1) உடம்பு சோர்ந்த பிறகு அதை நினைவுபடுத்திக் கொள்ளாதே. தினமும் சிறிதாவது நட. நதி போல ஓடிக்கொண்டே இரு.
2)
நாளில்
சில
நிமிடங்களாவது எந்தக்
குரலும் இல்லாமல் உன்னுடைய குரலைக் கேள்.
அதற்காகத் தனியாக
எங்கும் போக
வேண்டியதில்லை; அமைதியாக இருந்தால் போதும்.
3)
எல்லாவற்றிலும் கருத்துச் சொல்ல
வேண்டிய அவசியமில்லை. சில
விஷயங்களைப் புரிந்துகொள்வதே போதும்
4)
தினமும் ஏதாவது
ஒன்றைப் படி.
படித்ததை அப்படியே நம்பாதே. பிடித்திருந்தாலும் கேள்வி
கேள்;
பிடிக்கவில்லை என்றாலும் புரிந்துகொள்ள முயற்சி செய்.
5)
தொழிலில் நேர்மையாய் இரு; தெரியாததைத் தெரியாது என்று
சொல்லும் நேர்மையையும் காப்பாற்று.
6)
உறவுகளில் அறிவுரை வழங்குவதை விட,
கேட்கும் காதையே
அதிகமாகப் பயன்படுத்து. எல்லா
பிரச்சினைகளுக்கும் தீர்வு
சொல்ல
வேண்டியதில்லை; சில
நேரங்களில் அருகில் இருப்பதே போதும்.
7. நேற்றைய
உன்னோடு இன்றைய உன்னை ஒப்பிடு. மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் வாழ்க்கை முழுவதும் யாரோ ஒருவரின் பின்னாலேயே ஓட வேண்டியிருக்கும்.
8)
பணம்
சம்பாதிப்பதை மட்டும் வாழ்க்கையின் அளவுகோலாக வைத்துக்கொள்ளாதே. உன்னால் யாருக்காவது ஒரு
சிறிய
பயனாவது ஏற்பட்டதா என்பதையும் கணக்கில் வைத்துக்கொள்.
9)
உனக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்;
உனக்குத் தெரியாததைத் தேடிக்
கற்றுக்கொள். வயது
கூடுவதற்கும் அறிவு
கூடுவதற்கும் நேரடி
தொடர்பில்லை என்பதை
மறந்துவிடாதே.
10) வாழ்க்கையை எப்போதும் திருத்திக் கொண்டே
இருக்க
வேண்டிய ஒரு
வரைவாகப் பார்க்காதே. சில
நேரங்களில் புத்தகத்தை மூடி
வைத்து,
தேநீரைக் கையில்
எடுத்துக்கொண்டு, எதிரே
இருப்பதை அப்படியே ரசித்துக் கொண்டிரு
- - இரா. முனியசாமி
0 பின்னூட்டங்கள்:
Post a Comment