> குருத்து: April 2026

April 6, 2026

Crime 101 (2026) Crime Thriller


நாயகன் வைரங்களை வியாபாரிகள் நகர்த்தும் பொழுது, அதை ரகசியமாக தெரிந்துகொண்டு, சத்தமின்றி, ரத்தமின்றி கொள்ளையடித்து வருகிறார். ஒருமுறை கொஞ்சம் சொதப்பியதால், மயிரிழையில் தப்பிக்கிறார்.  ஒரு பெண்ணை விரும்புகிறார். இவரின் ரகசிய நடவடிக்கையால், காதலி ஒதுங்குகிறார்.

 

ஒரு போலீசு அதிகாரி  தொடர் கொள்ளைகளில் உள்ள ஒற்றுமையை அறிந்து நாயகனின் இயல்பை சொல்கிறார். ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட கொள்ளை வழக்குகளை நீ உள்ளே புகுந்து குழப்பாதே! என்கிறார் மேலதிகாரி. ஒரு அதிகாரி ஒரு நிகழ்வில் தவறிழைக்க, அதை மறைக்க உதவ மறுக்க, இவர் தற்காலிகமாக வேலை நீக்கம் (Suspend) செய்யப்படுகிறார்.

 

ஒரு காப்பீடு நிறுவனத்தில் வேலை செய்யும் நடுத்தர வயது பெண் ஊழியரை தொடந்து தன் நிறுவனத்தில் தக்க வைப்பதற்காக பார்ட்னராக இணைத்துக்கொள்கிறேன் என சொல்லிக்கொண்டே ஏமாற்றிவருகிறார்கள்.  ஒரு கட்டத்தில் நிர்வாகம் ஏமாற்றுகிறது என உணர்கிறார்.

 

ஒரு பெரிய பணக்காரர் தன்னுடைய  பெரிய நிகழ்வில் நிறைய பணமும், வெளியூரில் இருந்து ரத்தினங்களும் கொண்டு வரப்படுகின்றன. இதில் நாயகன், போலீசு அதிகாரி, இன்சூரன்ஸ் பெண் அதிகாரி என எல்லோரும் ஒன்றிணைகிறார்கள்.  பிறகு என்ன ஆனது என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.

 

***

 


இளம் பருவம் தான் ஏழ்மையில் தொலைத்துவிட்டோம்.  இனி வசதியான வாழ்வு வாழவேண்டும். போலீசிடம் மாட்டிவிடவே கூடாது என நினைக்கும் நாயகன் (Avenger - Thor நாயகன்) Chris Hemsworth,  வேலையிலும் நினைத்த மாதிரி செயல்படவில்லை. மனைவியும் இப்பொழுதும் தன்னுடன் இல்லை என வெறுத்துப் போகிற அதிகாரியாக  (Avenger – Hulk நாயகன்) Mark Alan Ruffalo,  தான் வேலை செய்த நிறுவனம் தன்னை நம்ப வைத்து கழுத்தறுத்துவிட்டது என பொருமும் பாத்திரமாக  (X men – Storm நாயகி) Halle Maria Berry தான் படத்தை தாங்குகிறார்கள்.


மெல்ல மெல்ல படம் நகருகிறது. இடைவேளைக்கு பிறகு கொஞ்சம் வேகமெடுக்கிறது எனலாம்.   காட்சிகளாக நகராமல், பாத்திரங்களின் மனநிலையை நன்றாக காண்பித்திருந்தார்கள்.  நாவலை அடிப்படையாக வைத்து எடுத்ததாக இருக்கலாம்.

 

பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் பாருங்கள்.  உங்களுக்கும் பிடிக்கலாம். பிரைமில் தமிழில் இருக்கிறது.