கடந்த 10 நாட்களுக்கு முன்பு, சென்னையில் நள்ளிரவில் ஒரு கோடிசுவர முதலாளி குடித்துவிட்டு, தாறுமாறாக வண்டியை ஓட்டி பேருந்து நிலைமேடையில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றினான். ஒரு சிறுவன் மோசமான காயத்தினால் செத்துபோனான். ஒரு சிறுமிக்கு கை முழுவதும் பாதிப்பு. இன்னும் சிலருக்கும் கடுமையான பாதிப்பு.
பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டிய முதலாளியை காவல்துறையிடம் பிடித்துக்கொடுத்தார்கள். அந்த முதலாளி குடும்பம் காவல்துறையை 'கவனித்ததும்' காரில் உடன் பயணித்த அவரிடம் வேலை செய்த தொழிலாளி மீது வழக்கு போட்டனர். பிறகு, சில போராட்டங்களுக்கு பிறகு, முதலாளி ஷாஜியை தப்பவிட்டது அம்பலமானது.
முன் ஜாமீன் கேட்டான். கிடைக்கவில்லை. காவல்துறையிடம் சிக்காமல் இருக்க நாடு நாடாக ஓடிக்கொண்டிருந்தான். அவன் நிறுவன ஊழியர்களிடம், உறவினர்களிடம் காவல்துறை விசாரணை செய்து கொண்டிருந்தது. ஷாஜியின் அப்பா 'விசாரணை' செய்து தொந்தரவு செய்வதாக வழக்கு போட்டார்.
ஒரு வழியாக நேற்று ஷாஜி கொச்சின் வந்த பொழுது, காவல்துறை கைது செய்திருக்கிறது.
இது ஒரு வழக்கு!
நேற்று சிரிபெரும்தூரில் பாணிப்பூரி விற்கும் ஒருவரின் பெண்ணை இளைஞர் ஒருவர் காதலித்து, அழைத்து சென்றுவிட்டார். கடத்தியதாய் காவல்துறை வழக்கு போட்டது. காவல்துறை பையனின் அப்பாவையும், இன்னொரு சொந்தத்தையும் பிடித்து உள்ளே வைக்க, பயந்து போன பையன் பெண்ணை அப்பாவிடமே ஒப்படைத்துவிட்டார். காவல்நிலையம் செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டனாம். பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையம் செல்வதை பார்த்த பையன் பயந்துபோய் பெட்ரோல் ஊத்தி எரித்து செத்தும் போனான்.
இது ஒரு காதல் விவகாரம். இதற்கே, அப்பாவையும் உறவினரையும் உள்ளே வைக்கிறார்கள்.
அந்த வழக்கிலோ ஒரு குடித்து விட்டு பொறுப்பில்லாமல் ஒரு பையனை கொன்று, பலரையும் கடுமையாக பாதிப்படைந்த விவகாரம்.
காசு இல்லாதவனுக்கு ஒரு நீதி! இருப்பவனுக்கு ஒரு நீதி!
தொடர்புடைய சுட்டிகள் :
ஆடம்பர கார்களின் வக்கிர கொலைகள் - வினவு

1 பின்னூட்டங்கள்:
Really pathetic situation, Thank you for this article
Post a Comment