மதுரை மாவட்டத்தின்
கிராமத்தில் உள்ள ஸ்டேசனில் மூன்று ஆண்டுகளாக வழக்குகள் ஏதும் பதியவில்லை என்பதால், தூக்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் எல்லைப் புறத்தில் ஒரு வெட்டப்பட்ட
தலை மட்டும் கிடைக்கிறது.
மெல்ல மெல்ல
நூல் பிடித்து நகரும் விசாரணையில், முத்து என்பவரின் தலை தான் என கண்டுபிடிக்கிறார்கள். ஊர் ஊராக பயணித்திருக்கிறார். ஒரு நடனக்குழுவோடு
இருந்திருக்கிறார். பிறகு கேரளாவில் ஒரு டிரஸ்டில் வேலை செய்திருக்கிறார்.
பிறகு இந்த
கொலை எதற்காக என்பதை கண்டறியும் பொழுது ஆச்சரியப்படுகிறார்கள்.
*****
அத்தனை சுவாரசியமில்லை
என இரண்டு பேர் சொன்னதை கேட்டும், இந்த தொடரை பார்த்ததற்கு இரண்டு பேர் தான் காரணம்.
முதலில் இயக்குநர் மணிகண்டன் (இணைந்து அஜித்குமாரும்). இரண்டாவது விஜய் சேதுபதி.
முத்து ஊர்
ஊராக சுற்றியதற்கான மூல காரணம் என சொல்லப்படுவது எல்லாம் அத்தனை அழுத்தமாகவும், தெளிவாகவும்
சொல்லப்படவில்லை. அதனால் எல்லாமும் பலவீனமாய்
தெரிகிறது. மிகவும் மெதுவாக போகிறது என்பதெல்லாம் காரணம் ஒருபக்கம். திரைக்கதையே மிகவும்
பலவீனம். அது தான் காரணம்.
ஓடிடி வெளியீடு
என்பதால், கேரளாவிற்கும் கதை செல்கிறது. இன்னும்
கொஞ்சம் ஜியோ அழுத்தம் கொடுத்திருந்தால், ஆந்திரா, கர்நாடகாவிலும் கூட முத்துவை சுத்த
விட்டிருப்பார்கள் போல!
படத்தில்
கொஞ்சும் சுறுசுறுப்பான காட்சிகளை எல்லாம் தொகுத்து டிரைலராய் மாற்றியிருக்கிறார்கள். அதைப் பார்த்துவிட்டு தொடரை பார்ப்பதற்கு மிகவும்
ஏமாற்றமாய் தான் நிச்சயம் இருக்கும்.
மற்றபடி நடிகர்கள்
அவரவர் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஜியோ ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. நேரம்
நிறைய இருப்பவர்கள் முயலலாம்.


0 பின்னூட்டங்கள்:
Post a Comment