இன்று ஒரு காதல் திருமணம். அலுவல் ரீதியான நண்பர் அவர். மூன்று வருடங்களாக காதலித்தும், போராடியும் இருவீட்டிலும் சம்மதிக்க வைத்தார்கள். இருவரும் வசதியான குடும்பத்து ஆட்கள் எல்லாம் இல்லை. லோயர் மிடில் கிளாஸ் தான். வயது இருவருக்கும் 27 தாண்டாது. இப்பொழுது தான் சம்பாதிக்க துவங்கியிருக்கிறார்கள். இருவர் வீட்டிலும் இவர்கள் தான் ஒரே பிள்ளை. அதனால், கடனெல்லாம் வாங்கி, தடபுடலாக திருமணம் நடந்தது. 1000 பத்திரிக்கை ரூ. 15000 ஆனதாம். மொத்த பட்ஜெட் 5 லட்சத்திற்கும் மேல்! என்றார். இன்னும் இரண்டு, மூன்று ஆண்டுகள் கடனை கட்டுவதில் தான் இவர்களின் வாழ்க்கை நகரும்.
நிறைய காதல் திருமணங்களை தொழில் நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் மதுரை பெண் வழக்கறிஞர் ஒருவர் நடத்தி வைப்பார். அவர் அடிக்கடி சொல்வார். "காதலர்கள் அவர்களின் நண்பர்கள் மட்டும் வந்தால், அந்த திருமணம் சடங்கு, சம்பிராதயங்கள், வரதட்சணை, மொய் இன்றி எளிமையாக நடக்கும். ஒருவர் வீட்டில் சம்மதித்து பெற்றோர் வந்துவிட்டார்கள் என்றால் கூட திருமணத்தில் எல்லா கோளாறுகளையும் கொண்டுவந்துவிடுவார்கள். என்னைப் பொறுத்தவரையில் கல்யாணம் முடியும்வரையில் பெற்றோர்கள் வராமல் இருப்பது நல்லது என்பார். :)"
சரிதானே! :)

2 பின்னூட்டங்கள்:
சரிதான். திருமணம் என்றாலே அது அவர்கள் ஆட்சிதான்.
பெற்றோர் சம்மதத்தோடு நடப்பது நல்லதுதான். மற்றபடி செலவு எப்படி சுருக்குவது என்பது செலவு செய்பவரின் பொறுப்பு
Post a Comment