சமீபத்தில் ஒரு தொழிலாளி தனக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இ.எஸ்.ஐ. பணம் அவருடைய சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்பட்டு வருகிறது. அவர், அவருடைய துணைவியார், குழந்தை மூவருக்கும் ஹோமியோபதி மருத்துவம் பார்த்து வருகிறார். இ.எஸ். ஐ. பக்கம் போவதேயில்லை. வயதான அம்மாவிற்காக தான் இ.எஸ்.ஐ யே அவர்களுக்கு பயன்படுகிறது
கடந்த 20 நாட்களுக்கு முன்பு, அவருடைய அம்மாவிற்கு சர்க்கரை அதிகமாகியும், வயிறும் வலித்து இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பெட்டில் சேர்த்து இருக்கிறார்கள். ஒரு வாரம் ஆகிறது. வயிறு வலி எதனால் வருகிறது என கண்டுபிடிக்க்க, ஸ்கேன் எடுத்திருக்கிறார்கள். அதுவும் இ.எஸ்.ஐயில் இல்லாமல், மதுரை இராஜாஜி மருத்துவமனைக்கு போகச்சொல்லி எடுத்திருக்கிறார்கள். அதில் ஒன்றும் தெரியவில்லை. ஒரு வாரம் ஆகியும் வலியும் நிற்காததால், அட்வான்ஸ்டு ஸ்கேன் எடுக்க முடிவெடுத்து உள்ளனர். மீண்டும் ராஜாஜி மருத்துவமனையில் எடுக்க வேண்டுமென்றால் 12 நாட்கள் கழித்து தான் அப்பாயிண்ட்மெண்ட் தருகிறார்கள். அதனால், வெளியே தனியாரில் எடுக்க வேண்டுமென்றால், இ.எஸ்.ஐ யிலிருந்து தகுதி சான்றிதழ் (Eligible Certificate) வாங்கித்தர கேட்டிருக்கிறார்கள்.
தொழிலாளி அந்த சான்றிதழை கேட்க போக, கடந்த மே 2013 லிருந்து உங்க முதலாளி இ.எஸ்.ஐக்கு பணம் கட்டவில்லை. அதனால், சான்றிதழ் தரமுடியாது என சொல்லியிருக்கிறார்கள். இஎஸ்.ஐ இப்படி சொல்வதை முதலாளியிடம் போய் கேட்டிருக்கிறார். அவரும் உடனே பணத்தைக் கட்டுவதாக சொன்னவர், இன்றைக்கு வரைக்கும் பணம் கட்டவில்லையாம். இப்பொழுது அவருடைய அம்மா மதுரை இராஜாஜி மருத்துவமனையில் 12 நாட்கள் கழித்து ஸ்கேன் எடுக்க வயிற்றுவலியுடன் காத்திருக்கிறார்.
இ.எஸ்.ஐ. தலைமை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம் வரை எங்க முதலாளி மாதம் மாதம் சரியாக என் சம்பளத்திலிருந்து பணம் பிடித்துவிட்டார். மாதம் மாதம் முதலாளி பணம் கட்டிவிட்டாரா என சோதிப்பது ஒரு தொழிலாளிக்கு சாத்தியமானதா! அவரை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது உங்கள் வேலை இல்லையா! என கேட்டதற்கு, பணம் கட்டச்சொல்லி உங்க முதலாளியிடம் கேளுங்கள்! என சொல்லி போனை கட் பண்ணிவிட்டார்களாம்.
தொழிலாளர்களின் மருத்துவ பாதுகாப்பிற்காக என இ.எஸ்.ஐ.யை உருவாக்கினார்கள். அவர்களுக்கு வேலை முதலாளிகளை கண்காணித்து, தொடர்ந்து பணம் கட்டுகிறார்களா என சோதிப்பதும், தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் தகுந்த சிகிச்சையை உத்தரவாதப்படுத்துவதும் தான்! பணத்தை தொடர்ச்சியாக கட்டாத சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஒரு நோட்டீசு அனுப்பினால் பாதி முதலாளிகள் கட்டிவிடுவார்கள். மீதி கட்டாத நபர்களிடம் அவர்களுடைய வங்கி கணக்கிலிருந்து அவர்களுடைய அனுமதி இல்லாமலேயே பணம் எடுப்பதற்கு இ.எஸ்.ஐக்கு அதிகாரம் இருக்கிறது! ஆக, இ.எஸ்.ஐ. முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளிகளுக்கு விரோதமாகவும் இருந்து வருவது அப்பட்டமாகிறது!

5 பின்னூட்டங்கள்:
இது அந்த நிறுவனத்தின் குற்றமே தவிர இ.எஸ்.ஐ.யின் குற்றமில்லையே. நான் ஒரு நேரத்தில் எனக்கு என் மனைவிக்கு என்று பலமுறை சிறந்த மருத்துவ சிகிச்சைகளை எடுத்திருக்கிறேன். நல்ல சேவையும் கூட.
கவிப்பிரியன்,
நான் எழுதிய பதிவின் சாரத்தை நீங்கள் உள்வாங்கிக்கொள்ளவில்லை.
பணம் கட்டவில்லை.அது நிறுவனத்தின் குற்றம் சரி தான். ஆனால், அந்த நிறுவனம் தொடர்ச்சியாக பணம் கட்டுகிறதா என பரிசோதிப்பது ESI யின் வேலை இல்லையா! இதை அந்த நிறுவனத்தில் வேலை செய்கிற தொழிலாளி மாதம் மாதம் பரிசோதிக்க முடியுமா?
மற்றபடி, இ.எஸ்.ஐ யில் பல கோளாறுகள் இருந்தாலும், இன்னமும், தொழிலாளர்களுக்கு பலவிதங்களில் பயன்படுகிறது என்பதில் மறுப்பில்லை!
ஐயா, நான் நுரையீரல் பாதிப்பின் காரணமாக ஆபரேஷன் செய்துக் கொண்டதால் கடந்த ஜீன் மாதம் முழுவதும் என்னால் வேலைக்கு செல்ல முடியவில்லை,எனது ஆபரேஷன் தேவைகளுக்கான பணத்தினை இ.எஸ்.ஐ லிருந்து பெற்றுக்கொண்டேன். தற்போது எனது குடும்ப செலவிற்காக பணம் தேவைப்படுகிறது. எனது சம்பளத்திலிருந்து பாதி சம்பளம் கிடைக்குமா? அதற்கு நான் இ.எஸ்.ஐ க்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

Post a Comment