சமீபத்தில் ‘வலி’
என்றொரு அருமையானதொரு குறும்படம் பார்த்தேன்.
ஒரு உணவகம். ஒரு காபி ஆர்டர் பண்ணி திருநங்கை காத்திருக்கிறார். அடுத்தடுத்து அங்கு வரும் ஆண், பெண், காதலர்கள்
என எல்லோரும் அவர் அருகே அமர்வதை தவிர்க்கின்றனர். சக மனிதர்களின் புறக்கணிப்பு தந்த
வலியால் மனம் உடைந்து அழுகிறார். தேவதை போல வரும் ஒரு பெண் குழந்தை, அவரை சக மனுசியாக
பார்த்து சிநேகத்துடன் நடந்துகொள்கிறாள். நெகிழ்ந்து, கண்ணீர் வருவதுடன் படம் முடிகிறது!
படத்தின் இறுதிக்காட்சியில்
நானும் அழுதேன். நம்மை போன்ற சக மனுசியான திருநங்கைகளை வீடும், சமூகமும் புறக்கணித்தால்
அவர்கள் என்னதான் செய்வார்கள்? சம காலங்களில் திருநங்கை குறித்த நல்லவிதமான புரிதல்கள்
ஏற்பட்டு வருவதை பார்க்கிறேன். இந்த படமும் அதற்கு உதவி செய்திருக்கிறது.
படத்தில் திருநங்கையாக
நடித்தவர் பிரதீப். எங்கள் நண்பர்கள் குழாமில் அவரும் ஒருவர். ஏற்றுக்கொண்ட பாத்திரத்தின்
உணர்வுகளை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார்.
படத்தின் இயக்குநர் விக்டரை சந்தித்த பொழுது, “இது ஒரு உண்மைக்கதை. ஒரு உணவகத்தில், நகர்ந்து போனவர்களில் நானும் ஒருவன்.
என் செய்கையின் நெருடலில் தான் இந்த படத்தை எடுத்தேன்” என்றார்.
படத்திற்கான சுட்டிக் கீழே!
https://www.youtube.com/watch?v=6WNPf5I6I_w
2 பின்னூட்டங்கள்:
படத்திற்கான சுட்டியை தந்தமைக்கு நன்றி!
வலிமையான பகிர்வு ...
Post a Comment