பிரான்ஸ். எங்கும் வெண்பணி சூழ்ந்த ஒரு மலைப்பிரதேசம். ஒரு மாபியா கும்பல் போதை மருந்தை கைமாற்ற வருகிறார்கள். இரண்டு இடங்களில் ஒரு ஒற்றைக் கரடி குறுக்கிட… சீட்டு கட்டுகளை கலைத்துப் போட்ட மாதிரி ஆகிவிடுகிறாது. இரண்டு குழுக்களில் மூன்று பேர் இறந்துவிட… மீதி உள்ள ஆட்கள் போலீசில் மாட்டிக்கொள்கிறார்கள்.
தன் மகனுடன் வாழ்ந்து
வரும் கணவன், மனைவி இருவரும் அந்த பகுதியில் மரம் வெட்டி வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
மேலே நடந்த களேபரத்தில் அவர்களிடம் இரண்டு மில்லியன் யூரோ சிக்குகிறது.
இவர்கள் தடயங்களை
அழிக்கிறேன் பேர்வழி என இருவரும் தடயங்களை விட்டுக்கொண்டே நகர்கிறார்கள்.
ஒரு பக்கம் போலீசு
விசாரணை. இன்னொரு பக்கம் பணத்தை மீட்க கொலைகளுக்கு அஞ்சாத மாபியா கும்பல் முயல்கிறது.
பிறகு என்ன நடந்தது என்பதை சுவாரசியமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
****
ஒரு மலைப்பிரதேசம். இயல்பான மனிதர்கள். மந்தமான போலீசு. அங்கு தீடீரென ஒரு களேபரம் நடந்தால்… என்ன நடக்குமோ அதை சரியாக எடுத்திருக்கிறார்கள்.
படத்தில் மெல்லிய
அளவில் நகைச்சுவை இழையோடுகிறது. இன்னும் சரியான
விகிதத்தில் கவனமாக கலந்திருந்தால்… இன்னும் அருமையாக வந்திருக்கும்.
கொலை விசாரணையில்
சிக்கும் அந்த காரில் தன் காதலனுடன் இருந்த அதிகாரியின் மகள். அவளிடம் விசாரணையும்
செய்யவேண்டும். ஆனால் ஒத்துழைக்கவும் மறுக்கிறாள்.
இதற்காக மருகும் அதிகாரி.
கணவன் மனைவி இருவரும்
ஒரே வீட்டில் வாழ்ந்தாலும், மனதளவில் விலகியிருப்பவர்கள்.
திடீரென பெரும் பணம் கிடைக்கிறது. இப்பொழுது
இருவரும் இணைந்து மிக கவனமாக செயல்படவேண்டும். ஆனால் தனித்தனியே சிந்தித்து இயங்கும்
பொழுது ஏற்படும் கலாட்டாக்கள்.
கரடியைப் பார்த்ததும்..
அந்த மாபியா கும்பலில் “அய்யோ கரடி!” என தமிழில் பயந்து அலறுவார். பிரெஞ்சு படத்தில் தமிழா என பார்த்தால்… போதை மருந்தை
கடத்தும் கும்பலில்… போதை மருந்தை கேப்ஸ்யூலாக முழுங்கி கடத்துபவராக தமிழர் ஒருவரை
பயன்படுத்தியிருக்கிறார்கள். அடப்பாவிகளா!
”ஜூராவில் ஒரு
கரடி” என பிரெஞ்சில் இருந்த பெயரை பிற மொழிகளில் பிரபலப்படுத்துவதற்காக “கொலை செய்வது
எப்படி?” என அதிரடி பெயராக மாற்றியிருக்கிறார்கள்.
1990களில் தெலுங்கு படங்களை இங்கு மொழி மாற்று செய்து வரும் பொழுது இப்படித்தான் பெயர்
வைப்பார்கள்.
ஆஹோ ஓஹோ படம் இல்லை.
பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் பார்த்தால் உங்களுக்கும் பிடிக்கும்.
பிரைமில் இருப்பதாக
இணையம் சொல்கிறது. பேசும் பொழி பிரெஞ்சு. இங்கிலிஷ் சப் டைட்டிலுடன் கிடைக்கிறது.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment