கடந்த முறை சட்டசபை தேர்தல். ஜெ. 'இலை மலர்ந்தால்
ஈழம் மலரும்' என்றதும், பழ.நெடுமாறன் மற்றும் அவர் வகையறாக்கள்
பரவசப்பட்டு ஆதரித்தார்கள். இன்றைக்கும் வரைக்கும் ஒரு சுண்டுவிரலை
அசைக்கவில்லை. 'அம்மாவை' ஆதரித்த யாரும் விமர்ச்சிப்பதில்லை.
அடுத்து, இப்பொழுது பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. "தமிழீழம் விரைவில் அமையும்" என பா.ஜ.க யஷ்வந்த்சின்ஹா பேசியிருக்கிறார். பழ. நெடுமாறன் ஆதரித்து நிற்கிறார்.
இவங்க எப்பவும் இப்படித்தான் பாஸ்! :)
யஷ்வந்த் சின்ஹா பேட்டிக்கான சுட்டி :
www.vanakkam.com/?p=18622#.UV8dIK3BX4U.facebook
*****
நிறைய ஏ.டி.எம். இயந்திரங்களை திறந்துகொண்டே செல்கிறார்கள். ஒவ்வொருமுறையும் 20 லட்சத்திற்கும் மேல் குறையாமல் பணத்தை நிரப்புகிறார்கள்.
அதை பாதுகாக்க ரூ. 5000 க்கு ஒரு தொழிலாளியை எந்த பாதுகாப்புமில்லாமல் அம்போவென நிறுத்துகிறார்கள். கொள்ளையடிப்பவர்கள் முதலில் செக்யூரிட்டியை பலமாக தாக்குகிறார்கள் அல்லது அதிகபட்சம் கொன்றுவிடுகிறார்கள். இப்படி வருடத்திற்கு தமிழகத்திலேயே பலபேர் கொல்லப்படுகிறார்கள். அதற்குப் பிறகு, அவர்களின் குடும்பம் நிராதரவற்று போகிறது.
இவர்களின் மூலதனத்தை காக்க நம் தொழிலாளர்கள் தானா உயிரைக்கொடுக்க வேண்டும்?
http://www.dinamalar.com/news_detail.asp?id=682638
*****
பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு மீது இரண்டு இளைஞர்கள் கேஸ் போட்டிருக்கிறார்கள்.
"நாங்கள் மகேஷ்பாபு ரசிகர்கள். அவர் மது விளம்பரத்தில் நடித்தார். அதைப் பார்த்து பிடித்துப்போய் நாங்களும் குடிக்க ஆரம்பித்து, வேலையிழந்து, பொண்டாட்டியை இழந்து இப்பொழுது நடுத்தெருவில் நிற்கிறோம்.
மது குடிப்பது உடல்நலத்திற்கு கேடு என்ற வாசகமும் அந்த விளம்பரத்தில் வரவில்லை. ஆகையால், எங்களுக்கு மகேஷ்பாபு நஷ்ட ஈடு தரவேண்டும்."
- செய்தி.
மக்களின் சுகாதாரம் காக்கவேண்டிய அரசு வீதிக்கு 4 டாஸ்மார்க் கடைகளை திறப்பது தவறு என தமிழக அரசு மீது கேஸ் போடலாம். யாராவது வழக்கு போட்டு இருக்கிறார்களா?
******
வரிவிலக்கின் பலன் மக்களுக்கு இல்லையா?
சன் பிக்சர்ஸ் ஆசியுடன் என வெளிவந்ததால், 'சென்னையில் ஒரு நாள்' படத்திற்கு அரசு வரிவிலக்கு தரவில்லை என செய்தி வந்தது.
பதறிப்போய், சரத்குமார் - ராதிகா உடனே பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி, "அரசு வரிவிலக்கு தந்துவிட்டார்கள். இப்படியெல்லாம் ஏன் பொய்ச் செய்தியை எழுதுகிறீர்கள்?" என வருத்தப்பட்டார்.
- செய்தி.
எங்கள் பகுதியில் இருக்கும் திரையரங்கில் எப்பொழுதும் போல் தான் டிக்கெட் பணம் வாங்குகின்றனர்.எனக்கு ஒரு சந்தேகம்.
வரிவிலக்கு கொடுப்பது எதற்காக? படத்தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என கூட்டுக்கொள்ளை அடிப்பதற்காகவா? நல்ல படம். குறைந்த கட்டணத்தில் நிறைய மக்கள் பார்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் தானே வரிவிலக்கு கொடுக்கிறது அரசு.
இந்த திருட்டுத்தனத்தை யார் கேட்பது?
****

0 பின்னூட்டங்கள்:
Post a Comment