ஒரு
விஷயத்தை தெளிவாகக் கற்றுக்கொள்ள ஆர்வம் வேண்டுமா? நல்ல ஆசிரியர் வேண்டுமா? முனைப்பான கற்றல் வேண்டுமா? தொடர்ந்து உழைக்க வேண்டுமா? உண்மையைச் சொன்னால் — நான்குமே வேண்டும்!
ஆர்வம்
இருந்தால், “இதைக்
கற்றுக்கொள்ள வேண்டும்” என்று
உள்ளே
ஒரு
தீப்பொறி எரியும். ஆசிரியர் இருந்தால், “எங்கே
போக
வேண்டும்?” என்று
வழி
தெரியும். முனைப்பான கற்றல்
இருந்தால், கற்றது
வெறும்
கேள்வி-பதில் ஆகாமல் அறிவாக
மாறும்.
தொடர்
உழைப்பு இருந்தால்தான் அந்த
அறிவு
நம்முடையதாகும்.
ஆனால்
ஒரு
வேடிக்கையான விஷயம்
இருக்கிறது. மூளை நல்ல ஆற்றலோடு
இருக்கும் நேரத்தில்கூட, அது ஏன் எளிதான வேலையைத்தான் தேடுகிறது?
உதாரணமாக, காலை
நேரத்தில் மூளை
சுறுசுறுப்பாக இருக்கிறது. “இன்று
Income Tax-ல்
ஒரு
புதிய
விஷயத்தைப் படிக்கலாம்” என்று
நினைக்கிறோம். அடுத்த
நிமிடம்… “முதலில் WhatsApp பார்த்துவிடலாம்… இரண்டு
Reels பார்த்துவிட்டு படிக்கலாம்… ஒரு
தேநீர்
குடித்துவிட்டு ஆரம்பிக்கலாம்…” என்று
மூளை
மிகச்
சாதுர்யமாக நம்மை
சமாதானப்படுத்திவிடுகிறது!
பத்து
நிமிடத்தில் நாம்
Tax Law படிப்பவராக இல்லாமல், உலகச் செய்திகளை ஆராய்ச்சி செய்பவராக மாறிவிடுகிறோம்! இதற்குக் காரணம் சோம்பேறித்தனம் மட்டுமல்ல.
மூளை
இயற்கையாகவே குறைந்த ஆற்றலில் அதிக வேலை செய்யும் பாதையை விரும்புகிறது. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்வது, சிந்திப்பது, தவறுகளைச் சரிசெய்வது — இவை
எல்லாம் மூளைக்கு அதிக
வேலை.
ஆகவே
மூளை
சொல்வது: “கஷ்டப்பட வேண்டாம். ஏற்கனவே தெரிந்த வேலையைச் செய்வோம்!” இதுதான் நம்முடைய பெரிய
முரண்பாடு போலத்
தெரிகிறது. ஆனால்
உண்மையில் இது
முரண்பாடு அல்ல.
ஆற்றல் இருப்பது ஒரு வாய்ப்பு. அந்த ஆற்றலை எங்கே செலவிடுவது என்பது ஒரு தேர்வு.
அதனால்தான், மூளை
“எளிதான
வழி
போகலாம்” என்று
சொல்லும்போது, நம்முடைய விழிப்புணர்வு மட்டும், “இல்லை… இன்று கொஞ்சம்
கஷ்டமான பாதையில்தான் போகிறோம்!” என்று சொல்ல
வேண்டும்.
ஏனெனில் வாழ்க்கையில் வளர்ச்சியைத் தருவது
பெரும்பாலும் நமக்கு எளிதாகத் தோன்றும் வேலை அல்ல; செய்யத் தயங்கும் வேலைதான்.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
எல்.ஐ.சி. முகவர்
📞 95512 91721

0 பின்னூட்டங்கள்:
Post a Comment