ஓலா, ஊபர் ஆகியவை பல் போன நிறுவனங்களாகி விட்டன. அவர்கள் தயவில் வண்டி ஓட்டுபவர்கள் இருந்தது போய் வண்டி ஓட்டுபவர்கள் என்ன செய்தாலும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டார்கள். செயலியில் காட்டும் கட்டணம் எல்லாம் சும்மாங்காட்டிக்குத்தான். போன் செய்து இண்டர்வியூவில் வெற்றி பெற்றால்தான் சவாரியே கிடைக்கும். டிரைவர் மீது புகார் சொல்லலாம் என்றால் செயலியில் காட்டும் வாகனமும் வரும் வண்டியின் எண்ணும் வேறு வேறாக இருக்கும். ஒரே ஓட்டுநர் மூன்று நான்கு மொபைல் போன்களை வைத்துக் கொண்டு ஓட்டிக் கொண்டிருக்கிறார். இங்கே இன்னொரு பிரச்னையும் உள்ளது. பெண்கள் அல்லது முதியவர்கள் தனியாக செல்லும்போது இந்த வாகனத்தில்தான் செல்கிறார்கள் என்று செயலி அனுப்பும் செய்தி தவறானதாக இருக்கும். இவை அனைத்தும் ஓலா, ஊபர் நிறுவனங்களுக்குத் தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தங்கள் பங்கு வந்தால் போதும் அவர்களுக்கு.
***
கடந்த சனி, ஞாயிறு தஞ்சையில் இரண்டு நாட்களில் ஆறுமுறை பயணித்தோம். ஆறு ஆட்டோ ஓட்டுநர்களும் சொல்லி வைத்தாற் போல இருந்தார்கள்.
ஒரு கி.மீட்டரோ அல்லது இரண்டு கிமீட்டரோ எல்லாவற்றிக்கும் குறைந்த பட்ச கட்டணம் ரூ. 100 என அவர்களுக்குள் பேசி முடிவு செய்து கறாராக கேட்டு வாங்கிறார்கள்.
ஒரு ஆட்டுநர் அரண்மனையில் இருந்து நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ் 3 கி.மீ. ரயில்வே நிலையத்துக்கு ரூ. 100. அதையும் தாண்டி போக வேண்டியிருப்பதால் ரூ. 150 கேட்டார். அதற்கான தூரம் 400 மீட்டர் தான்.
பிறகு ரூ. 100க்கு வேறு ஒரு ஆட்டோ பிடித்து போய் சேர்ந்தோம்.

விசாரித்த பொழுது ஓலா அங்கு வேலை செய்கிறது. ஒரு குறிப்பிட்ட 2 கிமீ தூரத்திற்கு ரூ. 45 என காட்டியது. அதற்கு வந்த டிரைவர் ஆப்பில் குறைவாக காட்டும் என சொல்லி ரூ. 100 வாங்கிகொண்டார்.
சென்னையில் நட்சத்திரங்கள் இடச் சொல்லி வலியுறுத்தும் ஓலா ஆப், தஞ்சையில் கவனமாய் ஆப் செய்யப்பட்டிருந்தது. 

0 பின்னூட்டங்கள்:
Post a Comment