> குருத்து: நீச்சல் நல்லது!

May 27, 2026

நீச்சல் நல்லது!

 


வீட்டின் அருகே ஒரு நீச்சல் பயிற்சி பள்ளி இருக்கிறது. இலக்கியா பள்ளி படிக்கும் பொழுது, சேர்த்துவிடவேண்டும் என்ற விருப்பத்தில்… போய் விசாரிக்கும் பொழுது, சமீபத்தில் ஒரு குழந்தை இறந்து போன தகவலை கேட்டேன். அப்படியே பின்வாங்கிவிட்டேன்.

 

இன்று அதே நீச்சல் பள்ளிக்கு போயிருந்தேன்.  50 பேருக்கும் மேலாக பரபரவென இருந்தது. அலுவலகத்தில் விசாரித்தால்… 15 நாட்களுக்கு ரூ. 5500.  15 நாட்களில் கற்றுக்கொள்ளமுடியுமா? என்றேன்.  பெண்களுக்கான பெண் கோச் இருக்கிறார்.  நிச்சயம் முடியும் என நம்பிக்கையளித்தார்.

 

காலையில் ஆறு முதல் 9 மணி வரை.  மாலை 3 முதல் 6வரை.  ஆறு மணி நேரத்திற்குள் ஒரு மணி நேரம் வரலாம் என்றார்கள்.   திங்கள் மட்டும் விடுமுறை. பணம் கட்டியாச்சு. நாளையில் இருந்து பயிற்சிக்கு இலக்கியா செல்லவேண்டியது தான்.

 

நீச்சலுக்குரிய உடை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றார்கள்.  டெக்கத்லான் போய் வாங்கவேண்டும். அதுவும் அருகிலேயே இருக்கிறது.

 

நானெல்லாம் கண்மாய், வைகை ஆறு, பச்சைக் கிணறு, கால்வாய் என நல்ல நீரிலேயே குளித்து வளர்ந்த ஆள். ஆகையால் நீச்சல் குளம் கொஞ்சம் ஒவ்வாமை தான். அதன் உப்பு நீரும். கண் எரியும் குளோரினும்!  நாம் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏகாட்டூரில் நன்னீர் நீச்சல் குளத்தில் நிறைய நேரம் குளித்தது நினைவுக்கு வருகிறது.

 


உடற்பயிற்சிகளிலேயே நல்ல பயிற்சி மொத்த உடம்புக்கும் நல்லது நீச்சல் என்பார்கள்.  இந்த வெயில் காலத்தில் குளத்தில் கிடந்தால் சுகமாக தான் இருக்கும்.  என்னை மாதிரி நீச்சல் தெரிந்தவர்களுக்கு, என்ன நேரம் என்றால், காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரையும் என்கிறார்கள். நீயெல்லாம் வந்தா என்ன? வராமல் இருந்தால் என்ன? என்கிற மாதிரி ஒரு நேரத்தை நியமித்திருக்கிறார்கள்.  சோகம்.

 

நீச்சல் ரெம்ப நல்லது. குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள்.  நீங்களும் கற்றுக்கொள்ளுங்கள்.

 

-         இரா. முனியசாமி

 

 

0 பின்னூட்டங்கள்: