திரு. கார்த்திகேயன் மதுரையில் வரி ஆலோசகராக நிறுவனம் நடத்தி, மெல்ல மெல்ல 20 பேர் கொண்ட ஒரு குழுவையும் உருவாக்கியும், இயக்கியும் வருபவர். வேலை செய்பவர்களையும் தங்கள் குடும்பத்தினரை போல அன்போடு நடத்துபவர். வருடத்திற்கு இரண்டு முறை சுற்றுலா அழைத்து செல்வார்.
வயது
47. நேற்று மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி
நேற்றிரவு கேள்விப்பட்டதும் அதிர்ச்சியாக இருந்தது என்பதை விட உலுக்கிவிட்டது எனலாம்.
பேஸ்புக்கில்
அவருடைய எழுத்தின் வழியாக தான் அறிமுகம்.
உற்சாகமாக தொழில், குடும்பம், பயணம், அரசியல், சமூகம் குறித்த அக்கறை என நேர்மையாக
தொடர்ந்து எழுதி வந்தார். சக வரி ஆலோசகராக
அவருடைய வளர்ச்சியை தொடர்ந்து கவனித்து, மகிழ்ந்தும் வந்திருக்கிறேன்.
அவருடைய துவக்க
கால வகுப்பில் ஒருமுறை விடிகாலையில் கலந்துகொண்டிருக்கிறேன். அவரிடம் ஒரே ஒருமுறை பேசியும் இருக்கிறேன்.
அவரை இழந்து
வாடும் குடும்பத்திற்கு ஆறுதல். அவருக்கு எனது
அஞ்சலி.
- இரா. முனியசாமி,

0 பின்னூட்டங்கள்:
Post a Comment