Uber, Rapido : ஓட்டுநருக்கு மதிப்பெண்
வாடிக்கையாளருக்கும்
மதிப்பெண் இருக்கிறது தெரியுமா உங்களுக்கு?
முன்பு ஒருமுறை
ஒரு ஓட்டுநரின் மொபைலை கவனித்தபொழுது வாடிக்கையாளருக்கான ரேட்டிங் கண்ணில்பட்டது.
இன்று ஊபர்
நிறுவனத்தின் CTO பிரவீண் அவர்களுடைய நீண்ட பேட்டியை கவனித்த பொழுது, இடையில் இதைப்
பற்றியும் பேச்சும் வந்தது.
நாம் பல்வேறு
தேவைகளுக்கு வாகனங்களை வாடகைக்கு ஊபர், ரேபிடோ வழியாக அமர்த்திக்கொண்டு சென்று வருகிறோம். அந்த சேவை முடிந்த பிறகு நம்மை கட்டாயப்படுத்தி,
சேவையை குறித்த மதிப்பெண்ணை இட வைத்துவிடுகிறார்கள்.
அதே போல ஒவ்வொரு
சேவை முடிந்து சென்ற பிறகு ஓட்டுநர்களும் வாடிக்கையாளர்களுக்கு மதிப்பெண் அளிக்கிறார்கள்.
இந்த மதிப்பெண்
குறித்து நாம் ஏன் கவலைப்படவேண்டும் என நினைக்கலாம். நான் ஒரு வாகனத்தை பதிவு செய்யும் பொழுது 4.7 மதிப்பெண்ணுக்கு
மேல் இருக்கிறதா என பார்ப்பேன். அப்படி இருந்தால், அந்த ஓட்டுநர் எவ்வளவு சேவைக்கட்டணம்
வருகிறதோ அதை வாங்கி கொண்டு சென்றுவிடுவார். பேரம் பேசமாட்டார்.
இதே தானே
ஓட்டுநருக்கும். நாளை நாம் பதிவு செய்யும் பொழுது நமக்கு கொடுக்கப்படும் மதிப்பெண்
தான் நமது அழைப்பை ஏற்பதா? மறுப்பதா என முடிவு செய்யும் நிலைக்கு தள்ளப்படுவோம். நெருக்கடி நிலையில் மிகவும் சிக்கலாகும்.
உடனே போய்,
Uber ஆப்புக்குசென்று Account பகுதிக்கு சென்று Privacy & Data பகுதிக்கு சென்று
… Privacy Center போய், Would you like to see a summary of how you use Uber? –
see summary பகுதிக்க்கு சென்றால்… நாம் பெற்றிருக்கும் மதிப்பெண்ணைப் பார்க்கலாம்.
என்னுடையது 4.92 யாக இருந்தது. மகிழ்ச்சி.
ஓட்டுநர் நம்மை எப்படி மதிப்பாக நடத்தவேண்டும் என நினைக்கிறமோ, நாமும் அப்படியே மதிந்து நடந்துகொள்வோம். ஏறும் பொழுது ஒரு புன்னகை செய்யலாம். விடை பெறும் பொழுது நன்றி சொல்லலாம்.
-

0 பின்னூட்டங்கள்:
Post a Comment