நல்ல தமிழ்படங்கள்
பார்த்த நேரம் போக, வேற்றுமொழி படங்களும் பார்ப்பது வழக்கம்! பிற மொழிப்படங்களின் தரத்தை
உரசிப் பார்க்க சமீப காலங்களில் IMDB உதவுகிறது.
10க்கு 7 மார்க் வாங்கினால், மினிமம் கேரண்டி கிடைக்கிறது. சில சமயங்களில் சொதப்பவும்
செய்கிறது!
அப்படித்தான் நானி
நடத்த தெலுங்கு படமான Bhale Bhale Magadivoy (You are a strange man) பார்த்தேன். நகைச்சுவை காதல் படம் என வகைப்படுத்தலாம்.
சிறு வயதிலிருந்தே
நாயகனுக்கு மறதி ஒரு பெரும் பிரச்சனை. ஒரு
வேலையில் ஈடுபடும் பொழுது, வேறு ஒரு வேலை குறுக்கிட்டால் அதிலேயே மூழ்கிப்போவது! உதாரணத்துக்கு உங்களுக்கும் சேர்த்து ஒரு படத்துக்கு
டிக்கெட் எடுத்துவிட்டு, வேறு வேலையில் மூழ்கி
வராமல் போனால், திரையரங்கு வாயிலில் காத்திருக்கும் உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்?
திருமணம் என வரும்
பொழுது சிக்கலாகிறது. அவமானப்படுத்தப்படுகிறான்.
இதற்கிடையில் காதலில் விழுகிறான். காதலியிடம் தனது பிரச்சனையை சொல்லாமல், மறைத்து
தான் சொதப்பும் பொழுதெல்லாம் கதை சொல்லி தப்பித்து, இறுதியில் மாட்டி, அவனுடைய இயல்பான
நல்ல குணத்தால் காதல் கல்யாணத்தில் முடிகிறது!
கொஞ்சம் மிகையாக
தெரிந்தாலும், கற்பனையான பிரச்சனையல்ல! ஒரு
நேரத்தில் ஒரு வேலை செய்கிற நபர்களை சந்தித்திருக்கிறேன். இன்னொரு வேலை வந்தால், அதையும்
திட்டமிட்டு நகர்த்தாமல், இரண்டு வேலைகளையும் குழப்பிக்கொள்கிற ஆட்கள் இருக்கிறார்கள்.
மருத்துவரீதியாக இது என்ன பிரச்சனை? எப்படி கையாள்வது என்பதை கொஞ்சம் விளக்கியிருக்கலாம்.
எதுவும் இல்லை! நகர்த்தும் காட்சிகளில் கூட
அத்தனை புதுமையில்லை.
நீங்கள் இது மாதிரி
ஆட்களை பார்த்திருக்கிறீர்களா? தெலுங்கில் நன்றாக ஓடிய படம் என்கிறார்கள்.
0 பின்னூட்டங்கள்:
Post a Comment