தில்லைக் கோயிலை தீட்சிதர்களிடமே ஒப்படைத்து அநியாயத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் இந்தச் சூழலில், தில்லைக் கோயில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகளின் பங்கேற்புடன் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பில் கடந்த 16.02.2014 அன்று சிதம்பரத்தில் நடைபெற்றது.
இதற்கு முன்னதாக இம்மாநாட்டின் நோக்கத்தை விளக்கி சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்கள் முழுக்க புரட்சிகர அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தோழர்கள் பேருந்துப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், குடியிருப்புப் பிரச்சாரம், சுவரெழுத்துப் பிரச்சாரம் என விரிவான அளவில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டனர்.
சிதம்பரம் நகரில் திரும்பிய பக்கமெல்லாம் விவாதத்தைத் தூண்டும் முழக்கங்களுடன் மாநாட்டு அறிவிப்பு சுவரெழுத்துக்கள் விரிவான அளவில் செயப்பட்டிருந்தன.
ஜி.எம். வாண்டையார் மண்டபத்தில் நடைபெற்ற இம்மாநாட்டுக்கு தலைமைமேற்றுப் பேசிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ, சாதித் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலயத் தீண்டாமைக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியத்தை விளக்கிப் பேசினார்.
அடுத்து வாழ்த்துரை வழங்கிய, முன்னாள் இந்து சமய அறநிலையத்துறைய அமைச்சர் வி.வி.சாமிநாதன், சோழர்கள் காலத்தில் கண்காணிப்பு சபை அமைக்கப்பட்டு அரசு கட்டுப்பாட்டில்தான் ஆலயங்கள் இருந்துள்ளன என்பதை சுட்டிக்காட்டிய அவர், கனகசபையின் முன் நின்று தமிழில் பாடியதற்கான ஆதாரங்களை பட்டியலிட்டு, நடராசனுக்கும் சமஸ்கிருதத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிறுவினார்.
அடுத்துப் பேசிய, அண்ணாமலைப் பல்கலைக் கழக ஊழியர் சங்கத் தலைவர் மதியழகன், தில்லைக் கோயிலை அரசே ஏற்று நடத்துவதற்கேற்ப தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும்; அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட வேண்டும் என்றார்.
சைவ சமய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் தலைமையாசிரியர் புலவர் மூ.சோக்கப்பன் பேசுகையில், அர்ச்சகர் பயிற்சி பெறும் பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்கு செமுறை பயிற்சியளிப்பதற்காக அரசு அனுமதியுடன் திருவண்ணாமலை கோயிலுக்கு சென்றதையும், பார்ப்பனர் அல்லாதவர்கள் என்பதற்காகவே கோயிலுக்குள் நுழைய விடாமல் பார்ப்பனர்களால் தாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டதையும் குறிப்பிட்ட அவர் ஆலயங்களில் பார்ப்பனர்கள் கடைபிடிக்கும் ஆலயத்தீண்டாமையின் பல்வேறு பரிமாணங்களை தம் சோந்த அனுபவத்திலிருந்து விளக்கினார்.
இதனைத் தொடர்ந்துப் பேசிய, சிவனடியார் ஆறுமுகசாமி, தமிழ்ல பாடினா சாமி செத்துடும்னு சோல்றான் தீட்சிதன். தமிழ் தமிழ்னு பேசுறவனெல்லாம், தமிழ் அறிஞர்களெல்லாம் எங்கேப் போனான்? ஒரு தீட்சிதனையாவது கேள்விகேட்டானா? தமிழை இழிவுப்படுத்துற ஒரு தீட்சிதனையாவது அடிச்சானா? அயரை பார்த்து கிலி கொண்டு நிக்கிறான். தீட்சிதன் கழுத்தப்புடுச்சி தள்ளினாலும், தள்ளாடுற வயசுல நானே கனகசபை மேலேறி தமிழ்ல பாடுறேன். தமிழ்னு பேசுறவனெல்லாம் கீழே நின்னு கேட் கம்பியை புடிச்சிகிட்டே தேவாரம் பாடுறான். தீட்சிதன் சாபம் விட்ருவான்னு பயப்படுறான். வம்பு தும்புனு பன்னுனாதான் பிரச்சினை தீரும்" என்றார் அவர்.
மார்க்சியப் பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த மாங்குடி மோகன், கட்சி பேதமின்றி சிதம்பரம் கோயிலின் 4 வீதிகளிலும் முற்றுகைப்போராட்டம் நடத்தப்பட வேண்டும். அதுவே இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும்" என்றார்.
மாநாட்டு வாழ்த்துரைகளைத் தொடர்ந்து, மாநாட்டின் காலை அமர்வு தொடங்கியது. போராடிப் பெற்ற வழிபாட்டு உரிமையை பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா" என்ற தலைப்பில் பேசிய மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் சென்னை மாவட்ட செயலர் தோழர் வாலசா வல்லவன், 1872 இல் ஆலயத்தில் நுழைய முயன்ற 2000 நாடார்கள் படுகொலை செயப்பட்டது; 1917இல் சிதம்பரம் கோயிலின் 4 ராஜவீதிகளிலும் தாழ்த்தப்பட்டோர்கள் நுழைவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அகற்றக்கோரி நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம்; குத்தூசி குருசாமி தலைமையில் ஈரோட்டில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டம்; திருவண்ணாமலை கோயில் நுழைவுப் போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் பார்ப்பன எதிர்ப்பு மரமை பட்டியலிட்டு, இவ்வாறு போராடிப் பெற்ற உரிமையை மீண்டும் பார்ப்பனியத்திடம் பறிகொடுப்பதா என்றுக் கேள்வி எழுப்பிய அவர், நீதிமன்றத்தை மட்டுமே நாடியிருக்காமல் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும் என்றார்.
காலை அமர்வின் இறுதியாக உச்சிக்குடுமி மன்றத் தீர்ப்பும் தில்லைக் கோயில் மீட்பும்" என்றத் தலைப்பில் பேசிய, உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரா.சகாதேவன், 1877 தொடங்கி இன்று வரையில் அதிகாரத் தாழ்வாரங்களில் முன்குடுமியைக் காட்டியே கீழ்த்தரமான முறையில் தீட்சிதர்கள் தமக்கு சாதகமான உத்தரவுகளை எவ்வாறெல்லாம் பெற்று வந்திருக்கின்றனர் என்பதை வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் இவ்வழக்கிற்காக தாம் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய சோந்த அனுபவத்திலிருந்தும் அம்பலப்படுத்திப் பேசினார். மேலும், இந்த வழக்கிற்காக நாங்கள் சட்டப்புத்தகத்தைப் பயன்படுத்தி வாதிட்டதைவிட பெரியாரின் எழுத்துக்களைத்தான் அதிகம் மேற்கோள்காட்டி வாதிட்டிருக்கிறோம்" என்ற அவர், இனி நீதிமன்றத்தை நம்பிப்பயனில்லை, ஒரு வழக்குரைஞராகவும் இந்த வழக்கில் வாதிட்ட அனுபவத்தி லிருந்தும் இதனைச் சோல்கிறேன். மக்கள் போராட்டங்களின் மூலம்தான் இந்த சமூகக் கொடுமைக்கு முடிவு கட்ட முடியும்." என்று அறைகூவி அமர்ந்தார் அவர்.
விழுப்புரம் தமிழர் நய்யாண்டி மேளத் தப்பாட்டக்குழுவின் அரங்கம் அதிரும் பறைமுழக்கத்தோடு தொடங்கியது மதிய அமர்வு. கோயில்கள் - மடங்கள் உள்ளிட்ட எல்லா மத நிறுவனங்களின் சோத்துக்களையும் மக்கள் உடமையாக்கு!" என்ற தலைப்பில் பேசிய ம.உ.பா.மையத்தின் மாநில துணைச் செயலர் வழக்குரைஞர் வாஞ்சிநாதன், அம்பானி, டாடா, பிர்லாக்களிடம் இருக்கும் சோத்துக்களின் மதிப்பையும் பத்மனாபா சுவாமி கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், சாயிபாபா, சங்கர மடங்கள், மதுரை ஆதினங்களிடம் கோடிக்கணக்கில் செல்வங்கள் கொட்டிக் கிடப்பதையும் ஒப்பிட்டு பட்டியலிட்டார். இராஜராஜ சோழன் காலத்தில் மட்டும் 400 விதமான வரிகள் வசூலிக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர் இது போன்று மக்களிடமிருந்து வரியாகப் பறித்து சேர்த்தவைதான் இந்த கோயில் சோத்துக்கள் என்பதை ஆதாரங்களுடன் நிறுவினார். இந்தச் சோத்துக்களையெல்லாம் அரசின் உடமையாக்கப்பட வேண்டும் என்றார்.
மதிய அமர்வின் இறுதியாக முதல் ஆலய நுழைவுப் போராளி நந்தனாரும் சாதித் தீண்டாமை ஒழிப்பும்" என்ற தலைப்பில் பேசிய ம.க.இ.க.வின் மாநில பொதுச் செயலர் தோழர் மருதையன், கி.பி.16ம் நூற்றாண்டில் முதன் முதலில் தில்லை மண்ணிலிருந்துதான் தீண்டாமைக்கெதிரான குரல் எழுந்திருக்கிறது. பார்ப்பன மனுநீதி கோலோச்சிய அந்தக் காலகட்டத்தில் கோபுர தரிசனத்தைத் தவிர வேறு உரிமையற்ற நந்தன் தன்னந்தனியாக தில்லைக்கோயிலுக்குள் நுழைந்தது சாதாரண விசயமில்லை. தமிழகத்திற்கு மட்டுமே உரிய மரபு இது. இத்தகையத் தீண்டாமை எதிர்ப்புப் பாரம்பரியம் கொண்ட தமிழகம் இன்று தீட்சிதனிடம் தோற்றிருக்கிறது. தமிழ் வழிபாட்டுரிமையை இழந்திருக்கிறது. இது வெட்கக்கேடு!" என்றார்.
ஆலயத்தீண்டாமைக்கு முடிவு கட்ட வேண்டும்; நந்தன் நுழைந்த சிதம்பரம் கோயிலின் தெற்குவாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிய வேண்டும் என்பது உள்ளிட்ட 13 தீர்மானங்கள், மாநாட்டு அரங்கில் பலத்த கரவொலிகளுக்கிடையே நிறைவேற்றப்பட்டன.
சட்டம் - ஒழுங்கை காரணம் காட்டி பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது, சிதம்பரம் நகரப் போலீசு. மாநாடு நடைபெற்ற ஜி.எம்.வாண்டையார் மண்டபத்திலிருந்து பொதுக்கூட்டத் திடலான அனந்தீஸ்வரன் கோயில் தெருவை சென்றடைய இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பயணக்களைப்பையோ, அரைநாள் அரங்கில் அமர்ந்திருந்த சோர்வையோ பொருட்படுத்தாமல், ஒருவர் பின் ஒருவரா அணிவகுத்துச் சென்றனர், தோழர்கள். இதனை, அறிவிக்கப்படாத பேரணி என்றே சோல்ல வேண்டும்.
இதனைத் தொடர்ந்து, வி.வி.மு.வின் விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் தலைமையில் தொடங்கியது பொதுக்கூட்டம். தமிழையும் தமிழர்களையும் இழிவுப்படுத்தும் பார்ப்பனக் கும்பலை அம்பலப்படுத்திப் பேசினார் பு.ஜ.தொ.மு.வின் மாநிலப் பொதுச்செயலர் தோழர் கலை. மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துப்பிரிவு உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி ஆலயத் தீண்டாமைக்கு எதிராகப் போராட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திப் பேசினார் பு.மா.இ.மு.வின் விழுப்புரம் மாவட்ட செயலர் தோழர் செல்வக்குமார்.
நந்தனார் ஆவு மையத்தைச் சேர்ந்த தோழர் காவியச் செல்வன் பேசுகையில், ம.உ.பா.மையமும் அதன் ஒருங்கிணைப்பில் புரட்சிகர அமைப்புகள் பங்கேற்று நடத்தும் அனைத்துப் போராட்டங்களுக்கும் தமது ஆவு மையம் துணைநிற்கும் என்றார்.
தில்லைக்கோயில் பிரச்சினைக்காக தி.க.வீரமணியும் தி.மு.க.வும் ஏன் வாதாட வில்லை எனக் கேள்வி எழுப்பிய சிதம்பரம் முன்னாள் நகர் மன்றத்தலைவர் வி.எம்.எஸ். சந்திர பாண்டியன், காவிரி பிரச்சினையில் கர்நாடாகவும், முல்லைப்பெரியாறு பிரச்சினையில் கேரளாவும், சோத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத போது, நாம் மட்டும் இந்த உச்சுக்குடுமிமன்றத் தீர்ப்புக்கு ஏன் கட்டுப்பட வேண்டும் என்றுக் கேள்வி எழுப்பினார்.
உழைக்கும் மக்களுக்கு எதிரானத் தீர்ப்பு என்றுச் சாடிய எழுத்தாளர் இமயம், எனது காலத்தில் ஏதாவது நன்மை செதுவிட்டு செல்கிறேன்" என்று தில்லைவழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி பேசியதைக் குறிப்பிட்டு பிறப்பின் அடிப்படையில் நீதிமுறை நடைபெறும் நிலையில் இத்தகைய நீதிமன்றங்கள் அவசியமா? என்றுக் கேள்வி எழுப்பினார்.
பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு மட்டுமின்றி, மாநாடு நடைபெற்ற ஜி.எம்.வாண்டையார் மண்டப நிர்வாகிகளை மிரட்டிய சிதம்பரம் நகரப் போலீசின் அடாவடித்தனத்தை அம்பலப்படுத்திய ம.உ.பா.மை யத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி.ராஜூ, மக்கள் போராட்டத்தின் மூலம் உச்சநீதிமன்றத்தீர்ப்பை செல்லாததாக்க வேண்டும் என்று அறைகூவினார்.
சமூகம், இலக்கியம், இசை என பல்வேறு தளங்களிலும் தமிழகம் கண்டிருந்த பார்ப்பன எதிர்ப்பு மரபைப் பட்டியலிட்டுப் பேசிய ம.க.இ.க.வைச் சேர்ந்த தோழர் துரை.சண்முகம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் போல சிறப்புப் புரோகித மண்டலங்களாக பார்ப்பன ஆதிக்கத்தின் கீழுள்ள கோயில்கள் மாறிவருவதையும், தமிழ்மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு பார்ப்பன மயமாக்கப்படும் அபாயத்தையும் அம்பலப்படுத்திப் பேசினார்.
சோரணையற்றுக்கிடக்கும் தமிழனைத் தட்டியெழுப்பிய எப்ப உனக்கு சோரணை வரும்" என்ற பாடல்; தீட்சிதர்களை அம்பலப்படுத்திய சிவன் சோத்து குலநாசம்" என்ற பாடல்; தில்லானா மோகனாம்பாள் வைத்தி கதாபாத்திரத்துடன் சு.சாமியை ஒப்பிட்டுப் பாடிய சு.சாமி... சப்ளை அண்ட் சர்வீஸ்" என்ற பாடல்; நீதிமன்றத்தை அம்பலப்படுத்திய நீதிமன்றமா? பார்ப்பன சாதி மன்றமா?" என்ற பாடல்; மற்றும் தமிழகத்தை நெருங்கும் பார்ப்பன அபாயத்தை அறிவித்த நெருங்குதடா இருள் நெருங்குதடா.." பாடல் என பார்வையாளர்களின் உணர்வைத் தட்டியெழுப்பியது என ம.க.இ.க.வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி.
தில்லைக்கோயிலை தீட்சிதனுக்கே பட்டா போட்டுக் கொடுத்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒருபுறம்; இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலிருந்து அனைத்துக் கோயில்களும் விடுவிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கையை முன்வைக்கும் சு.சாமி மற்றும் இன்னபிற பார்ப்பனக் கும்பலின் கூப்பாடு மறுபுறம் என தமிழகத்தில் மீண்டும் பார்ப்பனக் கும்பல் தலையெடுக்கத்துணியும் இந்தப் பின்புலத்தில் அவற்றுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடைபெற்றுள்ள இம்மாநாடு, பார்ப்பனியத்தை எதிர்த்து வீழ்த்துவதற்கான நம்பிக்கையான தொடக்கம்.
தோழர் மருதையன் தனது மாநாட்டு உரையில் சுட்டிக்காட்டியதைப் போல, இது கோயில் விவகாரம் அல்ல; அரசியல் ரீதியில் பாசிச அபாயத்தை எதிர்கொண்டிருக்கிறோம். திருப்பித் தாக்குவதொன்றுதான் நம் முன் உள்ள ஒரே வழி". தில்லைக் கோயில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு உணர்த்தும் செய்தியும் அதுதான்!
- இளங்கதிர்