> குருத்து

April 23, 2020

கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி!


சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை கோடம்பாக்கத்தில், நண்பரின் நண்பர் அறையில் தங்கி ஒரு சில மாதங்கள் தங்கி வேலை தேடிக்கொண்டு இருந்தேன். (திரைத்துறையில் அல்ல!) டிகிரி முடித்திருந்த காலம்.

நண்பரின் நண்பர்கள் இருவர் திரைத் துறையில் இருந்தனர். அந்த அறையில் 'அழகிய தமிழ் மகன்' இயக்கிய பரதனும் இருந்தார்.

அவரைப் பார்க்க துறை சார்ந்த நண்பர்கள் வந்துபோவார்கள். அதில் தில், தூள் இயக்குநர் தரணியும் ஒருவர். மறைந்த கிருஷ்ணமூர்த்தியும் ஒருவர். அப்பொழுது அவர் தயாரிப்புத்துறை நிர்வாகியாக (Production Manager) இருந்தார். வாரம் ஒருமுறையாவது கூடி மணிக்கணக்கில் பேசுவார்கள்.

இவர்களில் பரதன், கிருஷ்ணமூர்த்தி இருவருமே அன்பாக பழககூடியவர்கள். பலருக்கும் உதவும் குணமுடையவர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு, பரதன் நடிகர் பார்த்திபனை வைத்து இயக்கிய படம் பாதியில் நின்று போய்விட்டது. படம் பெயர் கூட "கல்யாணசுந்தரம்" என்பதாக நினைவு. மீண்டும் வாய்ப்பு தேடிக்கொண்டிருந்தார்.

ஒருநாள் "உனக்கும் எனக்கும்' என்ற தலைப்பில் ஒரு கவிதை எழுதி நண்பரிடம் கொடுத்தேன். அவர் கிருஷ்ணமூர்த்தி, பரதன் இருவரிடம் படிக்க கொடுத்தனர்.

கவிதையை பாராட்டிய கிருஷ்ணமூர்த்தி அவர்கள், திடீரென ஒரு கேள்வி கேட்டார். "சினிமாவுக்கு எழுதுறீங்களா தம்பி?". அவர் என்னை உற்சாகப்படுத்துவதற்காக சொன்னாரா? உண்மையில் கேட்டாரா என தெரியாது. ஆனால் அவருக்கு பல இயக்குநர்களிடம் நல்ல நட்பு இருந்தது!

நான் இயல்பில் கூச்ச சுபாவம் உடையவன். அவர் கேட்டதும் சட்டென்று "எப்போதாவது தான் எழுதுவேன். அந்த அளவுக்கு வொர்த் இல்லண்ணே!" என சிரித்துக்கொண்டே சொன்னேன். அவரும் புன்னகைத்தார்.

அவருடைய இறப்பு செய்தி அதிர்ச்சியாய் இருந்தது!

அவரை பிரிந்து வாழும் அவருடைய குடும்பத்தாருக்கு அஞ்சலி!

வெற்றிகரமான குடும்பம்


ஒரு சுவாரஸ்யமான‌ கதை உண்டு. ஐம்பது ஆண்டு காலம் வெற்றிகரமான குடும்ப வாழ்க்கை நடத்திய ஒரு தம்பதியரை பேட்டி கண்டார்கள்.
கணவனைப் பார்த்து, “இந்த வெற்றிகரமான வாழ்க்கையின் ரகசியம் என்ன?” என்று கேட்டார்கள்.

கணவர் சொன்னார், “பெரிய பெரிய விஷயங்களில் முடிவுகளை நான் எடுப்பேன். சின்னச் சின்ன விஷயங்களை என் மனைவியே பார்த்துக் கொள்ளட்டும் என விட்டு விடுவேன். அது தான் எங்கள் வெற்றிகரமான வாழ்க்கை ரகசியம்”.

“அதென்ன சின்னச் சின்ன விஷயம் ?”

“என்ன டிவி வாங்கறது, என்ன கார் வாங்கறது, எங்கே டூர் போறது, எங்கே பிள்ளைகளை படிக்க வைக்கிறது…இப்படிப்பட்ட விஷயங்கள் ”

“அப்போ பெரிய விஷயங்கள் ?”

“ம்ம்…. அமெரிக்கா ஈராக் கூட போரிடலாமா ? பிரான்ஸ் சிரியாவை தாக்கலாமா ? இந்த மாதிரி! ”
 
#படித்ததில்_புன்னகைக்க_செய்தது

Shazam (2019)


கதை. மந்திர உலகத்தின் கடைசி மந்திரவாதி மனிதனை ஆட்டுவிக்கும் ஏழு தீய சக்திகளை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார். வயசாயிருச்சு என்பதால் ஒரு நல்ல ஆளை கண்டுபிடித்து ஒப்படைத்துவிட்டு ஓய்வு பெற்றுவிடலாம்னு என காத்துக்கொண்டிருக்கிறார்.

வில்லன் மந்திரவாதியிடமிருந்து தீய சக்திகளை விடுவித்து தன்வசப்படுத்திவிடுகிறான். அம்மாவை சிறுவயதில் பிரிந்து, தத்தெடுத்தவர் வீட்டில் வாழும் 16 வயது பையன். தன் அம்மாவை தேடிக்கொண்டே இருக்கிறான்.

மந்திரவாதி இப்பொழுது உள்ள நெருக்கடியால், அவசர அவசரமாய் அந்த பையனிடம் ஒப்படைத்துவிட்டு, மந்திரவாதி இறந்தும்விடுகிறார்.

அந்த நிமிடத்தில் இருந்து கலகலப்பாகிவிடுகிறது. 'Shazam' என்றால், சிறுவன் முப்பது வயது இளைஞனாகிவிடுகிறான். மீண்டும் சொன்னால் சிறுவனாகிவிடுகிறான். இலக்கு இல்லாமல் தன் சக்திகளை பயன்படுத்தி வருகிறான்.

வில்லன் சிறுவனைப் பிடித்து அந்த சக்திகளையும் கைப்பற்ற நினைக்கிறான். என்ன ஆனது என்பது முழுநீளக்கதை!

****

தீய சக்திக்கு எதிரான நல்ல சக்தி போராடுவது தான் கதை.
நல்லவன், தீயவன் என்பது மிகவும் தட்டையானது. நல்ல அம்சங்கள் மேலோங்கி இருந்தால் நல்லவன். தீய அம்சங்கள் மேலோங்கியிருந்தால் கெட்டவன். அதனால் தான் யாரும் முழுக்க நல்லவனும் இல்லை. யாரும் முழுக்க கெட்டவனும் இல்லை என்பார்கள்.

DC குழுமத்தின் சமீபத்தில் கொஞ்சம் ஓடிய படம் இது என்கிறார்கள்.
இளைஞனுக்குள் இருக்கும் சின்ன பையன் நடவடிக்கைகள் என்பது கலகலப்பானவை.

காலாண்டு விடுமுறையில் என் பெண்ணுடன் பார்த்தப்படம்.
குழந்தைகளுக்கான படம். குழந்தை மனம் கொண்டவர்களும் பார்க்கலாம். 🙂