> குருத்து: June 2010

June 2, 2010

'ஜென்டில்மேன்' நர்சிம்மும்! ஆதரவு தரும் 'கண்ணியவான்களும்!'



பதிவர் சந்தனமுல்லையை நர்சிம் என்ற பதிவர் தன் எழுத்துக்களால் குதறியிருக்கிறான் என்பதை வினவின் மூலம் 'பூக்காரி' படித்து அதிர்ந்தேன். அதைவிட அதிர்ச்சியாக இருக்கிறது. "அது தான் மன்னிப்பு கேட்டுட்டாருல்ல! பிரச்சனையை இத்தோடு முடிச்சுக்கலாம்" என சில நர்சிமை ஆதரிக்கும் 'கண்ணியவான்கள்' கிளம்பிவிட்டார்கள்

"பாருங்க! இவ்வளவு நாளும் நர்சிம் ஒரு ஜென்டில்மேன். கோவத்தில இப்படி எழுதிட்டார்" என்கிறார்கள். ஒருவனின் அறத்தன்மை, பண்பு என்பது நெருக்கடியில் தான் வெளிப்படும். 'ஜென்டில்மேனின்' பச்சையான ஆணாதிக்க, பார்ப்பனிய குணம் இந்த விசயத்தில் வெளிப்பட்டிருக்கிறது.

தொடர்ச்சியாய்... பல பதிவர்கள் நர்சிமை கண்டித்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்கவாதிகள் 'ஜென்டில்மேன்' நர்சிம்மை ஆதரித்து எழுதி கொண்டிருக்கிறார்கள். இவர்களோடு சுகுணா திவாகரும்.. 'அரிய உண்மையை' கண்டுபிடித்ததை போல துடிக்கிறார். இதுவெல்லாம், நர்சிம்மின் பொறுக்கித்தனத்தை வலுவிழக்க செய்யும் வேலை.

ஒரு பதிவர் என்ற அடிப்படையில் தாமதமாய் சொன்னாலும், எனது நிலையை தெரிவிக்கத்தான் இந்த பதிவு.

சக பதிவர்களுக்கு வேண்டுகோள்!

பார்ப்பனிய ஆணாதிக்க மொழியில் எழுதிய நர்சிம்மை வன்மையாக கண்டியுங்கள். ஆதரவாளிப்பவர்களையும் தனிமைப்படுத்துங்கள். பிரச்சனையை மடைமாற்றுபவர்களையும் கண்டியுங்கள்!

பார்ப்பனீயத்திற்கும், ஆணாதிக்க பொறுக்கித்தனத்திற்கும் எதிராக போராடும் வினவுக்கு தோள் கொடுங்கள் ஆதரவு தாருங்கள்.

பெண்பதிவர்களுக்கு ஆதரவு தாருங்கள்.