> குருத்து: War machine (2026) அதிரடி ஆக்சன் படம்

March 22, 2026

War machine (2026) அதிரடி ஆக்சன் படம்


நாயகன் அமெரிக்காவின் போர்க்களத்தில் வண்டிகளை பழுதுப் பார்ப்பவராக இருக்கிறார்.  நாயகனின் தம்பியும் இராணுவத்தில் பணிபுரிகிறார்.  இராணுவத்தின் மிகவும் சிறப்பு பிரிவான, கடுமையான பயிற்சிகளை கொண்ட ரேஞ்சர் தகுதிக்கு, அண்ணனுடன், கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்படுகிறார்.

 

ஆப்கானில் தம்பி கொல்லப்பட, தம்பியின் ஆசையை நிறைவேற்ற ரேஞ்சர் பிரிவில் பெயரை கொடுக்கிறார்.   மெல்ல மெல்ல இறுதி கட்டத் தேர்விற்கு முன்னேறுகிறார்.

 

தேர்ந்தெடுத்த அந்தக் குழு டம்மி துப்பாக்கிகளுடன்  ஒரு காட்டுப் பகுதிக்கு ஒரு பயிற்சிக்கு இறக்கிவிடப்பட, எதைச்சையாக வேற்று கிரகத்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட நவீன ஆயுதங்கள் கொண்ட ஒரு எந்திர மிஷினை எதிர்கொள்கிறார்கள்.

 

மொத்தக் குழுவும் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடுகிறது. பிறகு என்ன ஆனது என்பதை இறுதி வரை பரபரப்பாக கொண்டு சென்றிருக்கிறார்கள்.

 

***


1987ல்  அர்னால்டு நடித்த பிரிடேட்டர்  படம் அதிரடி படங்களில் மறக்க முடியாத படம். அதே கதையைத் தான் வேறு ஒரு களத்தைச் சொல்லி எடுத்திருக்கிறார்கள்.  ஆனால் அதன் உயரத்தை தொடமுடியவில்லை என்பது தான் எதார்த்தம்.  கடைசிக் காட்சி இன்னும் சுத்தம்.  எடுபடவில்லை.

 

இருப்பினும் துவக்கத்தில் இருந்து இறுதி வரை விறுவிறுப்பாக கொண்டு செல்வதில் குழு வெற்றி பெற்றிருக்கிறது.

 

Reacher சீரிசில் வரும் Alan Michael Ritchson தான் நாயகன்.  மொத்தப் படத்தையும் அவர் தான் தன் உணர்ச்சியில், உடலால் தாங்கியிருக்கிறார். குழுவில் உள்ள ஆட்களையும் இன்னும் பிரதானப்படுத்தியிருக்கலாம். இதனால் அவர்கள் இறக்கும் பொழுது, பத்தோடு, பதினொன்றாக இறந்து போகிறார்கள்.

 

நெட் பிளிக்சில் தமிழில் இருக்கிறது. ஆக்சன் பிரியர்கள் மட்டும் தாராளமாய் பார்க்கலாம்.

0 பின்னூட்டங்கள்: