> குருத்து: அயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்!

November 24, 2010

அயோத்தி தீர்ப்பு - அரங்கக்கூட்டம்!

'சர்ச்சைக்குரிய இடம்' யாருக்கு என்பதை, அலகாபாத் தீர்ப்பு அறிவிக்கும் பொழுது, இந்தியா முழுவதும், அனைவரும் அமைதி காக்க வேண்டும் என இந்திய அரசும், பல கட்சித் தலைவர்களும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனால், சொல்லப்பட்டதோ அயோக்கியதனமான தீர்ப்பு. அதற்குப் பிறகு காத்த அமைதியும் அநியாயமானது.

நாடு முழுவதும் உண்மையான ஜனநாயகம் குறித்து கவலைப்படுகிறவர்கள், நீதி மன்ற பாசிசத்தை அம்பலப்படுத்திட வேண்டும். அவர்கள் விரும்பும் "நீதி"க்கு வேண்டும் அமைதியை குலைக்க வேண்டும்.

அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.

நீதிமன்ற இந்து பாசிசத்தை அம்பலமாக்கும் அரங்க கூட்டம்!


நிகழ்ச்சி நிரல்:

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர்
செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை : ”நீதித்துறை பேசும் காவி மொழி”
திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை”
திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்”
திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் : வழக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு!
அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

ஏற்பாடு :

மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளை.

தொடர்புக்கு : க.சுரேஷ், வழக்குரைஞர் – 9884455494

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

test

Anonymous said...

இந்துவெறியர்கள் இப்பொழுது, அலாகாபாத் தீர்ப்பை மதித்து, சன்னி போர்டு இடத்தை விட்டுத்தர வேண்டும் என கோரி வருகிறார்கள். அருமையான கூட்டம். கண்டிப்பாக வருகிறேன்.

- சேகர், சென்னை