> குருத்து: Meetings
Showing posts with label Meetings. Show all posts
Showing posts with label Meetings. Show all posts

September 2, 2026

PF updates 2026 - Zoho Meeting - R. Muniasamy, Tax Consultant


அன்பு நண்பர்களுக்கு,


திரு. இராஜசேகரன் CMA அவர்கள் நடத்திய இன்றைய கூட்டத்தில் 75 பேருக்கு மேல் கலந்துகொண்டார்கள். பி.எப். சமீபத்திய மாற்றங்கள் குறித்து  25 நிமிடங்கள் பேசினேன்.  25 நிமிடங்களில் எதை சொல்வது, எதை விடுவது என்பதில் தான் சவால்கள் இருந்தன. இருப்பினும் முக்கிய மாற்றங்கள் குறித்து விளக்கினேன். 25 நிமிடங்களுக்கு மேலாக கேள்விகள் கேட்டார்கள். அதற்கும் பதிலளித்தேன்.


கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பி.எப். டிஜிட்டல்மயமாக்கத்தை விரைவுப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள்.  ஆனால் தொழிலாளர்கள் அதன் வேகத்தைப் புரிந்துகொண்டு தாங்களும் அப்டேட் ஆவதில் சுணக்கமாய் இருக்கிறார்கள்.  இந்த இரண்டுக்குமான இடைவெளியில் நிறைய குழப்பங்கள் நடைபெறுகின்றன.  


ஆகையால் தேவையின் பொருட்டு இனி வாரம் ஒரு கட்டுரை எழுதலாம் என இருக்கிறேன்.   நமது உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தால், கூட்டம் எப்படி நடந்தது என்பது குறித்து உங்கள் கருத்துகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தனிப்பட்ட முறையில் கூட தெரிவியுங்கள். 


நன்றி.


- இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ். ஆலோசகர்,

எல்.ஐ.சி. முகவர்

📞 95512 91721


July 21, 2026

இன்றைய கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 100 வரை கலந்துகொண்டார்கள்.

 


45 நிமிடங்களில் கூட்டம் என்பது எதைச் சொல்வது? எதை விடுவது? என்பதே சவாலாக இருக்கிறது.


இருப்பினும் துவக்க நிலையில் உள்ளவர்களை மனதில் வைத்து எடுத்தேன்.    இரண்டு விசயங்களில் Demo யும் காட்ட முடிந்தது.  


ஆகையால் நமது குழுவில் கலந்துகொண்டவர்கள் யாராவது பேசியது குறித்து கருத்து சொன்னால் நல்லது.


இதைக் கூட்ட ஏற்பாட்டாளர் திரு. இராஜசேகரன் அவர்களிடம் கேட்டால்,  குறைவான நேரத்தில் வகுப்பாக எடுக்கமுடியாது தான்.  ஆனால் ஒரு Spark தருகிறோம் என்கிறார்.


இன்றைய கூட்டத்தின் பிபிடியை பகிர்கிறேன்.  


ஏதேனும் சந்தேகம் இருந்தால் அழையுங்கள்.


நன்றி.


- இரா. முனியசாமி


****

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களின் சில கருத்துகள். அவர்களுக்கு நன்றி.