//புதியதன் இளம் குருத்துக்கள் பால் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்... அவற்றில் சில தவிர்க்க முடியாதபடி மடிந்து விடலாம்.. ஆனால் அதுவல்ல விவகாரம். புதியதன் குருத்துக்களை ஒன்றுவிடாமல் பேணி வளர்ப்பதே இங்குள்ள விவகாரம் - லெனின்//
பா.ம.க கடந்த சித்ரா பெளர்ணமிக்கு, "மாமல்லபுரம் 25 லட்சம் வன்னியர்கள் கூடும் விழா" என்றார்கள்.
இந்த முறை "கோடி வன்னியர் குடும்பங்கள் கூடும் விழா" என விளம்பரம் செய்கிறார்கள். குடும்பத்துக்கு நாலு பேர் வைத்தாலே, 4 கோடி பேர் 'வன்னியர்கள்' கணக்காகிறதே!
7 கோடி தமிழர்களில் 4 கோடி 'வன்னியர்களா?' கட்சி தாவுகிற மாதிரி மற்ற
சாதிக்காரர்களையும் வன்னிய சாதிக்காரர்களாக மாற்றுகிறார்களா? அதற்கு இந்து
மதத்தில் இடமில்லையே!
இப்படி எல்லா சாதி சங்க தலைவர்களும் சொல்கிற
'சாதி மக்கள் தொகை' கணக்கிட்டால், தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 16 கோடி
வருவது தான் மெகா காமெடி! :)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment