பாரிஸ். பள்ளி
செல்லும் வழியில், ஒரு கம்பத்தில் சிக்கித் தவிக்கிறது ஒரு அழகான சிவப்பு பலூன். காப்பாற்றுகிறான்.
பலூனோடு பேருந்தில்
ஏற அனுமதி மறுக்கிறார்கள். பலூனை கைவிட மனசே
இல்லாமல், ஓடியே பள்ளியை அடைகிறான். மழையிலிருந்தும்,
பனியிலிருந்தும் பாதுகாத்து வீடு வந்துசேர்கிறான். அம்மாவும் வீட்டில் அனுமதிக்க மறுத்து, பலூனை வெளியே
துரத்தி விடுகிறார்.
அந்த நிமிடத்திலிருந்து
பலூனுக்கு ’உயிர்’ வந்துவிடுகிறது. மறுநாள்
பள்ளி கிளம்பும் பொழுது பலூனும் பள்ளித் தோழனை போல சேர்ந்து கிளம்புகிறது. பேருந்தில் பையன் போகும் பொழுது, ஒரு பறவையை போல
பின்தொடர்கிறது. போகிற வழியில் ஒரு சிறுமி
நீலவண்ண பலூனோடு செல்கிறாள். சிறிது நேரம்
இரண்டு பலூன்களும் விளையாடுகிறது. பிறகு பையனோடு கிளம்புகிறது.
பையனோடு வகுப்பறைக்கும்
வந்துவிடுகிறது. மாணவர்கள் குதூகலிக்கிறார்கள்.
நம் பள்ளி முதல்வர்கள் எல்லாம் மிகவும் கண்டிப்பானவர்கள் அல்லவா! அந்த பையனை தனியாக ஒரு அறையில் பூட்டுகிறார். பலூன் கோபம் கொண்டு, முதல்வரை துரத்தி துரத்தி தொந்தரவு
செய்கிறது. வேறு வழியில்லாமல் பையனை விடுவிக்கிறார்.
மகிழ்ச்சியுடன்
இருவரும் வீடு வரும் வழியில், பகுதியில் வாழும் குறும்பு சிறுவர்கள் சிவப்பு பலூனை
சிறைபிடிக்க விடாது துரத்துகிறார்கள். இறுதியில்
பலூனை பிடித்து, உடைத்தும் விடுகிறார்கள்.
மெல்ல மெல்ல மடியும் பொழுது உற்ற நண்பன் இறப்பது போல மிகவும் வருந்துகிறோம்.
இதைக் கேள்விப்பட்டதும்,
அவனுக்கு ஆறுதல் சொல்ல பாரிஸில் உள்ள எல்லா பலூன்களும் கூட்டமாக பறந்து வந்து அந்த
பையனிடம் சேர்கின்றன. குதூகலமடைகின்றான். அவனை அப்படியே அலேக்காக தூக்கிக்கொண்டு வானத்தில்
உற்சாகமாய் பறக்கின்றன.
***
1956ம் ஆண்டு. பிரெஞ்சு மொழி. 35 நிமிடம்.
ஆஸ்கார் வென்றிருக்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் பார்க்கவேண்டிய
படம். யூ டியூப்பில் கிடைக்கிறது.
படத்தை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.
படத்தை அறிமுகப்படுத்திய எழுத்தாளர் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.