிகளையும் அறிந்து, புரிந்து, சரியாக சமாளிக்கும் திறன் ஆகும்.

 

அமெரிக்க உளவியலாளர் Daniel Goleman இதை நான்கு முக்கிய கூறுகளாக பிரிக்கிறார்:

  1. Self-awareness – தன் உணர்ச்சியை அறிதல்
  2. Self-management – அதை கட்டுப்படுத்தி கையாளுதல்
  3. Social awareness – பிறர் உணர்ச்சியை உணர்தல் (Empathy)
  4. Relationship management – மனித உறவுகளை திறமையாக கையாள்தல்

 

ஒரு வரி ஆலோசகருக்கு ஏன் தேவை?

 

வரி ஆலோசகர் தினமும் வாடிக்கையாளர்களுடன், துறை அதிகாரிகளுடன், தனது பணியாளர் குழுவுடன் தொடர்பு கொள்கிறார். அங்கு உணர்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

உணர்ச்சி நுண்ணறிவு கொண்ட வரி ஆலோசகர்:

 

  • நெருக்கடியான சூழலில் வாடிக்கையாளரின் கோபத்தையும் அமைதியாக சமாளிக்கிறார்.
  • வாடிக்கையாளரின் உணர்வுகளைப் புரிந்து, நம்பிக்கையையும் நெருக்கத்தையும் உருவாக்குகிறார்.
  • பணியாளர் குழுவில் நேர்மறை (positive) சூழலை உருவாக்குகிறார்.

 

இது வெறும் தொழில்நுட்ப அறிவு அல்ல — மனித மனதைப் புரியும் திறன் தான் வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெருக்குகிறது.

 

எப்படி வளர்த்துக்கொள்வது?




·         Self-reflection: தினமும் நமது உணர்ச்சிகளைப் பற்றி கொஞ்சம் அசைபோடுங்கள் — “எனக்கு ஏன் கோபம் வந்தது?” என்று.

 

·         Active listening: வாடிக்கையாளர் பேசும்போது கவனமாக கேளுங்கள், அவர்களைப் புரிந்துகொண்டு, பதிலளியுங்கள். அவசரம் தவிருங்கள். சமகாலத்தில் குறைந்து கொண்டு வருகிற பழக்கம்.

 

·         Empathy பயிற்சி: பிறரின் நிலையை நிதானமாய் உணர்ந்து பார்க்க  பழகுங்கள். (Sympathy தான் பலருக்கும்  பழக்கம் இருக்கும். Empathy நாம் பழகவேண்டும்.)

 

·         Stress management: யோகா, நடைபயிற்சி, deep breathing — மனதை அமைதியாக வைக்கும் பழக்கங்கள்.

 

·         Feedback கேளுங்கள்: நம்பகமான நண்பர் அல்லது சக ஊழியர் நம்மை எப்படி பார்க்கிறார் என்பதை கேளுங்கள்.

 

    நல்ல உணவு. எட்டு மணி நேர தூக்கம். நிதானமான, ஆரோக்கியமான வேலை முறை.

 

வரி ஆலோசகர் ஒருவர் உணர்ச்சிகளை சரியாக கையாளத் தெரிந்தால் — நம்பிக்கை, வாடிக்கையாளர் உறவு, பணியாளர் குழு ஒத்துழைப்பு ஆகியவை தானாகவே வளர்ந்துவிடும். நாம் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிடுவோம். 


-இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

9551291721