வில்லனின் வளர்ப்பு மகன்களாகிய இளைஞர்கள் ஒவ்வொன்றிலும் திறன் கொண்டவர்கள். அவர்களை கொண்டு, சாத்தியமில்லாத கொள்ளையை திறம்பட செய்கிறார். போலீசுக்கு பெரிய அழுத்தமாகிறது.
ஓய்வு பெற்று
வாழும் நாயகனை போலீசு துறை மீண்டும் அழைக்கிறது.
அவர் நவீன வசதிகள் கொண்டது இல்லாமல், பழைய முறையில் ஒரு படையை உருவாக்குகிறார். அடுத்த கொள்ளைக்காக காத்திருக்கிறார்.
இதில் வளர்ப்பு
மகன்களுக்கும், வில்லனுக்கும் ஒரு உள்ளுக்குள் முரண்பாடு வருகிறது. அவர்களுக்குள் சிக்கலாகிறது.
நாயகன் அந்த
கும்பலின் தலைவனுக்கு வலை விரிக்கிறார். பிடித்தாரா? என்பதை விறு விறுப்பான காட்சிகளுடன்
சொல்லியிருக்கிறார்கள்.
***
ஜாக்கிசானின்
கடந்த பத்து ஆண்டு வரலாற்றில், இப்படி துவக்கம் முதல் இறுதி வரை ஒரு பரபர ஆக்சன் படம்
பார்த்து நாட்களாயிற்று. அருமையான படம்.
என் 20களில்
சாகச சண்டையுடன், நகைச்சுவையும் கலந்து மகிழ்வித்த ஜாக்கிசான் இப்பொழுது அவருடைய எழுபதுகளிலும்
மகிழ்விக்கிறார். சண்டைக்காட்சிகளில் டூப்
இல்லாமல் அவரே நடிக்கிறார். அடிபடுகிறார். இறுதி காட்சிகளில் காண்பிக்கிறார்கள்.
Eye in
the sky (Surveillance என அர்த்தம்) ஒரு தென்கொரிய
படம் அந்த படத்தை அடிப்படையாக கொண்டு, இன்னும்
செழுமைப்படுத்தி, ஆக்சன் காட்சிகளை அதகளப்படுத்தி எடுத்திருக்கிறார்கள்.
ஆக்சன் ரசிகர்கள், ஜாக்கிசான் ரசிகர்கள் அவசியம் பாருங்கள். ஆங்கிலத்தில் சப் டைட்டிலுடன் பார்த்தேன். இப்போதைக்கு எந்த ஓடிடியிலும் இல்லை. வேறு வகைகளில் முயலுங்கள்.


0 பின்னூட்டங்கள்:
Post a Comment