வருங்கால வைப்பு நிதி திட்டம்: நிறுவனமும் தொழிலாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் - அத்தியாயம் 11
வருங்கால வைப்பு நிதி (EPF) : ஓய்வு நிதியில் கவனம் மிக அவசியம்
வருங்கால
வைப்பு நிதியில் ஒரு பணியாளர் ஒரே நிறுவனத்திலோ, அல்லது சில நிறுவனங்களிலோ தொடர்ச்சியாக
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தால் (குறிப்பாக 9.5 ஆண்டுகளுக்கும் மேலாக) தான்
ஓய்வு நிதி (Pension) பெறுவதற்கான தகுதியை பெற முடியும்.
சமீபத்தில் இரண்டு அனுபவம்
ஒரு பணியாளர்
ஒரு நிறுவனத்தில் ஒருவர் 1996 ஆண்டிலிருந்து 2006 வரை பத்து ஆண்டுகள் வேலை செய்திருக்கிறார். அந்த காலத்தில் அவருக்கு பி.எப். பிடிக்கப்பட்டிருக்கிறது.
வேலை செய்த காலத்தில் பி.எப் பணத்தைப் பெற்றுக்கொண்டு, பி.எப். ஓய்வுநிதிக்கான நிதியை
பெற்றுக்கொள்ளாமல், பாதுகாப்பாக ஒரு சான்றிதழை (Scheme Certificate) பெற்றுக்கொண்டுவிட்டார். அதற்கு பிறகு 2010 துவங்கி 2013 வரை மூன்று ஆண்டுகள்
ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருக்கிறார். அங்கும் பி.எப். தொகை அவருக்காக செலுத்தப்பட்டுள்ளது.
பிறகு 58
வயதை கடந்துவிட்டார். கடைசியாய் வேலைப் பார்த்த
மூன்று ஆண்டுகளுக்கான பி.எப், பி.எப் ஓய்வு நிதி என இரண்டுக்கும் விண்ணப்பம் செய்து
பணத்தைப் பெற்றுக்கொண்டுவிட்டார். தான் ஏற்கனவே
பத்து ஆண்டுகளுக்கு ஓய்வு நிதிக்கான சான்றிதழ் வாங்கி வைத்திருந்த விசயத்தை சுத்தமாக
மறந்துவிட்டார். இப்பொழுது ஏதோ ஒன்றை தேடும் பொழுது, அந்த பி.எப். சான்றிதழ் கிடைத்ததை என்னிடம் கொண்டு
வந்தார்கள்.
அவர் அந்த
சான்றிதழ்படியே பத்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை செய்த அடிப்படையில் அவர் ஓய்வு நிதிக்கு விண்ணப்பிக்கமுடியும். ஆனால், ஏற்கனவே விண்ணபித்து பெற்ற மூன்று ஆண்டு
காலத்தையும் இணைத்து விண்ணப்பித்து இருந்தால், அவருக்கு பணிக்காலமும் கூடியிருக்கும்.
ஓய்வுநிதியும் அதிகரித்து கிடைத்திருக்கும்.
பி.எப் ஓய்வூதியத்தை. எப்படி கணக்கிடுகிறது? என்பதை புரிந்துகொண்டால்
நமக்கு நன்றாக புரியும்.
தொழிலாளர்கள்
ஓய்வூதியத்திற்கான கணக்கு
Formula
= Pensionable Salary * Employee Service
70
ஒரு தொழிலாளி
அவருடைய வாழ்நாளில் எத்தனை ஆண்டுகளுக்கு பி.எப். பிடித்தம் செய்து பி.எப் கணக்கில்
செலுத்தினார்கள் என்பது தான் அவருடைய ஓவ்யூதிய
பணிக்காலம் (Pensionable Salary) ஆகும்.
Pensionable
Salary என்பது ஒரு தொழிலாளி அவருடைய சம்பளத்தில் அடிப்படைச் சம்பளம் + பஞ்சப்படியைக்
கொண்டு கணக்கிட்டு, அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு ஐந்து ஆண்டுகள் அவருடைய கணக்கில்
எவ்வளவு செலுத்தினார்கள் என்பதை கணக்கிட்டு,
60 என்பதால் பெருக்கி, 60ஆல் வகுத்தால் கிடைத்துவிடும்.
இது தவிர
ஏற்கனவே நாம் குறிப்பிட்டது போல ஓய்வூதியம் பெற ஒரு தொழிலாளிக்கு குறைந்தப்பட்சம் 10 ஆண்டுகள் பி.எப். பிடித்தம்
செய்து செலுத்தியிருக்கவேண்டும். அதே போல அதிகப்பட்சம்
35 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தால் கூட 35 ஆண்டுகள் தான் கணக்கிடப்படும். இதில் குறிப்பாக
20 ஆண்டுகளுக்கு மேல் வேலை செய்தால் கூடுதலாக (Weightage Bonus) இரண்டு ஆண்டுகள் அதிகம்
கணக்கிட்டு தருகிறார்கள்.
உதாரணத்திற்கு :
ஒரு தொழிலாளியின் வேலை செய்த காலம் = 15 ஆண்டுகள்.
ஓய்வூதிய
சம்பளம் என்பது = 15000 * 60 = 15000
60
இதை வைத்துக்கணக்கிட்டால்
ஓய்வூதியம்
: 15 * 15000 = ரூ. 3214
70
மேலே குறிப்பிட்ட
தொழிலாளி கடைசியாய் வேலைப் பார்த்த இடத்தில், பிடித்ததை பி.எப் நிதியை விட கடைசியாய்
வேலை செய்த காலத்தில் பி.எப் ஓய்வு ஊதிய நிதி
அதிகமாக பிடித்திருப்பார்கள். இரண்டையும் இணைத்து
வாங்கியிருந்தால், அவருக்கு பணிக்காலமும் அதிகமாகியிருக்கும். ஓய்வு நிதியை இப்பொழுது வாங்குவதை விட அதிகமாக
கிடைத்திருக்கும். இப்பொழுது அவருக்கு குறைவாகவே
ஓய்வூதியம் கிடைக்கும்.
இரண்டாவது அனுபவம்
நவம்பர் மாத
”தொழில் உலகம்” இதழைப் படித்த கட்டுரையைப் படித்துவிட்டு, ஒரு தொழிலாளி
திருவாரூரில் இருந்து அழைத்தார். மேலே சொன்னப் பிரச்சனை தான். ஆனால் இவர் எதிர்கொண்ட
சிக்கல் கொஞ்சம் வித்தியாசமானது. தொழிலாளி
இப்பொழுது 58 வயதை கடந்துவிட்டார்.
பி.எப். திட்டத்தில்
இருந்த முதல் நிறுவனத்தில் 8 வருடங்களும், இரண்டாவது நிறுவனத்தில் இரண்டாவது வருடங்களும்
வேலை செய்திருக்கிறார். கடைசியாய் வேலை செய்த இரண்டு வருடம் வேலை செய்ததற்கு விண்ணப்பித்து ஓய்வு
ஊதிய நிதியை வாங்கிக்கொண்டுவிட்டார்.
இரண்டு வருடங்களுக்கான
நிதியை பெற்றுவிட்டதால், இப்பொழுது அவருக்கான பணிக்காலம் என்பது 8 ஆண்டுகள் தான் மீதம்
இருக்கின்றன. வயதும் 58ஐ கடந்துவிட்டார். ஆகையால்
அவருக்கு ஓய்வுநிதி கிடைக்காது. தான் வாங்கிய
அந்த இரண்டு ஆண்டு பணத்தை திரும்ப செலுத்திவிடுகிறேன். எனக்கு ஓய்வு நிதி கிடைக்குமா
என கேட்டார். அதற்கு பி.எப். விதிகள் அனுமதிப்பதில்லை. ஆகையால் வாய்ப்பில்லை என தெரிவித்துவிட்டேன்.
இந்தியாவில்
வருங்கால வைப்புநிதி திட்டத்தில் பல லட்சம் தொழிலாளர்கள் இருந்தாலும், பலருக்கும் இந்தத் திட்டத்தின் அடிப்படை அம்சங்கள் கூட தெரியாமல்
இருப்பது பல இழப்புகளை உண்டாக்குகிறது. ஓய்வு நிதி என்பது ஒருவருக்கு மிக முக்கியமானது. பல துறைகளிலும் பலருக்கும் ஓய்வுநிதி இல்லாத காலத்தில் விவரம் தெரியாத
அறியாமையால், ஓய்வு நிதியை இழப்பது என்பது பெரியது.
ஆகையால் தொழிலாளர்கள்
பி.எப். குறித்த அடிப்படை விவரங்களைத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். தெரியவில்லை
என்றால், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லையெனில்
தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்.
இந்தப் பிரச்சனை என்பது எங்கு உருவாகிறது?
இப்பொழுது இந்தப் பிரச்சனையை சரிசெய்ய பி.எப். நிர்வாகம் என்ன விதமான நடவடிக்கைகளை
எடுத்துள்ளது?
முன்பு ஒரு
பணியாளர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்தால்,
அவருக்கென தனி கணக்கு எண்ணை ஒதுக்குவார்கள். அந்த எண்ணில் தான் அந்த தொழிலாளிக்கான
பணத்தைச் செலுத்துவார்கள். அடுத்த நிறுவனத்திற்கு
அந்த பணியாளர் மாறினால், அங்கும் அவருக்கு ஒரு கணக்கு எண்ணைத் தருவார்கள்
இப்படி ஒவ்வொரு
நிறுவனத்திலும் தனித்தனியாக கொடுக்கப்படும் எண்களை அந்த தொழிலாளர் மெனக்கெட்டு அதற்குரிய
விண்ணப்பம் கொடுத்தால் தான் இணைக்கமுடியும்.
இல்லையெனில் தனித்தனியாகவே நிற்கும்.
இப்படி இணைக்கப்படாத கணக்குகள் அதிகம். அதனால் தொழிலாளர்கள் இழந்ததும் அதிகம்.
இந்தப் பிரச்சனையை
சரி செய்ய, பி.எப். நிறுவனத்திற்கு முதலில் தேவைப்பட்டது டிஜிட்டலாக சேவையை இணைப்பது
என்பதை துவங்கியது. ஒரு தளத்தை உருவாக்கி, தளத்தின் வழியாக மாதம் மாதம் நிறுவனத்திடமிருந்து
தகவல்களை பெறத்துவங்கினார்கள். ஒவ்வொரு தொழிலாளிக்கும் UAN (Universal Account
Number) என அடையாள எண்ணை உருவாக்கினார்கள்.
ஒரு தொழிலாளிக்கு ஒரு எண்ணை உருவாக்கிவிட்டால், அதற்கு பிறகு எந்த நிறுவனத்தில் வேலை
செய்தாலும் அதே எண்ணை பயன்படுத்தவேண்டும் என்ற முறையை கடைப்பிடிக்க வலியுறுத்தினார்கள்.
இதே சமகாலத்தில்
தான் அரசு ஆதாரை அறிமுகப்படுத்தினார்கள். எந்த
துறை ஆதாரை பிடித்துக்கொண்டதோ இல்லையோ, பி.எப். நிறுவனம் ஆதாரை இறுகப் பிடித்துக்கொண்டது.
முன்பு போல ஒரு தொழிலாளிக்கு ஒவ்வொரு நிறுவனத்திலும் ஒரு எண் தரப்பட்டாலும், UANயுடன்,
ஆதார் எண்ணை இணைத்து தொடர்ச்சியைக் கொடுக்கமுடிந்தது.
இப்பொழுது
புதிதாக ஒரு தொழிலாளி வேலைக்கு சேரும் பொழுது, அவருக்கென UAN என்ற அடையாள எண்ணை, ஆதாரை
அடிப்படையாக வைத்து தான் உருவாக்கமுடியும்.
அந்த சம்பந்தப்பட்ட தொழிலாளி தன்னுடைய UAN தனக்கு தெரியாது என சொன்னாலும், குறிப்பிட்ட
ஆதார் எண்ணை தளத்தில் பதிவிட்டதும், அவருக்கு ஏற்கனவே UAN ஒதுக்கப்பட்டிருந்தால், காண்பித்துவிடுகிறது. அதைப் பயன்படுத்தி தொழிலாளியின் பி.எப் நிதிக்கும்,
ஓய்வு நிதிக்கும் தொடர்ச்சி கொடுக்கமுடிகிறது.
ஆதாரை இறுகப்
பிடித்துக்கொண்டது என சொன்னேன் அல்லவா! அதில் நேர்மறையான சில அம்சங்கள் இருந்தாலும்,
சில எதிர்மறையான அம்சங்களும் இருக்கின்றன. ஒரு தொழிலாளிக்கான ஆதாரில் ஏதேனும் கோளாறு இருந்தால்,
இப்பொழுது பி.எப். திட்டத்திலேயே இணைய முடியாது என்ற சிக்கலில் வந்து இருக்கிறது. அந்த தொழிலாளருடைய ஆதாரில் என்ன சிக்கல் உள்ளது என்பதை
பி.எப். தளம் குறிப்பாக சொல்லவும் மறுக்கிறது. ஆகையால் பி.எப். திட்டத்தில் ஒரு பணியாளரை இணைவதே
சிக்கலாகி நிற்கிறது. அவருடைய ஆதாரை சரி செய்து
கொண்டு வாருங்கள் என சொன்னால், சில தொழிலாளர்கள் தங்களுக்கு பி.எப் பிடிக்கவேண்டாம்
என நினைப்பவர்கள் தவறை சரி செய்யாமல் இழுத்தடிக்கிறார்கள். இதனால் நிறுவனத்திற்கு தான் சிக்கல் ஏற்படுகிறது.
பி.எப். தளம் மிகவும் மெல்ல இயங்குவது
ஏன்?
இலட்சகணக்கான
நிறுவனங்களின், பல கோடி தொழிலாளர்களின் பி.எப் கணக்கு வழக்குகளை பி.எப். தளத்தின் வழியாக
கையாண்டு வருகிறார்கள். ஆனால் நிறுவனங்களுக்கான தளமும், தொழிலாளர்களுக்கான தளமும்
மிகவும் மெல்ல இயங்குகிறது. பல சமயங்களில் ஸ்தம்பித்து எந்த வேலையையும் செய்யவிடாமல்
செய்துவிடுகிறது. ஆகையால், பி.எப். தொழிலாளர்களின்
நேரமும் வீணாகுகிறது. இதனால் இலக்குகளை நிறைவேற்றமுடியாமல் பி.எப். ஊழியர்கள் விருப்ப
ஓய்வில் செல்கின்றனர். மருத்துவ விடுப்பில் செல்கிறார்கள். நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் நேரமும்,
கோடிக்கணக்கான தொழிலாளர்களின் நேரமும் வீணாகிவருகிறது.
இதற்கான
காரணம் என்னவென்று தேடியபொழுது….
2010க்கு முன்பு வரை ‘பாக்ஸ் ப்ரோ’ மென்பொருள் (சாப்ட்வேர்)
பயன்படுத்தபட்டு வந்தது. 2011 முதல், ‘ஆரக்கிள் மற்றும் டெவலப்பரால்’
தயாரிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அப்போதே, ‘எச்.பி.- திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’ எனும்
வன்பொருளும், அதனுடன் சேர்ந்த ‘எச்.பி.’ சர்வரும் புதிதாக பயன்பாட்டுக்கு கொண்டு
வரப்பட்டது. தகவல் பரிமாற்றத்திற்காக, அன்றைய தேதியில் புதிதாக சந்தைக்கு வந்த,
100 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்-5 நெட்வொர்க்’ வடங்களும் பயன்பாட்டுக்கு
கொண்டுவரப்பட்டன.
தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுரைப்படி வன்பொருளை (ஹார்ட்வேர்)
பொருத்தவரை ‘எச்.பி., நிறுவனத்தின் திங்க் கிளைண்ட்’ வன்பொருளும், சர்வரை
பொருத்தவரை ‘ஐபிஎம்’ நிறுவன சர்வரும், செயல்பாட்டில் சிறப்பாக இருக்கும்
எனக்கூறப்பட்ட நிலையில் ஐபிஎம் சர்வருக்கு பதில், எச்பி சர்வர் பயன்பாட்டுக்கு
கொண்டுவரப்பட்டதற்கு அப்போதே ஆட்சேபனை எழுந்தது. எனினும், எச்பி சர்வர்
செயல்பாட்டில் ஓரளவு சிறப்பாக இருந்த நிலையில், 2016ல் அந்த வன்பொருளின்
பயன்பாட்டுகாலம் (வாரண்டி) முடிவுற்றதாக, ‘எச்.பி’ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக
அறிவித்தது
உலகளவில் வன்பொருள் ஒன்றின் வாரண்டி காலம் முடிந்ததாக
அறிவிக்கப்பட்டால், அதற்கடுத்த நிலையில் உள்ள நவீன வன்பொருளை பயன்படுத்த
வேண்டுமென்பதே விதியாக உள்ள நிலையில், 8 ஆண்டுகளாகியும் 2011ல்
அறிமுகப்படுத்தப்பட்டு காலாவதியான பழைய வன்பொருள்களாலேயே, வருங்கால வைப்பு நிதி
அலுவலகங்கள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் நாடு முழுவதும், 20 சதவீதம் வைப்பு
நிதி அலுவலகங்கள் காலவதியான ‘எச்.பி. – திங்க் கிளைண்ட் டி-5630 டபிள்யூ’
வன்பொருள்களாலேயே இயங்குகின்றன.
தொழில்நுட்ப வளர்ச்சியால் வன்பொருளை பொருத்தவரை, ‘எச்.பி.- திங்க்
கிளைண்ட் டி-740’ வரையும், தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்படும் நெட்வொர்க்
வடங்கள், 1000 எம்பிபிஎஸ் வேகம் கொண்ட ‘கேட்- 8 மற்றும் 9’ வடங்கள் வரையும்,
இன்றைய சந்தைக்கு வந்துள்ளன. இவ்வாறு வந்துள்ள வன் மற்றும் மென் பொருள்களை
பயன்படுத்தி, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படாததால் தான் தளமும்
மிக மிக மெதுவாக இயங்குகிறது. ஆகையால், இதற்கு பொறுப்பான பி.எப். நிர்வாகமும்,
மத்திய அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், தொழிலாளர்கள் சார்பாக
கேட்டுக்கொள்வோம்.
இன்னும்
வளரும்.
வணக்கங்களுடன்,
இரா.
முனியசாமி,
ஜி.எஸ்.டி,
பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,
GSTPS
உறுப்பினர்
9551291721
குறிப்பு : ”தொழில் உலகம்” டிசம்பர் இதழில் இந்த கட்டுரை வெளிவந்தது. இந்த இதழ் அரசு நூலகங்கள் அனைத்திலும் கிடைக்கிறது என்பது முக்கிய செய்தி.