> குருத்து: EPFO and ESI Updates 2025 - Zoom Meeting - 04/10/2025 - சம்பந்தமாக!

October 3, 2025

EPFO and ESI Updates 2025 - Zoom Meeting - 04/10/2025 - சம்பந்தமாக!


வணக்கம். நாளை “EPF & ESI Updates 2025” தலைப்பில் நமது GSTPS சொசைட்டி சார்பில் ஜூம் கூட்டம் நடைபெற இருக்கிறது.   அதில் நான் பேச இருக்கிறேன். வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி.  ஆறு மாதங்களுக்கு ஒருமுறை இந்த தலைப்பில் பேச அழையுங்கள் என தலைவரிடம் தெரிவித்திருந்தேன். அதை நினைவில் வைத்துக்கொண்டு தலைவர் இந்த கூட்டத்தில் பேசுகிறீர்களா? என கேட்டதில் ஒத்துக்கொண்டேன்.


நமது குழுவில் பெரும்பாலும் ஜி.எஸ்.டி, வருமான வரி ஆலோசகர்கள் தான்.  நானும் கூட  அதிக நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி தான் பார்த்து வருகிறேன்.


இருந்தாலும், கற்றுக்கொண்டதை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சில நிறுவனங்களுக்கு மட்டும் பார்த்துவருகிறேன்.   தனிநபர் கிளைம்களை பார்ப்பதில்லை.


நம் குழுவில் சில உறுப்பினர்கள் மட்டும் இ.எஸ்.ஐ, பி.எப் பார்த்துவருகிறார்கள்.  அவசியம் கலந்துகொள்ளுங்கள். தேவையானவர்களுக்கு இந்தக் கூட்டத்தின் பேனரை அனுப்பி வையுங்கள். 


மற்றபடி, பி.எப் தனது பத்தாண்டு காலங்களில் ஒவ்வொன்றாக யோசித்து யோசித்து, அதனை டிஜிட்டல்மயமாக்கி வருகிறது.  அதற்கு முன்பு பி.எப். அலுவலகத்திற்கு சந்தாதாரர்கள் நடையாய் நடந்தார்கள்.   இப்பொழுதும் மாறிக்கொண்டு இருக்கும் காலம் என்பதால், நேரிடையாக அலைந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  ஆனால் முன்பு போல இல்லை.


சென்னையில் மெட்ரோ வேலைகள் புதிய பாதைகளில் வேலை நடந்துகொண்டு இருக்கிறது. ஆகையால் அந்த பிரதான சாலைகள் சீட்டுக்கட்டு கலைத்துப் போட்டது போல தான் இருக்கிறது.   அங்கு ”எதிர்கால நலனுக்காக, இப்பொழுது கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள். மன்னியுங்கள்” என எழுதியிருப்பார்கள்.  அவர்கள் ஒப்புக்காவது மன்னிப்பு கேட்கிறார்கள். பி.எப். கேட்பதில்லை. அவ்வளவு தான் வித்தியாசம்.


இத்தனை கோடி சந்தாதாரர்களை வைத்திருக்கும் பி.எப். இன்னும் தேவைக்கேற்ப தன் வலைத்தளத்தின் திறனை வளர்த்துக்கொள்வதில்லை என்பது பெரிய சோகம்.  ஆகையால், ஒரு சந்தாதாரர் பகலில் பல நேரங்களில் உள்ளேயே நுழைய முடிவதில்லை.   இன்று காலையில் கூட சில விவரங்கள் பார்ப்பதற்கு உள்ளே நுழைய முயன்றேன். முடியவில்லை.


நாளை காலை 10.45க்கு துவங்கி 11.40  வரை என்னுடைய உரை இருக்கும். 20 நிமிடங்கள்  கேள்வி பதில். 12 மணிக்கு முடிந்துவிடும் என தலைவர் திட்டமிட்டுள்ளார். கூடுதலாக கேள்வி இருப்பவர்கள்  குழுவிலோ, என்னிடம் தனிப்பட்ட முறையிலோ கேளுங்கள். பதிலளிக்கிறேன்.


நன்றி.


- இரா. முனியசாமி.


****



Dear GSTPS Members,


Greetings.  Tomorrow, our society will be hosting a Zoom Meet “EPF & ESI updates 2025”


I had earlier suggested to our President SS Sir that such sessions should be conducted once every six months, and keeping that in mind, he kindly invited me to speak at this meeting. I gladly accepted.


As you know, most of our group members are GST and Income Tax consultants. I also manage GST compliance for many companies. However, to stay updated, I continue to handle a limited number of companies for ESI and PF, though I do not take up individual claim cases.


Only a few members among us are engaged in handling ESI and PF matters on a regular basis. Therefore, I encourage you to attend this session and share the meeting banner with others who may find it useful.


Over the last decade, the EPF department has been gradually digitizing its processes. In earlier days, subscribers had to physically visit PF offices. While improvements are happening, challenges remain—especially with the EPF website, which still does not have adequate capacity despite serving crores of subscribers. Many of us face login issues, as I personally did this morning.


To illustrate, when metro works are carried out in Chennai, road diversions are marked with a note: “For the sake of the future, please bear with us. Sorry for the inconvenience.” At least there, an apology is offered. Unfortunately, PF does not extend the same courtesy to its subscribers despite similar disruptions.


Meeting Details:


Date: Tomorrow (04/10/2025)


Time: 10:45 AM to 11:40 AM (Speech)

Q&A: 11:40 AM to 12:00 Noon

End: 12:00 Noon


If you have additional queries beyond the session, please feel free to raise them in the group or contact me directly. I will be happy to assist.


Looking forward to your participation.


Warm regards,

R. Muniasamy


0 பின்னூட்டங்கள்: