ஆசிரியர் என்றால் வகுப்பறையில் பாடம் சொல்லிக் கொடுத்தவர் மட்டுமல்ல! வாழ்க்கையில் நாம் தடுமாறியபோது கை கொடுத்தவர்கள்,
“இப்படிப் போங்க!” என்று ஒரு வார்த்தை சொல்லி வழி காட்டியவர்கள்,
நமக்குள் இருந்த திறமையை நமக்கே காட்டியவர்கள்—இவர்கள் எல்லாருமே நம் ஆசிரியர்கள்தான்.
என் வாழ்க்கையில் எனக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் பலர். சிலர் புத்தகத்திலிருந்து கற்றுக் கொடுத்தார்கள்;
சிலர் வாழ்க்கையிலிருந்து கற்றுக் கொடுத்தார்கள்.
சிலர் சொல்லிக் கொடுத்தார்கள்; சிலர் தாங்கள் வாழ்ந்தே கற்றுக் கொடுத்தார்கள்!
இந்தக் குழுவிலும் எனக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆசிரியர் தினமான இன்று, இவர்களை எல்லாம் நினைத்துப் பார்த்தால், “நான் கற்றது என்னைவிட மற்றவர்களால்தான் அதிகம்!” என்ற உண்மை புரிகிறது.
எனக்குக் கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும், இந்நாளில் என் இதயம் நிறைந்த நன்றி!
-
இரா.
முனியசாமி
0 பின்னூட்டங்கள்:
Post a Comment