October 13, 2009
லஞ்சம் விளையாடும் புழல்சிறை!
இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். காவல்துறையின் சகல நடவடிக்கைகளிலும் மக்கள் இதை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.
காவல்துறையின் கண்காணிப்பில் உள்ள சிறையும் இதில் விதிவிலக்கல்ல! புழல் சிறையில் லஞ்சமும், முறைகேடுகளும் மலிந்திருக்கின்றன என்ற தொடர்ச்சியான புகார்களின் அடிப்படையில்... வரலாற்றில் முதன் முறையாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கிறது.
கடந்த வாரம் எஸ்.பி, டி.எஸ்.பிக்கள் அடங்கிய 50 பேர் கொண்ட ஒரு குழு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை என்று பெயர் பெற்ற சென்னை புழல் சிறையில் சோதித்தனர்.
சிறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களான பீடி, சிகரெட், பான்பராக், குட்கா தாராளமாய் கட்டு கட்டாய் சிக்கியிருக்கின்றன. கைதிகளுக்கான உணவு பொருட்கள் அதன் உண்மை இருப்பைக் காட்டிலும் மிக அதிகமாகவோ அல்லது மிக குறைவாகவோ இருந்திருக்கின்றன. வெளி மார்க்கெட்டில் நிறைய கடத்தி விற்பனை செய்கிறார்கள் என்று எழும் புகார் தனி.
இது தவிர... ஆபாச டிவிடிக்கள் நிறைய சிக்கியிருக்கின்றன. அதுவும் துணை ஜெயிலர் அறையில் 21 ஆபாச சிடிக்கள் கிடைத்தனவாம். நான்கு கைதிகளின் அறையில் விதிமுறைகளை மீறி கேபிள் டிவி இணைப்புடன் தொலைக்காட்சி பெட்டிகள் இருந்திருக்கின்றன.
சிறை அதிகாரிகள், வார்டன்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை, கிளுகிளுப்பான படங்களை ஏன் கைதிகளுக்கு சப்ளை செய்கிறார்கள்? கைதிகள் மீது பாசமா? எல்லாம் பணத்திற்காக தான்.
சோதனையின் பொழுது.. சிறை அதிகாரிகள், வார்டன்கள், சிறை மருத்துவர் ஆகியோர்களிடம் சில ஆயிரம் லஞ்சப்பணம் சிக்கியிருக்கிறது.
வெளியே ஒரு சிகரெட் ரூ. 3 என்றால்.. சிறையில் ரூ. 10. வெளியே கஞ்சா பொட்டணம் ரூ. 5 என்றால்... உள்ளே பல மடங்கு. இது தவிர மருத்துவமனைக்கு போக வேண்டுமா? மருத்துவருக்கு லஞ்சம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார். கறிக்கஞ்சி வேணுமா? மருத்துவருக்கு பணம் கொடுத்தால்... அவர் பரிந்துரைப்பார்.
ஏற்கனவே புழல் சிறையில் கடந்த துறை வாரியான சோதனையின் பொழுதே... 30க்கும் மேற்பட்ட செல்போன்கள், 2 பென்டிரைவர்கள், 12 கிலோ கஞ்சா சிக்கியிருக்கின்றன. மேலும் ஆபாச டிவிடிக்கள் சிக்கியிருக்கும் பொழுது...டிவிடி பிளேயரும் மாட்டியிருக்க வேண்டும். சிறையில் சகல நடவடிக்கைகளிலும், சகல மட்டத்திலும் லஞ்சம் விளையாடும் பொழுது, பிடிபட்ட பொருள்களும், பணமும் குறைவாக இருக்கிறதே என யோசிக்கும் பொழுது, அதற்கும் பதில் இருக்கிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை மதியம் 1 மணிக்கு போய் அனுமதி கேட்டு, வேண்டுமென்றே அரை மணி நேரத்திற்கும் மேலாக இழுத்தடித்து தான் உள்ளே அனுமதித்திருக்கிறார்கள். அரைமணி நேரத்தில் எவ்வளவோ மறைக்கலாமே!
சகல மட்டத்திலும் இப்படி லஞ்சம் விளையாடுவது அரசுக்கு தெரியாதா என்ன? எல்லாம் தெரியும். தெரிந்து... கண்டும் காணாமல் இருக்கிறது. சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! அங்கு சொல்லவா வேண்டும்.
காசு கொடுத்தால் எல்லாம் கிடைக்கும் இந்த சிறையில் தான்.... அரசியல் ரீதியாக கைதாகும் முற்போக்கு மற்றும் கம்யூனிஸ்ட் தோழர்கள் சிறையில் இருக்கும் பொழுது தான், அவர்கள் ஒவ்வொரு அடிப்படை உரிமைக்கும் போராடும் பொழுது, அங்கு நடக்கும் முறைகேடுகள் பற்றிய செய்திகள் வெளியே வருகின்றன.
குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொழுது.... இது எப்படி சாத்தியப்படும்?
****
தொடர்புடைய மேலும் சில பதிவுகள்
பயங்கரங்களுக்கு பஞ்சமில்லாத புழல்சிறை
விசாரணை கைதிகள் - சிறையில் சமையல்காரர்கள்- குருத்து
Subscribe to:
Post Comments (Atom)
8 பின்னூட்டங்கள்:
சிறை நீங்கள் சொல்வது போல அவர்களின் பேட்டை. அத்தனை மொள்ளமாரித்தனங்களும் செய்கிறார்கள்.
சட்டத்தை காபாற்றுவதாக சொல்லி கொள்ளும் இவர்களின் மொள்ளமாரித்தனங்களை அம்பலப்படுத்தியிருப்பது நன்று.
இந்த நாட்டில் சட்டத்தை மீறுபவர்கள் முதலில் யார் என போட்டி வைத்தால் நிச்சயமாய் காவல்துறை தான் ஜெயிக்கும். என்று ஆரம்பிப்பதைவிட முதலாளித்துவ நாடுகளில் சட்டத்தை மீறுபவர்கள் என ஆரம்பிப்பதே சரியானதாகும். இந்த கட்டுரையில் கூறபட்டதையொத்த விடயங்கள் பிரான்ஸ் இத்தாலி இங்கிலாந்து போன்ற வளர்முக நாடுகளிலும் அன்றாடம் நடக்கும் விடயம் என்பது பலருக்கு தெரியாத ஓர் உண்மையாகும். தமிழன்.
//குற்றங்கள் புரிந்து உள்ளே செல்லும் கைதிகளை சீர்ப்படுத்தி, திருத்தி அனுப்பும் வேலையை சிறை செய்வதாக சொல்கிறார்கள். கிரிமினல்களே நிர்வகிக்கும் பொுது.... இது எப்படி சாத்தியப்படும்?//
நியாயமான கேள்வி அன்பரே...
புழல்சிறையில் நடக்கும் இவ்வளவு லஞ்ச லாவண்யத்தை படம்பிடித்து காட்டும் உங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
குற்றவாளிகளுக்கான சிறையில் குற்றவாளிகள் தான் இருப்பார்கள், இருக்கிறார்கள். அது திருந்துவதற்கான இடமாக தெரியவில்லை.
நல்ல சிந்தனை இடுகை அன்பரே....
//சிறைக்கு வெளியே பத்திரிக்கைகள், பொதுமக்கள் என கண்காணிப்பு இருக்கும் பொழுதே சமூகத்தில் லஞ்சம் தலைவிரித்தாடும் பொழுது, சிறை காவல்துறையின் பேட்டை! //
குளிர்சாதனபெடியில் வைத்ததைப்போல குற்றவாளிகளும், அந்த குளிர்சாதனபெட்டியில் உள்ள காய்கறிகளை பதம் பார்த்து கெடாமல் பராமரிப்பவர்கலே காவலர்கள்.......
காவலர்களை மட்டும் குறை கூற முடியாது ( அரசியல் கட்சிகளும் உள்ளது)..........
தலையே சரிஇல்லாத போது, வாலை பற்றி குறைகூறி என்ன பயன்..........
லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு !
http://no-bribe.blogspot.com/
லஞ்சம் மற்றும் ஊழல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு !
http://no-bribe.blogspot.com/
நீங்க எப்ப வெளில வந்தீங்க?
Post a Comment