இன்று
சர்வதேச யோகா
தினம். 2014ல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் நாளை ஐக்கியநாடுகள் சபை சர்வதேச யோகா தினமாக கொண்டாட அறிவித்தது.
ஜூன் 21 ஏன் என்றால்… கோடை காலத்தில் ஆண்டின் மிக நீண்ட நாள். இந்த நாள் வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்டது. ஆகையால் இந்த நாள் நல்ல நாள் என்ற அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யோகா
பற்றி
பேசும்போது, தொலைக்காட்சிகளில் அல்லது
மேடைகளில் ஒரு
கையால்
தரையைத் தொட்டு,
இன்னொரு காலால்
வானத்தைத் தொட்டுக் கொண்டு
செய்யும் ஆசனங்களைத்தான் பெரும்பாலும் காட்டுகிறார்கள். அதைப்
பார்த்த பலர்,
"இது
நம்மால் ஆகாது"
என்று
அங்கிருந்தே விலகிவிடுகிறார்கள்.
ஆனால்
உண்மையான யோகா
அப்படியல்ல. நான் பல ஆண்டுகளாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி கூடம்,
ஓட்டப்பயிற்சி என்று
பலவற்றைச் செய்திருக்கிறேன். ஒரு
கட்டத்தில் யோகாவிடம் வந்து
சேர்ந்தேன். ஒவ்வாமை, மூச்சுத்திணறல் போன்ற
சிரமங்கள் இருந்த
காலத்தில் சில
எளிய
ஆசனங்களும் மூச்சுப் பயிற்சிகளும் நல்ல
மாற்றத்தை ஏற்படுத்தின.
ஒரு
காலத்தில் வாரத்தில் ஐந்து
நாட்கள் விடியற்காலையில் யோகா
மையத்திற்குச் செல்வது வழக்கம். சில
நாட்களில் அறை
நிரம்பி வழியும். சில
நாட்களில் நான்
மட்டுமே இருப்பேன். ஆனால்
யோகா
மட்டும் விடுமுறை எடுத்ததில்லை.
யோகாவின் சிறப்பு என்னவென்றால், அது
உடம்பை
மட்டும் வேலை
செய்ய
வைப்பதில்லை; மனதையும் கொஞ்சம் ஒழுங்குபடுத்த முயல்கிறது. நாள்
முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க
உதவுகிறது. சர்க்கரை, ரத்த
அழுத்தம் போன்ற
பிரச்சனைகளுடன் வாழ்பவர்களுக்கும் துணையாக இருக்கிறது.
ஒரு
சிறிய
வேண்டுகோள். யோகாவை
விளம்பரப்படுத்தும்போது கடினமான ஆசனங்களை மட்டும் காட்டாதீர்கள். எழுபது
வயது
மனிதரும் செய்யக்கூடிய எளிய
ஆசனங்கள்தான் யோகாவின் உண்மையான வலிமை.
உடலுக்கு நேரம்
ஒதுக்காமல் வாழும்
இந்தக்
காலத்தில், தினமும் அரை
மணி
நேரம்
யோகாவுக்குக் கொடுத்துப் பாருங்கள். பலன்
உடனே தெரியும். தொடர்ச்சியான
பலன்களினால், , "இதை ஏன் இத்தனை
தாமதமாகத் தொடங்கினோம்?" என்று தோன்றும்.
-
இரா. முனியசாமி

0 பின்னூட்டங்கள்:
Post a Comment