> குருத்து: Cobweb (2023) Horror Movie

March 1, 2024

Cobweb (2023) Horror Movie


அம்மா, அப்பா, பள்ளி செல்லும் பையன் என வாழ்கிறார்கள். அந்த பையன் அமைதியான பையனாக (Introvert) இருக்கிறான். ஆகையால் கூடப் படிக்கும் பசங்க கலாய்க்கிறார்கள். நாலு சாத்து கூட சாத்துகிறார்கள்.


வீட்டில் அவன் இருக்கும் அறையில் அவனுக்கு மட்டும் ஒரு குரல் கேட்கிறது. வீட்டில் சொன்னால், நம்ப மறுக்கிறார்கள். ஆனால், தொடர்ந்து பேசுகிறது. ”பள்ளியில் கலாய்க்கிற பசங்களை உன்னைப் பார்த்து பயப்படும்படி செய்!” என உற்சாகப்படுத்துகிறது. அடுத்து வந்த நாட்களில் சக பள்ளி மாணவனை மாடிப்படியில் இருந்து தள்ளிவிட்டுவிடுகிறான். கால் உடைந்துவிடுகிறது. பள்ளியில் இருந்து நிறுத்திவிடுகிறார்கள்.

அந்த குரல் அவனிடம் தொடர்ந்து பேசுகிறது. அந்த குரல் சொல்வதை எல்லாம் ஏன் என கேட்காமல் செய்ய துவங்குகிறான். அடுத்தடுத்து அந்த வீட்டில் நடக்கும் களேபரங்கள் தான் மீதிப்படம்.

****

அந்த குரலுக்கு சொந்தக்கார பெண் யார்? அந்தப் பெண்ணுக்கு என்ன நடந்தது? என்பதை தெளிவாக சொல்லவில்லை. எல்லாத்துக்கெல்லாம் பேய் படத்தில் விளக்கம் கொடுக்க முடியாது என சொன்னாலும், சரி தான். ஆனால் பேய் படம் என்றாலும் ஒரு நியாயம் வேண்டாமடா! அந்த அம்மா, அப்பாவே தன்னுடைய மூத்தப் பிள்ளை கொஞ்சம் சவலைப் பிள்ளை என்பதால், காதும் காதும் வைத்த மாதிரி கொன்றுவிட்டார்களோ என நினைக்க தோன்றுகிறது.

பேய் படத்திற்கான சில அடிப்படை அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால், சுமாரான படம் தான். நீங்களும் போய் சிக்கிக்கொள்ள கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன் என இந்த பதிவை வைத்துக்கொள்ளுங்கள்.

0 பின்னூட்டங்கள்: