காரில்
பயணிக்கும் பொழுது, செல்பேசியில் கவனம் கொண்டு ஸ்கூட்டியில் வரும் பெண்ணை இடித்துவிடுகிறான். அவள் இறந்தும்விடுகிறாள்.
என்ன
செய்திருக்க வேண்டும்? அவனை விரட்டி விரட்டி பயமுறுத்தியிருக்கவேண்டும். கொலை செய்திருக்கவேண்டும். ஆனால், அதை செய்யாமல், அவனுக்கு பார்த்து, பார்த்து
நல்லது செய்கிறாள்.
குற்றம், தண்டனை என்றே பழக்கப்பட்டு விட்ட நமக்கு, இந்த பிசாசை புரிந்துகொள்ளமுடியவில்லை. ஏன்? ஏன்? என பலவகைகளில் சிந்தித்து பார்க்கிறேன். இளவயது பையன், இளவயது பிசாசு என்பதால், பருவக்கோளாறாக இருக்ககூடும் என சமாதானம் கூட சொல்லிப்பார்க்கிறேன்.
அன்பும், பெருங்கருணையும் கொண்ட மிஷ்கினின் பிசாசு பழகிய இரண்டு மணிநேரத்திலிருந்து, கடந்த ஒருவாரமாக என்னை ஆட்கொண்டுவிட்டாள்.
1 பின்னூட்டங்கள்:
நான் இன்னும் “பிசாசை” பார்க்கவில்லை..பார்ப்பதற்கு யோசனை இல்லை.. ஒரு நல்ல நாளில் எங்க வீட்டு தொலைக்காட்சியில் வராமலா போயய்விடும்.. அப்போது பார்த்துக் கேட்டுக் கொள்வேன் ஏன்? தண்டிக்கவில்லை என்று...........
Post a Comment