மாணவ பருவத்தில் ஷெர்லாக். ”களவையும் கற்று மற” என்பதின் படி, பர்சை திருடி, அவர்களிடமே திரும்ப வைக்கும் பொழுதோ, கொடுக்கும் பொழுதே மாட்டிக்கொள்கிறார். சிறைத் தண்டனை கிடைக்கிறது.
அரசு பதவியில்
இருக்கும் உடன் பிறந்த அண்ணன், தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, சிறையில் இருந்து விடுவதித்து
ஷெர்லாக்கை படிக்க வைக்கிறேன் என நைசாக அழைத்துப் போய் ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில்
வேலை செய்ய வைக்கிறார்.
அவருடைய ஆர்வத்தில்
வேலை செய்துகொண்டே கற்றும்கொள்கிறார். அங்கு ஒரு மதிப்புமிக்க பொருள் திருடு போகிறது.
ஏற்கனவே திருடன் பட்டம் இருக்கும் ஷெர்லாக் மீது பழி விழிகிறது. அங்கு படிக்கும் (பின்னாளில் புத்திசாலி எதிரியான)
மோரியாரிட்டி அவருக்கு பலவிதத்தில் உதவுகிறான். அங்கிருக்கும் பேராசிரியர்கள் ஒவ்வொருவராக
கொலைச்செய்யப்படுகிறார்கள்.
இந்த கொலைகள்
ஏன் என தொட்டுத் தொட்டு துப்பறிந்து, மல்லுக்கட்டி, அது மனித உயிரைக் கொல்லும் ஒரு பெரிய வணிகத்தின்
பின்னால் போய் நிற்கிறது. அதில் ஷெர்லாக் குடும்பத்திற்குள்ளேயே
ஒரு வில்லன் இருக்கிறான்.
பிறகு என்ன
ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
***
ஷெர்லாக்
குறித்து Arthur Conan Doyle எழுதியது 4 நாவல்கள். 58 சிறுகதைகள்
கதைகள். (இன்னும் சில ஒரிஜினல்கள் என வாதிப்பவர்களும் இருக்கிறார்கள்.) அதன் பிறகு
எடுக்கப்பட்ட படங்கள், சீரிஸ்கள், தொலைக்காட்சி படங்கள் நிறைய. ஷெர்லாக் பாத்திரத்தின் தாக்கத்தில் உலகம் முழுவதும்
எடுக்கப்பட்ட படங்களின் எண்ணிக்கைகளும் கணக்கில் அடங்காது. இதில் தமிழில் மிஷ்கினின் துப்பறிவாளன் உட்பட அடங்கும்.
மாணவப் பருவ
ஷெர்லாக் கதைகள் இதுவரை படமாக இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த தொலைக்காட்சி சீரிஸ்
ஒரு நல்ல தொடக்கமாக இருக்கிறது. ஆக்ஸ்போர்டில் துவங்கும் கொலைகள், பிறகு யூடர்ன் அடித்து,
ஷெர்லாக்கின் சொந்த குடும்பத்திற்குள் ஏகப்பட்ட டிராமாக்களை உருவாக்கியிருக்கிறார்கள்.
ஷெர்லாக்கின்
மாணவ பருவத்தில் இருக்கும் துப்பறியும் அறிவு, மற்றவர்களும் அதற்கு உதவுவது எல்லாம்
நன்றாக இருக்கிறது
மேலோட்டமாக
எடுக்காமல், கொஞ்சம் மெனக்கெட்டு, துவக்கத்தில் இருந்து, கடைசி வரை விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள். எல்லா பாத்திரங்களும் நினைவில் நிற்பது இதன் பலம்.
நடிகர்களும் பலம் சேர்த்திருக்கிறார்கள்.
பிரைமில் தமிழில் இருக்கிறது. துப்பறிதல் + ஆக்சன் படங்களில் ஆர்வம் உள்ள ரசிகர்கள் நிச்சயம் பார்க்கலாம். தவற விடாதீர்கள்.

0 பின்னூட்டங்கள்:
Post a Comment